| படம்- வினவு ..வாராயோ தோழி வாராயோ…………! |
முன்னால் முதல்வரும
இன்னாள் முதல்வரும்
தேர்தலில் நின்று ஜெயிக்க
எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்
குறித்து கொடுத்த நல்
நாளில் வேட்பு மனு
தாக்கல் செய்வதற்கு...
புறப்பட்டு செல்லும் சாலை
வழியில் பத்தடிக்கு ஒரு
போலீஸ் நிறுத்தப் பட்டு
அந்த போலீசுக்கு துனையாக
தொண்டர்களும் காத்து கொண்டு
நின்றனர் முதல்வரின் தரிசனத்துக்காக
சரியாக ஒன்றரை மணிக்கு
கடற்கரை சாலையில் தேரில்
பவனி வந்த வேளையில்
அக்னி பகவானின் தாக்கம்
அதிக அளவில் இருந்தது
இன்னாள் முதல்வர் பவனி
வந்த தேரில் குளிர்
சாதன வசதி இருந்தும்
தேரின் இடது பக்கத்தில்
ஓரமாக அமர்ந்து இருந்தாலும்
தேரில் பொருத்தப்பட்ட
கண்ணாடியை ஊடுருவி அக்னி
தாக்கியதால்.. அந்த தாக்குதலை
தடுக்க தேரின் பின் இருக்கையில்
அமர்ந்து வந்த முதல்வரின்
தோழி ஒரு அட்டையை எடுத்து
தன் தோழியின் முகத்தின்
ஒரு பக்கமாய் வைத்து
அக்னியின் தாக்குதலிருந்து தன்
தோழியை காத்தாள் தோழி..