பக்கங்கள்

ஈழத்தாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழத்தாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய் 19 2013

ஒரு குட்டியையும் ஈனாத தாயி...! ஈழத்தாயாக முடியுமா.....???

படம். வினவு











குடிகாரன் எப்பவுமே  உண்மையைத்தான் பேசுவான் என்று அதி காலத்திலிருந்து இந்தக் காலத்தில் தொடங்கி வருங்கால வரைக்கும் ஊதிப் பெருக்கி சொல்லப்படும் ஒரு பொய்யுரை...

 அந்தப் பொய்யுரைப்படி இரண்டு தமிழ்குடிமகன்கள் எழுப்பிய கேள்விதான் தலைப்பில் இடப்பட்டுள்ளது.

முதல்குடிமகன்  பேசியது. “மாடு குட்டி போடுமா...?? முட்டை  போடுமா...??

“ குட்டிதான் போடும்” இரண்டாம் குடிமகன் சொன்னது.

“மாடு குட்டியா போடும், சரி....ஆட்டுக்குட்டியா? பூனைக்குட்டியா..........,

”மாடு எப்படி ஆட்டுக்குட்டி போடும்,...” இரண்டாவது குடிமகன்.

“ மாடு குட்டி போடாது தளீவா.....!! கன்றுதான் ஈனும்.”

“ஆமாமா,!!,கன்றுதான் ஈனும்.............”!!இரண்டாவது குடிமகன்.

கன்று, மாட்ட எப்படி கூப்பிடும்னா............“ம்ம்மா..........ம்ம்மா ன்னுதான.......

குட்டி எப்படி ஆட்ட  அழைக்கும்....?????

“ம்ம்மே...........ம்......ம்.....மேன்னு  ” இரண்டாம குடிமகன்.

குடிமகனாக இல்லாதவர் இவர்களைப் பார்த்து சிரித்தார்.

என்னப்பு.............எங்கள பாத்து சிரிப்பு............ வருதா...............சிரி...சிரி.....

சிறிது இடைவேளைக்குப் பின் முதல் குடிமகன் பேச்சை தொடர்ந்தார்.

“மாடு கன்று ஈன்றது”....“ஆடு குட்டி போட்டது சரியாப்பு”.........கேட்டார்.

குடிமகன் இல்லாதவர்,தலையை ஆட்டினார்.

சரி,“மெயின் பாய்ண்டுக்கு வர்றேன்ப்பு.., நம்ம நாட்டிலே,“ ஒரு குட்டியையும் ஈனாத தாயி...!!!  ஈழத்தாயாக முடியுமா ????”.............. சொல்லு...........

எங்கள பாத்து சிரிச்சலே........ இப்ப சொல்லு ,இரண்டாம் குடிமகன்.

குடிமகனா இல்லாதவர்..உடனே, பதில் சொன்னார்.

“ மூச்சுக்கு முன்னூறு தடவை.........அம்மா........அம்மா...... அம்மா...என்று கூப்பாடு போடும் மாடுகளிடமும், ஒவ்வொரு  வாய் அசைவுக்கும்

“ தாயே.......... ஈழத்தாயே.........என .ஒப்பாரி.வைக்கும் வெள்ளாடு, செம்பறியாட்டு கூட்டத்திடம்தான் கேட்கவேண்டும் என்றார்.
                                              .........................................


(எனக்கும் சந்தேகம் வந்துவிட்டது.
ஆமா.........ஒரு  குட்டியையும் ஈனாத தாயி............ எப்படி ஈழத்தாயாக முடியும்!!!.)

திங்கள் 29 2013

நடிப்பில் விஞ்சிய திருவோடு தந்த அன்னலெட்சுமி............

