செவ்வாய் 26 2016

தாத்தாவின் பெயரை நிலை நிறுத்திய கொள்ளுப் பேத்தி

Image result for காந்தியின் கொள்ளு பேத்தி
Gandhigrandaughter.jpg


தோழர்என்று என்னை கூப்பிட்டதும் அவரிடம் சென்றேன். 

என்ன வேலையா...? என்றார்

ஆமாம் .. என்ன விசயம் சொல்லுங்கள் என்றேன்.

கொஞ்ச நேரம் பேசலாமா...?? என்றார்.

ஓ..அதுக்கென்ன பேசலாமே...என்றபோது வேலை என்று இழுத்தார்

உங்களிடம் பேசிவிட்டு.. செல்கிறேன் என்ற போது.. என்கையை குலுக்கிவிட்டு என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்

தாத்தாவின் பேரை நிலை நிறுத்திய கொள்ளுப்பேத்தியைப் பற்றி படித்தீர்களா??? என்றார்.

எனக்கு , ஏதாவது உள் குத்து எதுவும் இருக்கும் என்ற நிணைப்பில்... யோசிக்கவே தெரியாத நான் யோசனை பண்ணவது மாதிரி இருந்துவிட்டு. தெரியலையே நண்பரே..என்றேன்

என்ன ..தோழர்..நீங்க...” என்று சலித்துக் கொண்டார்.

மறந்துவிட்டேன் நண்பரே..... அந்த கொள்ளுப் பேத்தியைப் பற்றிச் சொல்லுங்கள்  நான் நிணைவு படுத்திக் கொள்கிறேன் என்றேன்...

அது வந்து தோழர் என்று சொல்லத் தொடங்கினார்.

தென் ஆப்பிரிக்காவில் வசித்து வருபவர் ஆசிஷ்லதாராம்கோபிந்த் வயது 45.

இவர் இந்தியாவில் இருந்து மெத்தைகளை இறக்குமதி செய்து தென் ஆப்பிரிக்காவில் தனியார் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்வதற்க்கான டெண்டர் எடுத்த இருப்பதாக தொழில் அதிபர்கள் சிலரிடம் கூறியுள்ளார். 3 கண்டெய்னர்களில் இதற்க்கான பொருட்கள் வந்துள்ளதாக அதற்க்கான ஆவணங்களை காட்டியுள்ளார்.

லாபத்தில் பங்கு தருவதாக கூறியதை நம்பிய இரு தொழில் அதிபர்கள் ஆசிஷ்லதாவிடம் ரூ5.38 கோடியை அவரிடம் கொடுத்தனர்.


ஆனால், ஆசிஷ்்லதா சென்னதுபோல் பணத்தை தராததால் இரு தொழில் அதிபர்களும் போலீஸில் புகார் செய்தனர் புகாரின் பேரில் போலீஸ் விசாரணையில் ஆசிஷ்லதா காட்டியது போலியான ஆவணங்கள் என்று தெரிய வந்ததை அடுத்து அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக ஆசிஷ் லதா டர்பன் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜராகி விளக்கமளித்தார்.


இந்த விபரங்களை சொல்லி முடித்தப்பின் இந்த ஆசிஷ்லதா யாரு என்று தெரியுமா..? என்று கேட்டார்.

தெரியவில்லையே.... என்றேன் மீண்டும்....

மீண்டும் அவரே என்னை நக்கல் பார்வையுடன் பார்த்துச் சொன்னார். இங்கிலாந்து பிரதமர் சர்ச்சினால் ஆரை ஆடை பக்கிரி என்று பெயர் சூட்டப்பட்டவரும், இந்தீயாவுக்கு இவர்தான் சூ தந்திரம் வாங்கிக் கொடுத்ததாக சொல்லப்படுபவரின் கொள்ளு பேத்தி தோழரே என்றார்
.
எனக்கும் வியப்பாகத்தான் இருந்தது. அரை ஆடை பக்கிரியும் வ.உசிதம்பரனார்க்கு கொடுக்கச் சொல்லிய பணத்தை அவருக்கு கொடுக்காமல் மொங்கா போட்டவர். அவரை  அதாவது தாத்தாவின் பெயரை நிலை நிறுத்திய  கொள்ளுப் பேத்தி சரிதான்..  பேர் சொல்ல ஒரு வம்ச பரம்பரை என்றேன்.

சரியாக... புரிந்து கொண்டிறீர்கள் என்றார் நண்பர்.



12 கருத்துகள்:

  1. #.காந்தியும் காங்கிரசும் ..#லிங்கை க்ளிக் செய்தேன் ...கமல் புராணம் வருகிறதே ஜி !மொங்கா புராணத்துக்கு எங்கே போறது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொங்கா புரணாத்துக்கு வேறு லிங்க் கொடுத்துள்ளேன்ஜி

      நீக்கு
  2. புதிய செய்தி. யார் எழுதிய புத்தகம் அது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளியீடு
      கீழைக்காற்று வெளியீட்டகம்,
      10, அவுலியா சாகிபு தெரு,
      எல்லீசு சாலை,
      சென்னை 2.
      விலை ரூ 15

      நீக்கு
  3. பதில்கள்
    1. மொங்கா.. என்பதும் காந்தி கணக்கு மாதிரிதான் நண்பரே.......

      நீக்கு
  4. புதுசாவுல இருக்கு எந்தப் புத்துக்குள்ளே எந்தப் பாம்புனே தெரியலையே.....

    பதிலளிநீக்கு
  5. புதிய செய்தியாக உள்ளதே நண்பரே! வியப்பாகவும் இருக்கிறது...செய்திக்கு ஆதாரம் இருக்கிறதா நண்பரே!

    பதிலளிநீக்கு
  6. சொடுக்குவதற்கு சுட்டி கொடுத்திருக்“கிறேன் நண்பரே....

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...