பக்கங்கள்

சமூகம். நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம். நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன் 08 2025

ஒரு நேரந்தான் பலிக்கும்...!!!

 





க்க்...க்க்....க்க்      க்க்   க்க்     ..............


“ சார் ..ஏன்? இப்படி விக்கல் எடுத்துகிட்டே இருக்கீங்க...தண்ணிய குடிங்க சார்”..


“ சார்.... இப்படி விடாமா விக்கல் எடுத்தா  அவருக்கு வேண்டியவங்க நிணப்பாங்க..சார்..!!”


“ என்ன சார்... நீங்க...அவருக்கு வக்காலாத்தா..??”


“இல்ல சார்.,  என் அனுபவத்த சொல்றேன்.”..ஃ


“ அவருக்குத்தான்  துணையுமில்லே.., இணையுமில்ல.. குடும்பமுமில்ல.      பிள்ளையுமில்ல..குட்டியுமில்ல... அவர..போயி யாரு சார்.. நிணப்பாங்க  ???”


“சார்.. நீங்க சொல்ற மாதிரி இல்ல சார்..., என்ன நிணக்கிறதுக்கு என் அக்கா இருக்காங்க... அக்கா வீட்டுக்காரர் என் மச்சான் இருக்காரு.... அக்கா பிள்ளைகளான மருமக....மருமகன்கள் இருங்காங்க சார். பத்தில் ஒன்பது தடவை நிணைக்காவிட்டாலும் ..ஒரு தடவையாவது நிணப்பாங்க சார்,...”

“ அப்படியா...!   அந்தக் கதை அங்கிட்டு .இருக்கட்டம் சார்.., இப்பா யாரு சார்.. நிணைக்கறாங்க...?”


“ என் அம்மா சார்  ”... 


“ என்னாது.  ஒங்க அம்மாவா”  ... சார்..காமெடி பன்னாதீங்க சார்.., அவுங்க இறந்து பத்து வருடத்துக்கு மேலாகுது....அவுங்க எப்படி உங்கள நிணப்பாங்க..கத விட்டாலும் பொருத்தமா  விடுங்க  சார்”..


“ என் அம்மா சாகும் தருவாயில் இருக்கும்போது..என்னை நினச்சுதான் கவலபட்டு ... “ என் புள்ளய தனியா விட்டுட்டு போறனென்னு” புலம்பி இறந்தாங்க சார்...”


“ பரவாயில்லையே.., சாகப்போற நேரத்திலாவது உங்க அம்மா..உங்களபத்தி நினச்சாங்களே..!!!”


“ அப்ப மட்டும் இல்ல சார், எப்பவுமே என் அம்மாவுக்கு என்மேல் ரெம்ப பாசம்  சார்.”  நானும் என் அம்மாவுக்கு எந்த இம்சையும் கொடுத்ததில்லை...சார்...” விக்கல் வந்தால் என் அம்மாதான் நினப்பாங்க..... தண்ணிய குடித்து விக்கல நிறுத்த மாட்டேன்...சார்... சிறிது நேரங்கழித்து தானா விக்கல் நின்று விடும் சார்...”


“ சார்.., அவரு சொல்வது உண்மைதான்... எனக்கும் அவரு மாதிரி விடாமல் விக்கல் வந்தது.... “உடனே  நான் எங்கம்மாவுக்கு போன் செய்து  “ என்னம்மா செய்யிற ..ன்னு கேட்டதுக்கு ”  “ உன்னத்தாண்டா நிணச்சுகிட்டு இருக்கேன்னு சொன்னாங்க சார்..”


“ என்ன சார்..நீங்க.. உங்கம்மா உயிரோடு இருக்காங்க... அவருடைய அம்மா இறந்து பத்து வருடமாச்சு ...  நீங்க சொல்வது மாதிரி பாத்தாக்கூட .  அவரு அம்மா மேல அளவுக்கதிமாக   பாசம் வைத்தததால்தான் அவரு விக்கல் எடுத்தால் அம்மா நிணைக்கிறாங்கன்னு நம்பலாம்.. எதுவும் ஒரு நேரந்தான் பலிக்கும் எல்லா நேரமும் பலிக்காது சார்  ” முதல்ல அத புரிஞ்சுக்கங்க சார்..

வியாழன் 02 2023

இந்தியாவிலும் ஒரு நியூரம்பெர்க் வேண்டும்

ஜெர்மனியில் ஹிட்லர் நூலகங்களைக் கொழுத்தி, கம்யூனிஸ்டுகளை வேட்டையாடி, யூதர்களை இனப்படுகொலை செய்தும் வென்முறை வெறியாட்டம் ஆடினான். இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனிடம் தோற்று தற்கொலை செய்து கொண்டான். அதன் பிறகு அந்த அரசில் இருந்த பல அதிகாரிகள் ஹிட்லரின் பேரைச் சொல்லி தப்பிக்க நினைத்த போது, நீயூரம்பெர்க் தீர்ப்பாயம் அவர்கள் அனைவருக்கும் தண்டனை வழங்கியது. இந்தியாவிலும் மோடி ஆர்.எஸ்.எஸ் க்கு எதிராக அவ்வாறான் ஒரு நியூரம்பெர்க் தீர்ப்பாயம் வேண்டும்.







வியாழன் 23 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-72

கவலைபட்டவர்களும்......சந்தோசப்பட்டவர்களும்..........


Related image


அவர்கள்...........

ஏ1 குற்றவாளி  செத்த
போது...இனி
சரக்கும் பிரியாணி
என்ற குஸ்காவும்
வோட்டுக்கு பணமும்
கிடைக்காது என
கவலைப்பட்டனர்




இவர்கள்..............