படியுங்கள் புதிய கலாச்சாரம் - மக்கள் கலை இலக்கியக் கழக மாத இதழ்

இன்றைய சூழலில் ஈழத்தமிழ் மக்களுக்கு  ஆதரவாக குரல் கொடுப்பவர்களில் பலருக்கு, கடந்த பல ஆண்டுகளாக ஈழ தமிழ் அகதிகளுக்கு தமிழ்நாட்டில் இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றி தெரியாது.தெரிந்திருக்கவும் அவர்களுக்கு வாய்பிருக்காது.


தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கு அதிகமான ஈழத்தமிழர்கள் அகதிகளாக வாழ்கின்றனர். தமது உடமைகளை துறந்து பறிகொடுத்து ஏதிலிகளாக வந்துள்ள இம்மக்களில் சுமார் 70.000 பேர் தமிழமெங்கும் உள்ள நூற்றுக்கும் மேற்ப்பட்ட அகதி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை அனுதாபத்துக்குரிய அகதிகளாக தமிழக  அதிகாரிகளும்,போலீசும் கருதுவதில்லை, ஈழவிடுதலைஇயக்கத்தை நசுக்குவது என்ற “ இந்திய அரசின் நோக்கத்துக்கு ஏற்ற வகையில் நக்சல்பாரி இயக்கத்தவரை உள்வு பார்ப்பதற்க்காக தி.மு.க அரசால் உருவாக்கப்பட்ட கியூபிரிவு உளவுத்துறையால்  அன்றைய தி.மு.கஅரசும், இன்றைய அதிமுக அரசும் ஈழ அபகதிகளை கண்காணித்து கட்டுப்படுத்தி ஒடுக்கியே வந்துள்ளன. வருகின்றன.

சிங்கள இனவெறிபாசிஸ்டு ராஜபக்சேவுக்கு எதிராக தமிழக மாணவர்களின் போராட்டம் தோற்றுவித்த பொதுக்கருத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள,வரவிருக்கும் நாடாளமன்ற தேர்தலில் ஓட்டு பொறுக்குவதற்க்காக அணைத்து ஓட்டு கட்சிகளும் மாணவர்களின் கோரிக்கையை ஆதரிப்பதாக நடிக்கின்றன.

இந்த நடிப்பில் விஞ்சியிருப்பது தமிழனுக்கு திருவோடு தந்த அன்னலெட்சுமிதான்

“ இலங்கையின் மீது பொருளாதாரத்தடை, போர்க்குற்ற விசாரனை,பொது வாக்கெடுப்புஎன்று அடுத்தடுத்து சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மற்ற எல்லா ஓட்டு கட்சிகளைவிட நடிப்பில் முன்னணியில் இருப்பது திருவோடு தந்த அன்னலெட்சுமி என்ற அரசியல்வாதிதான்.
எவ்வித குற்றமும் இழைக்காத ஈழத்தமழ் அகதிகளை சிறப்பு முகாம் என்ற பெயரில் தமிழகத்தின் முள்வேலிச் சிறைகளில் ஆண்டுக்கணக்கில் அல்லல்பட்டு வருகிறார்கள். அவர்களை விடுவிப்பதற்கு, ஒரு கையெழுத்து போட்டு அரசானை வெளியிட மறுக்கும் இந்த திருவோடு தந்த அன்னலெட்சுமிதான் சிங்கள அரசிடமிருந்து  ஈழத்தமிழர்க்கு விடுதலை  வாங்கித் தருவதாக சட்டமன்றத்தில் தீர்மானம் போடுகிறார்.
சிறப்பு முகாம் என்ற பெயரில் ஈழத்தமிழ்அகதிகளுக்கு,இந்த சித்திரவதை கூடாரத்தை உருவாக்கியது, தாய் தமிழகத்தை பேய் தமிழமாக்கி ஈழத்தாய் வேடமேற்றிருக்கும் தமிழர்க்கு திருவோடு தந்த அன்னலெட்சுமிதான்.


உதவி    .ம.க.இ.கவின் மேநாள் பேரணி, டிஜிபி அலுவலகம் முற்றுகை என்ற பிரசுரத்திலிருந்து

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...