வெள்ளை வேஷ்டி சட்டை
அணிந்து............
தோளில
செந்துண்டு போட்டு
வந்த
வலதுஇடது வீராதி
வீரர்களெல்லாம்............
போயஸ்சு தோட்டத்து
கோமளவல்லியின் புல்
தடுக்கி விழுந்து
சாயம்
வெளுத்துப் போனார்கள்
மஞ்சளின் மகிமையான
துண்டுடன் வெள்ளையும்
சொள்ளையுமாக வித்தகம்
பேசி வந்த (வரும்)
சிற்றரசை
அய்ந்து முறை ஆண்ட
சிற்றரசர்...........................
கோமாளி போய்
சேர்ந்த்தால்
பூவும் பொட்டு இழந்து
ஆட்சிக் கட்டிலை
பிடித்த
வசந்தசேனையின கொடுங்
கோண்மையை எதிர்க்க
படையிருந்தும்
துணிச்சலின்றி
அச்சடித்த
வசனங்களுடன்
மறைத்திருந்த கருப்பு
சட்டை
அணிந்து-நாத்திகம்
பேசி
வீதிவழி உலா
வருகிறார்
கோபாலபுரத்து கோமகன்
உள்ளென்று வைத்து
புறமென்று பேசும்
போலிகளைப் போல்.....
நித்தமொரு கொள்கை
விளக்கம் வைத்து
தந்தை சொன்னார்
அண்ணன் சொன்னார்
தம்பி என்று பேசும்
பேச்“சாளரே.................
போதும்மய்யா..............உம்.......
பேச்சு.......................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை