படம்- |
அம்மா...
இனி நான் பள்ளிகூடத்துக்கு
போகப்போவதில்லை யம்மா..
பள்ளிக்கூடம போகாததால்
என் மீது கோபம் கொண்டு
என்னை அடிக்காதே யம்மா..
நான் ஏன்? பள்ளிக்கூடம் போக
அடம் பிடிக்கிறேன் என்பதை
நீ முதலில் தெரிந்து கொள் அம்மா...
நான் என்ன சாதியென்று நீ
எனக்கு சொல்லித் தராதபோது
பள்ளிக்கூட ஆசிரியர்கள் நான்
இன்ன சாதியென்று சொல்லி
விட்டார்கள் அம்மா........
இன்ன சாதியினர்தான் பள்ளிக்கூட
கழிவறையை சுத்த்ம் செய்ய வேண்டும்
என்று பாடம் நடத்தும் ஆசிரியர்கள்
உத்தரவிட்டார்கள் அம்மா..........
அந்தப் பள்ளிக் கூடத்தில் படிக்கும்
குடியானவர் வீட்டுப் பிள்ளைகள்
தவிர நம் தெருவிலுள்ள பிள்ளைகள்
அனைவரும் சேர்ந்து பள்ளிக்கூட
கழிவறையை சுத்தம் செய்தோம் அம்மா...
ஆசிரியர்கள் சொல்படி கழிவறையை
சுத்தம் செய்த பின்பு நாங்கள்
சுத்தமில்லாமால் இருந்ததினால்
பள்ளியில் தனியே உட்கார
வைக்கப்பட்டோம் அம்மா...
குடியானவர்கள் எல்லாம் மேல்
சாதியாம் கிழக்கு தெருவில்
இருப்பவர்கள் எல்லாம் கீழ்
சாதியாம் அ்ம்மா........
படிப்பில் கெட்டிகாரனாக இருந்த
என்னிடம.. கழிவறையை சுத்தம்
செய்த பின் என் நோட்டைக்கூட
ஆசிரியர் தொடுவதில்லை யம்மா...
நான் என்ன சாதியென்று நீ
என்னிடம் சொல்ல மறுத்தாலு ம்
பள்ளிக்கூடத்தில் நான் இன்ன
சாதியென்று பட்டியல் போட்டு
சொன்னார்கள் அம்மா.....
படிக்கச் சென்ற என்னை
பள்ளி கழிவறையை சுத்தம்
செய்யும் வேலையை செய்யச்
சொல்வதால். எனக்கு படிக்க
மனம் வரவில்லை அம்மா..
அதனால்தான் அம்மா...
பள்ளிக்கூடத்துக்கு போகாமல்
உன்னுடன் வேலைக்கு வந்து
உனக்கு துனையாக வேலை
செய்கிறேன் அம்மா........
ஆகவே அம்மா..
பள்ளிகூடத்துக்கு செல் என்று
என்னை அடிக்காதே அம்மா....!!!!
செய்தி:- அன்மையில் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பட்டியல் இன குழந்தைகளை பள்ளி கழிப்பிடத்தை சுத்தம் செய்ய வைத்தனர்...
ஆசிரியர்களே இப்படி சிரியர்களாய் மாறலாமா :)
பதிலளிநீக்குபெரும்பாலான ஆசிரியர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்.நண்பரே...
நீக்குஇதை விட கொடுமை எதுவும் இருக்க முடியாது...
பதிலளிநீக்குகொடுமை கோடுமையின்னு கோயிலுக்கு போனா அங்கு ரெண்டு கொடுமை ஆட்க்கிட்டு வந்தது போல்தான் இந்தக் கொடுமையும் நண்பரே...
நீக்குவித்தியாசமான, உண்மையான சிந்தனை.
பதிலளிநீக்குஇவைகள்.சமூகத்தில் நிலவுகின்ற உண்மைகள்தான் அய்யா...
நீக்குவணக்கம் தோழரே!
பதிலளிநீக்குஅவலம்! அவலம்!
இதுபோன்ற நிகழ்வுகள் இப்போதும் நிகழ்வது?
இந்த கவிதையின் உண்மைத் தகவல் அரசுவின பார்வைக்கு கொண்டுசெல்லப் படவேண்டும். இந்த கொடுஞ்செயல் புரியும் பள்ளியின் அரசு உதவி நிறுத்தப் பட வேண்டும். அங்கிகாரம் ரத்து செய்யப் பட வேண்டும். இல்லையேல் நீதி யின் மூலம் நிச்சயம் இது சாத்தியமே.
த ம4 நட்புடன், புதுவை வேலு
சட்டம் இருட்டறையாகவும் நீதி எட்டாக் கனியாகவும்தான் இன்னமும் இருக்கிறது நண்பரே....
நீக்குபள்ளிக்கூடம போகாததால்
பதிலளிநீக்குஎன் மீது கோபம் கொண்டு
என்னை அடிக்காதே யம்மா...
ஏனென்றால்
பிள்ளைகள் அனைவரும் சேர்ந்து
பள்ளிக்கூடக் கழிவறையை
சுத்தம் செய்தோம் அம்மா...
ஆங்கே, ஆசிரியர்கள்
சிரித்து விளையாடினர் அம்மா...
தாங்கள் சொல்வதும் உண்மைதான் அய்யா....
நீக்குசாதி பற்றிய கதை
பதிலளிநீக்குஉள்ளத்தைத் தொடுகிறது
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! அய்யா....
நீக்குவேதனை.
பதிலளிநீக்குஅக்கட்டமைப்பில் ஒருவனாய் இருப்பது குறித்து இன்னும் நாணுகிறேன்.
நன்றி!
நீக்குஎன்ன நண்பரே இப்படிக் கேவலமா இருக்கு? நாம் எந்த காலகட்டத்துல இருக்கோம்...சே என்றாகின்றது...
பதிலளிநீக்குசொன்னா கோவிக்காதீங்கய்யா.... செவ்வாயில க்க்கூஸ் கட்டிக்கிட்டு இருக்கிற காலத்துல வாழ்றோம் அய்யா...
நீக்கு