வியாழன் 24 2015

தாயை தவற விட்ட தனயன்...

என்.- தாய்...அம்மா.... அப்பா எங்கேம்மா..

அப்பா..சாமிகூட சென்று
விட்டார்...மகனே........

அந்த சாமி...எங்கேம்மா.....

நம் எதிரில் இருப்பதுதான்
அந்த சாமி மகனே............

இந்தச் சாமி உன்னிடம்
பேசவில்லையே ..யம்மா...

அந்தச் சாமி வடிவில்தான்
நீ பேசுகிறாய்  மகனே...

நான்.. சாமியா....அம்மா..

ஆம் ..மகனே... நீதான்
என்னை காக்க வந்த
குல ..சாமி....மகனே..

நான்  சாமியாய்  இருந்து
உன்னையும் அககாவையும்
காக்கிறேன்...அம்மா...........

அதைத்தான் உன்னிடம்
வேண்டுகிறேன் மகனே!!!!


-----வயது முதிர்வின் காரணமாக
       தன் தாய் இறந்த போதும்
       தாயை தவற விட்ட
       தனயனாக  உணர்கிறான்  அவன்......

16 கருத்துகள்:

 1. அமைதிக்கொள்ளுங்கள், அவரின் அன்புக் கட்டளைகள் அனைத்தையும் நிறைவேற்றிய உங்களுக்கு அவர் இனி கடவுளாய்,

  பதிலளிநீக்கு
 2. சிறந்த பாவரிகள்
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 3. இழப்பு என்பது தாங்க முடியாத ஒன்று! துவள வேண்டாம் காலங்கள் காயத்தை மாற்றும்!

  பதிலளிநீக்கு
 4. இவ்வாறான தாய் அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் அய்யா....கொடுத்து வைத்திருந்த தாயை தவற விட்டு விட்டேன் அய்யா....

   நீக்கு
 5. தாயை இழந்து வாடும் தங்களுக்கும் ,தங்களின் குடும்பத்தார்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தமைக்கு நன்றி! .....

   நீக்கு
 6. வருத்தமாய் இருக்கிறது. உடலால் பிரிந்தாலும் அம்மாக்கள் நம்முள்ளேயே நினைவாய்த் தங்கி விடுகிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனுபவபூர்வமான உண்மை நண்பரே... அம்மா மட்டுமே நம்முள்ளேயே நினைவாய்த் தங்கி விடுகிறார்கள்.

   நீக்கு
 7. மனம் தளராதீர்கள் நண்பரே இறப்பு இருந்தே தீரும் தங்களுக்கும், தங்களது குடும்பத்தாருக்கும் எமது இரங்கல்களை தெரிவிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் இரங்கலுக்கும் ஆறுதல் மொழிக்கும் நன்றி! நண்பரே.........

   நீக்கு

காசு வாங்கினேன் பையிலே போடல...

  டேய் ....காசு வாங்கினேல  ...ஓட்டு போட்டீயா...? எனக்கு ஓட்டு இல்லேன்னு சொல்லிட்டாங்கண்ணே.... ஓட்டு இல்லேண்ணா...காசு எதுக்குடா வாங்கினே.. நீ...