கொரனாவுக்கு பின் நீண்ட நாட்களுக்கு பின் அதாவது மூன்று வருடங்கள் கழிந்து திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எப்போதும் முன்னெரிச்சைரிக்கையுடன் இருக்கும் நிலையை மீறி தோன்றிவிட்டது. அருகிலுள்ள கிளினிக் கொண்டு சென்றபோது அந்தக் கிளினிக் மருத்துவர்க்கு உடல்நலமில்லாததால் அவர் கிளினிக் வரவில்லை. அடுத்த கிளினிக் கொண்டு சென்றபோது அந்த மருத்துவர் வெளி வேலையாக வெளியே சென்றுவிட்டார். மூன்றாவதாக ஒரு கிளினிக்கில் சேர்க்கப்பட்டு, உடனடியாக உடலின் பின்புற அடிப்பாகத்தில் இரண்டு ஊசிகள் குத்தப்பட்டு, பின் குளுகோஸ் ஏற்றப்பட்டது.
இரண்டு, மூன்று. ஒரு வாரம் கழித்து சிகிச்சை அளித்த மருத்துவர் சொன்னார் உங்களுக்கு டைபாய்டு காய்ச்சல், பி.பி.லோ, சுகர் அதிகமாகிவிட்டது, இருதய அடைப்பு உள்ளது. நான் சொல்லவில்லை லேப்பின் பரிசோதனை முடிவுகள் சொல்கிறது என்று லேப் முடிவுகளை காட்டினார்.
டைபாய்டு காய்ச்சல் குணமாகி, சுகர் குறைக்கபட்டு, பி.பிலோ, தடுக்கப்பட்டதற்கு முப்பதாயிரம் செலவழித்தபின் இருதய அடைப்பு நீக்க ஐம்பதாயிரம் பீஸ் என்று பேரம்பேசி, வீட்டிற்கு வந்து சேர்ந்தாயிற்று..
அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் இவ்வளவு செலவு ஆகியிருக்காதே என்று மருமக்களிடம் கேட்டபோது.. அங்கு சேர்த்தால் பிணமாகத்தான் திரும்ப வேண்டியிறுக்கும் என்று பதிலோடு.. அங்கு சேர்த்தால் உடனிருப்பவர்கள் யார் என்ற கேள்வியும் வந்தது.
சிகிச்சையில் இருந்தபோது சுகர் நோயாளிக்கு உடனிருந்தவர் சொன்னார். காலில் உள்ள புண்ணை சுகமாக்குவதற்க்காக இதுவரை ஐந்து லட்சம் செலவழித்துள்ளதாக சொன்னார். அவரை பார்க்க வந்தவர் ஒருவர் அடுக்காக மாடிகளை கொண்ட தனியார் மருத்துவமனைகள் எல்லாம் உங்களின் நோயை போக்கவா கட்டியெழிப்பி உள்ளார்கள். அது சேவை என்ற பெயரில் காசு பறிக்கதானப்பா..
ஒரு வழியாக நல்ல நிலமைக்கு வந்தவுடன் உண்ணாமல் உடுத்தாமல் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து சிகிச்சைக்காக செலவழித்தவர்களுக்கு கொடுத்துவிட்டு.. சேமிப்பு இல்லாத நிலையில்
எந்த பழக்கமும் இல்லாதவனுக்கு டைபாய்டு சுரம், சுகர், இரத்த அழுத்த குறைவு, இருதய அடைப்பு. . எதை சாப்பிட்டால் பித்தம் குறையும், தொலையும் என்ற ஆழ்ந்த யோசணையில் 2024-ல் 63 ஆண்டு முடிந்து 64 ஆண்டை நோக்கி,
நலம் பெற வேண்டும் நண்பரே...
பதிலளிநீக்குநலம் பெற்றுவிட்டேன் நண்பரே! தங்களின் நலம் விசாரிப்புக்கு நன்றி! நண்பரே!!
நீக்கு