கலைஞர் மறைந்த
போது திமுகவில்
இனி யார் தலைவர்
என்ற சொத்து
பிரச்சனை எழுந்தபோது
சந்தோசப் பட்டனர்

.


செவ்வாய் 24 2017

மெரினாவில் புகுந்த சமூக விரோதிகள்......

என்ன...அண்ணே...அஞ்சாறு நாளா....ஆளையே...காணோம்... மெரினா போராட்டத்துக்கு போயிட்டிங்களா.....???

ஏன்டா....டேய்...என்னப் பாத்தா...அப்படியாடா...தெரியுது....????

பின்னே..... தமிழ்நாடே..... பத்தி எரிஞ்சுகிட்ட இருக்கருப்பா... உங்கள காணோம்ண்ணே...........இதுல வேற.. மெரினா கூட்டத்துல  சமூக விரோதிக புகுந்திட்டாங்கன்னு..பரபரப்பா டிவியில பேட்டி கொடுத்தாங்களா  அதே நேரத்துல... உங்கள வேற காணோமா...???? நீங்கதான் மெரினாவுல புகுந்திட்டிங்களான்னு நிணச்சண்ணே...

 அப்படியாடா ..சரிடா...  மதுரை கே...ஆஸ்பத்தரியில... குளுக்கோசு ஏத்திகிட்டு பெட்டுல படுத்துகிடந்தப்போ..என்ன . வந்து பாத்தவன்க  யாருடா...அவிங்க.....???


அவிங்களாண்ணே....அவிங்க  சமூக விரோதிகண்ணே.....

என்னது சமூக விரோதிகளா...??இப்பத்தானடா என்ன சமூக விரோதின்னு சொன்ன .......

சமூக விரோதிய பாக்க சமூக விரோதிக  வருவது நட்புகாகத்தாண்ணே


அடேங்கப்பா  நட்பு நிறைந்த அந்தசமூக விரோதிக யாருடா.....???

அவிங்களாண்ணே.. ஹிப் ஹாப் ஆதி, ஆர்ஜே பாலாஜி, ராகவா லாரன்சு, கெமிசனர் ஜார்ஜ் ண்ணே....

ஏலே....வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம்னு இவுகள்ல சொல்றாங்க.....

என்னண்ணே..  நீங்க. புரியாம  கேக்குறீங்க..... ஆத்தா போலீச பத்தி இன்னும் புரியாம இருக்கீங்க..... .....

ஏலே.ஒன்னவிட எனக்கு நல்லாவே புரியும்டா...  ஆமா.... ஆத்தாதான் செத்து போச்சுலடா.... ...

ஆத்தா செத்து போச்சுன்னா... சின்ன ஆத்தா... இருக்குல.... இந்தா இந்த வீடியோவ பாருங்க.....மெரினாவில் புகுந்த சமூக விரோதியாருன்னு. உங்களுக்கு தன்னாலயே   புரியும்....









திங்கள் 16 2016

இந்த கேள்விக்கு என்ன பதில்......

திருப்பூர் அருகே 3 கன்டெய்னர்களில்  570 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்

கேள்வி-1.இவ்வளவு அதிகமான தொகைக்குசொந்தக்காரர்  தமிழ்நாட்டில் யார்?

கேள்வி-2. ரூ 5கோடிக்கே  இவ்வளவு பாதுகாப்பு வேண்டும் என்ற விதிமுறை இருக்கும்போது ரூ 570 கோடி க்கு லுங்கி கட்டிய போலீசை அழைத்து சென்றது எப்படி.... எப்படி??

கேள்வி-3 ,சீல் வைக்கப்படாத அந்தப் பெரிய தொகை பணத்தை பகலில் அல்லாமல் இரவில் அதுவும் இரண்டாவது சனிக்கிழமையான விடுமுறை நாளில் கொண்டு செல்ல காரணம் என்ன...என்ன???

தலைப்பைச் சேருங்கள்

சனி 23 2016

திருடர்கள் மொழியில் வளர்ச்சி என்றால்...


கஞ்சி ஊத்த வக்கில்ல
என்னடா அரசாங்கம் நாட்ட
வெளி நாட்டுக்கு வித்துபுட்டு
என்று பாடினார்கள் புரட்சிப்
பாடகர் கோவனும் அவர்தம்
கலைக் குழு தோழர்களும்

பசி வந்தால் பத்தும்
பறந்து போகும் என்றார்கள்
பசியால் பட்டு அறிந்தவர்கள்

எயிட்ஸ் ஏபோலா போன்ற
உயிர்க் கொல்லி நோய்களை
விட பசியால் மாண்டவர்கள்
ஏராளம் என்கிறது அய்க்கிய
நாட்டு அமைப்பு 2013-ல்
வெளியிட்ட அறிக்கை ஒன்று

அன்றைய இந்தியாவில் 1970ல்
இருந்தே வறுமையை ஒழிப்போம்
ஒழிப்போம் என்று குயிலாகவும்
கூவினார்கள் காக்கையாகவும் கரைந்தார்கள்
இன்றுவரை பசியும்  ஒழியவில்லை
வறுமையும் ஒழியவில்லை இன்றுவரை

தேர்தல் திருடர்கள் மொழியில்
பசியும் வறுமையும் வளர்வதைத்தான்
 அவர்கள் வளர்ச்சி வளர்ச்சி
என்று அவர்கள் மேடைதோறும்
கூவுகிறார்கள்.கரைகிறார்கள் பிதற்றுகிறார்கள்.


அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...