புதன் 19 2016

ஆணென்ன..பெண்னென்ன..எல்லாம ஓர் இனம்தான்.

2. விழுப்புரம்
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. அனைத்து விவசாயிகள் சங்கம் தொடர்ச்சியாக போராடி வருகிறது. கட்சிகளும் தனித்தனியாக போராடி வருகிறார்கள். ஆனால் எதற்கும் மசியாத மத்திய அரசு என்னை எவனாலும் அசைக்க முடியாது என்று  தனக்கே உரிய பார்ப்பன திமிரோடு  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என  மறுத்து வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை  தனது காலுக்கு சமமாக கூட மதிக்க வில்லை மத்திய அரசு.  தமிழக அரசோ நிற்க கூட வக்கில்லாமல் அப்போலாவில்  படுத்து கிடக்கிறது.
இந்த சூழலில் தமிழகத்தில் உள்ள  அனைத்துக்கட்சிகளும் கூடி 17,18 அன்று தமிழகம் முழுவதும் இரண்டு நாள் 48 மணி நேரம்  ரயில் மறியல் போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்தனர். 16 ம் தேதி  இந்த ரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என்று கூறி தனது உண்மை முகத்தை அம்பலப்படுத்தி காட்டியது பிஜேபி.
தொடர்ந்து தமிழகம் முழுவதும் 18.10.2016 இன்று ரயில் மறியல் போராட்டம்  நடத்துவது  என மக்கள் அதிகாரம் முடிவெடுத்தது. அதன் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் ரயில் மறியல் போராட்டம் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு தலைமையில்  நடைபெற்றது.
இந்த போராட்டத்தை நடத்த விடக்கூடாது என்பதற்காக ரயில் நிலையம் நுழைவு வாயில் எங்கும் தடுப்பு அரண்களை அமைத்து காவல்துறையை போட்டு வைத்திருந்தது. காட்டி கொடுப்பதற்காக கியூ பிரிவு போலீசாரையும் ஆங்காங்கே போட்டு வைத்திருந்தனர்.
சரியாக 10.30 மணிக்கு  சென்னை எழும்பூரிலிருந்து குருவாயூர் செல்லும் வண்டி வந்ததும் ஆங்காங்கே இருந்த தோழர்கள் கூடியதும் செய்வதறியாமல் திகைத்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களிடம் கைதாகுமாறு கேட்டது. முடியாது என்று மறுத்த தோழர்கள் முழக்கமிட்டவாறே ரயில் முன் அமர்ந்து விட்டனர்.
இதனை சற்றும் எதிர் பாராத அம்மா போலீசோ தோழர்களை வலுக்கட்டாயமாக தூக்கி சென்றது. 
பெண் தோழர்களை தூக்கி சென்ற பெண் போலீசிடம், உங்களுக்கும் சேர்த்து தானே போராடுகிறோம் என்று கூறி தோழர்கள்   வாக்குவாதம் செய்த  போது ” எங்களை என்ன பண்ண சொல்றிங்க, நாங்களும் அவுத்து போட்டு போராட சொல்றியா” என்று ஆபாசமாகவும் திமிராகவும் பதிலளித்து பெண் போலீசு. போலீசு என்றாலே ஆளும் வர்க்க கைக்கூலி தானே இதில் ஆண் – பெண் என்ற வேறுபாடே இல்லை.
போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு தோழர்களை  கடுமையாக தாக்கியது. இரண்டு தோழர்கள் போராட்ட களத்திலேயே மயங்கி விழுந்தனர். இதனையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் இறுதி வரை உறுதியாக போராடிய    அனைத்து தோழர்களையும் கைது  செய்வதற்குள் கதி கலங்கியது அம்மா போலீசு.
போராட்டத்தில் ஈடுபட்ட  கடைசி தோழரை கைது செய்யும் வரை மக்கள் கூட்டம் கலைந்து செல்லாமல் நின்றிருந்தனர். மக்கள் அதிகாரம் தோழர்களின் போராட்ட உணர்வை கண்டு உணர்வடைந்தனர்.
இப்போராட்டத்தில் விவசாயிகள், பெண்கள் என 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் அவர்களுடன்  மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவும்  கைது செய்யப்பட்டுள்ளார்.

4 கருத்துகள்:

  1. என்ன செய்வது மக்கள் இதை நினைவில் வைத்து தேர்தல் வரும் பொழுதாவது தனது பலத்தை காட்ட வேண்டும் தமிழ் நாட்டு மக்கள்தான் மறு நாளே மறந்து விடுவார்களே....

    பதிலளிநீக்கு
  2. தங்கள்
    பதிவை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. //போலீசு என்றாலே ஆளும் வர்க்க கைக்கூலி தானே இதில் ஆண் – பெண் என்ற வேறுபாடே இல்லை.//
    இந்திய நாட்டில் 100வீதமும் ஏற்று கொள்ளபடவேண்டிய கொடுமையான உண்மை.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...