க்க்...க்க்....க்க் க்க் க்க் ..............
“ சார் ..ஏன்? இப்படி விக்கல் எடுத்துகிட்டே இருக்கீங்க...தண்ணிய குடிங்க சார்”..
“ சார்.... இப்படி விடாமா விக்கல் எடுத்தா அவருக்கு வேண்டியவங்க நிணப்பாங்க..சார்..!!”
“ என்ன சார்... நீங்க...அவருக்கு வக்காலாத்தா..??”
“இல்ல சார்., என் அனுபவத்த சொல்றேன்.”..ஃ
“ அவருக்குத்தான் துணையுமில்லே.., இணையுமில்ல.. குடும்பமுமில்ல. பிள்ளையுமில்ல..குட்டியுமில்ல... அவர..போயி யாரு சார்.. நிணப்பாங்க ???”
“சார்.. நீங்க சொல்ற மாதிரி இல்ல சார்..., என்ன நிணக்கிறதுக்கு என் அக்கா இருக்காங்க... அக்கா வீட்டுக்காரர் என் மச்சான் இருக்காரு.... அக்கா பிள்ளைகளான மருமக....மருமகன்கள் இருங்காங்க சார். பத்தில் ஒன்பது தடவை நிணைக்காவிட்டாலும் ..ஒரு தடவையாவது நிணப்பாங்க சார்,...”
“ அப்படியா...! அந்தக் கதை அங்கிட்டு .இருக்கட்டம் சார்.., இப்பா யாரு சார்.. நிணைக்கறாங்க...?”
“ என் அம்மா சார் ”...
“ என்னாது. ஒங்க அம்மாவா” ... சார்..காமெடி பன்னாதீங்க சார்.., அவுங்க இறந்து பத்து வருடத்துக்கு மேலாகுது....அவுங்க எப்படி உங்கள நிணப்பாங்க..கத விட்டாலும் பொருத்தமா விடுங்க சார்”..
“ என் அம்மா சாகும் தருவாயில் இருக்கும்போது..என்னை நினச்சுதான் கவலபட்டு ... “ என் புள்ளய தனியா விட்டுட்டு போறனென்னு” புலம்பி இறந்தாங்க சார்...”
“ பரவாயில்லையே.., சாகப்போற நேரத்திலாவது உங்க அம்மா..உங்களபத்தி நினச்சாங்களே..!!!”
“ அப்ப மட்டும் இல்ல சார், எப்பவுமே என் அம்மாவுக்கு என்மேல் ரெம்ப பாசம் சார்.” நானும் என் அம்மாவுக்கு எந்த இம்சையும் கொடுத்ததில்லை...சார்...” விக்கல் வந்தால் என் அம்மாதான் நினப்பாங்க..... தண்ணிய குடித்து விக்கல நிறுத்த மாட்டேன்...சார்... சிறிது நேரங்கழித்து தானா விக்கல் நின்று விடும் சார்...”
“ சார்.., அவரு சொல்வது உண்மைதான்... எனக்கும் அவரு மாதிரி விடாமல் விக்கல் வந்தது.... “உடனே நான் எங்கம்மாவுக்கு போன் செய்து “ என்னம்மா செய்யிற ..ன்னு கேட்டதுக்கு ” “ உன்னத்தாண்டா நிணச்சுகிட்டு இருக்கேன்னு சொன்னாங்க சார்..”
“ என்ன சார்..நீங்க.. உங்கம்மா உயிரோடு இருக்காங்க... அவருடைய அம்மா இறந்து பத்து வருடமாச்சு ... நீங்க சொல்வது மாதிரி பாத்தாக்கூட . அவரு அம்மா மேல அளவுக்கதிமாக பாசம் வைத்தததால்தான் அவரு விக்கல் எடுத்தால் அம்மா நிணைக்கிறாங்கன்னு நம்பலாம்.. எதுவும் ஒரு நேரந்தான் பலிக்கும் எல்லா நேரமும் பலிக்காது சார் ” முதல்ல அத புரிஞ்சுக்கங்க சார்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை