புதன் 27 2016

நண்பர்க்கு தெரிந்த யோசனை அவர்களுக்கு தெரியவி்ல்லை

படம்-சிறைக்குள் கஞ்சா, பீர்பாட்டில்வீச்சு

நண்பரை பர்க்க வந்த
நண்பர் ஒருவர் நண்பரின்
உடல் நலன் விசரித்த
பின் இருவரும் தேநீர்
கடைக்கு சென்றனர்...........

அங்கு நண்பரை பார்க்க
வந்த நண்பர் சொன்னார்.
சிறைச் சாலை வழியாக
வந்த போது சிறை
முன் . இருபது அடிக்கு
ஒருவர் வீதம் மொத்தம்
நான்கு போலீசாரை கையில்
 துப்பாக்கி  உடன் நிற்க
வைத்து இருக்கிறார்களே சிறையில
 கைதிகள் சுவர் ஏறி
தப்பித்து விட்டனரோ என்று
விவரம் தெரியாமல் கேட்டார்

நண்பர் சொல்வதற்கு முன்
தேநீர் கடைக்காரர் சொன்னார்

அப்படி யாரும் தப்பிங்கலைங்க
ரோட்டில் இருந்து உள்ளே
இருக்கும் கைதிகளுக்கு கஞ்சா
போதைகளை சிறை வளாகத்திற்குள்
வீசுகிறார்கள் அதனால்.. உள்ளே
அவர்கள் வியாபாரம் பாதிக்கப்
படுகிறதாம் அதனால் வீசுபவர்களை
தடுக்கவும் பிடிக்கவும் தான்
இந்த  ஏற்பாடு...என்றார்.

அப்படியா என்ற நண்பர்
 வெளியில் தான் போலீஸ்
காவலோடு சாராய போதை
விற்கப்படுகிற மாதிரி உள்ளேயும்
அரசு பார் வசதியுடன்
சாராயக் கடையை திறந்து
விட்டால் வெளியில் இருந்து
உள் ளே எறியும்  அவசியம்
இருக்காதே என்றார் நண்பர்.

அது கேட்ட நண்பர்
நண்பரிடம் சொன்னார் நண்பா
தங்களுக்கு தெரிந்த யோசனை
சிறை அதிகாரிகளுக்கும் குடி
அரசை ஆளுவோருக்கு தெரியவில்லையே
என்ன செய்வது என்றார்...............

Madurai news

10 கருத்துகள்:

  1. அடேடே... சத்தமாச் சொல்லாதீங்க.. நல்ல யோசனையா இருக்கேன்னு செயல் படுத்திடப் போறாங்க!
    தம +1

    பதிலளிநீக்கு
  2. நல்ல யோசனை ,உடனே செயல் படுத்தலாம் :)

    பதிலளிநீக்கு
  3. ஐயையோ...என்ன நண்பரே இதை வலையில் எழுதிவிட்டீர்களே! நடத்திடுவாங்களே!

    பதிலளிநீக்கு
  4. -நட்டநடுவீதியிலே நடத்தம்போது.. அங்கே நடத்துவதற்கு என்ன நண்பரே....

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...