ஞாயிறு 06 2019

நினைவலைகள்-42.

ராஜராஜனின்  பொற்காலம் பற்றி பேசுபவர்கள்..........

ராஜராஜன் வரலாறு க்கான பட முடிவு




ராஜராஜன் 400க்கும் மேற்பட்ட பெண்களை வலுவில் கொணர்ந்து உடம்பில்  சூடு போட்டு தேவரடியார்களாக மாற்றினான். இப் பெண்கள் கோவிலின் பணிகளோடு நிரந்தரமாக பிணைக்கப்பட்டனர். இறைவன் பெயரால்  விபச்சாரத்தை புனிதமாக்கி தஞ்சையில் தனிச் சேரியை உருவாக்கினான். கோவில் அடிமைகளென கட்டாயப்படுத்தி இழுத்து வரப்பட்ட இப்பெண்கள். அரசனின் அந்தப்புரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட கொடுமைகளும் சோழப் பொற்காலத்தில்தான் நிகழ்ந்தன. கோவில் பூசாரிகள், பெரும்நிலவுடமையாளர்களின் காம வெறிக்கு பலி கொடுக்கப்பட்ட தேவரடியார் குலப் பெண்களின் ஆயிரம் ஆண்டுகால கொடுமையை 1929-ல் சுயமரியாதை இயக்கமும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியும் போராடி சட்டம் மூலம் முடிவுக்கு கொண்டுவந்தனர்.

தமிழ்மறை மீட்டான் என சைவக் கொழுந்துகளால் போற்றப்படும் ராஜராஜன். தமிழ்மறைகளை ஒளித்து வைத்துக் கொண்டு சமயக்குரவர் நால்வரும் வந்து கேட்டால் தருவோம் என தில்லை தீட்சிர்கள் மிரட்டியபோது பம்மிப் பதுங்கிய சமயக்குரவர்களின் தங்கச்சிலைகளைச் செய்து அவர்களுக்கு தானம் தந்து மீட்டானே ஒழிய, தளிச் சேரிப் பெண்டீர் மீது சூடு போட்ட வீரத்தை தீட்சிதரிடம் காட்டவில்லை.

தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டுகளில் தீண்டாமை பற்றிய முதல் குறிப்பே ாஜராஜனின் ஆட்சிக்காலத்தில் வந்துள்ளது. வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், இவன் காலத்தில்தான் ஊருக்கு வெளியே  தீண்டாச்சேரியும், பறைச்சேரியும் இருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார். ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனிச் சுடுகாடுகள் இருந்தன.

தாழ்த்தப்பட்ட சாதி அடிமைகள் சாகுபடி நாட்களில் சகதியில் உழல்வதும் மற்ற நேரங்களில் கல்லுடைப்பதும்,பல்லக்கு சுமப்பதும் கட்டாயமானது. ராஜராஜனின் பொற்காலம் பற்றி பேசுபவர்கள் அவன் காலத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமையால்  ,சாதிகளால் மக்கள் பிரிந்து கிடந்ததைப் பற்றியோ பேசுவதில்லை.. காவிகளுடன் சேர்ந்து இவர்களும் ராஜராஜனை கட்டி அழுகிறார்கள்


---நன்றி வினவு























10 கருத்துகள்:

  1. பிற்காலத்தில் இருந்த தேவதாசிகளுக்கும், இராஜராஜன் காலத்திய தேவரடியார்களுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருந்ததாகப் படித்ததாக நினைவு நண்பரே

    பதிலளிநீக்கு
  2. இராஜ ராஜ சோழன் செய்த செயல்களை விமர்சிக்கும் வினவு கும்பல்
    ஸ்டாலின் , லெனின் செய்த கொலைகளை காலத்தேவைகள் என்று முட்டு கொடுக்கும்

    அது மட்டுமல்ல முகலாய அரசர்கள் செய்த கொடுமைகளை கண்டு கொள்ளாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகலாய அரசர்கள் செய்த கொடுமைகளுக்கு காரணமாகத்தான் தாஜ்மகாலையும் அவர்கள் உருவாக்கிய டில்லியையும் வினவு விட்டு வைத்திருக்கிறதா..? திரு .அனாமிஸ்..

      நீக்கு
    2. இராஜ ராஜ சோழன் செய்த மனித விரோத செயல்கள், இலங்கை விடுதலைப்புலிகள் இயக்கம், அதன் தலைவர் செய்த மனித விரோத செயல்கள், இஸ்லாமிய அரசர்கள் இந்தியாவில் செய்த மனித விரோத செயல்கள் இவற்றை இந்தியாவில் மறைக்க முயற்சிக்கிறார்கள் என்பது உண்மை தான்.


      நீக்கு
    3. கிழப்போக்கன் அவர்களே ,

      உங்க கருத்து முகலாய கும்பல் கொடுமைகள் செய்தார்களா ? செய்யவில்லையா ?

      செய்யவில்லை என்றால் ஆதாரம் தருகின்றேன்

      அதைவிட உங்கள் நண்பர் வேகநரி சொல்கிறார்
      முகலாயர் கொடுமைகள் செய்தார்கள் என்று அவரையும் கேளுங்கள்

      Rishabraj Rajendra

      நீக்கு
  3. பதில்கள்
    1. இதற்கு பின்னால் இன்னொரு உலகம் இருக்கிறது நண்பரே...

      நீக்கு
  4. தற்போதைய ஜனநாயக இந்தியாவிலேயே, ஆட்சி அதிகாரத்துக்கு வரும் அரசியல்வாதிகள் பல கொடுமைகள் செய்யும் நிலையில்
    தமிழ் அரசன், கோயிலை கட்டினான் என்பதிற்காக ராஜராஜனின் காலம் பொற்காலம் என்று பேசுவது கற்பனை, அபந்தம்!
    தேவையான பதிவு. வலிப்போக்கருக்கு எனது பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பாரட்டதலுக்கு நன்றி! திரு. வேகநரியாரே..!

      நீக்கு

“மார்ச் 8 உலக மகளிர் தினம்-”

                                                              கிளாரா ஜெட்கின். உண்மையான ஜனநாயகம், சமத்துவம் நோக்கி மனிதகுலத்தை முன்னெடுத்துச...