வியாழன் 20 2016

வாயைப் பொளக்காதே மூடு......

.........................


அதோ அந்த
குவாலிக்ஸ் காரின்
முன் கூலிங்
கிளாஸ் கண்ணாடி
அணிந்து பந்தாவா
காரில் சாய்ந்தபடி
செல்லு போனில்
பேசிக் கொண்டு
இருப்பது யாருன்னு
உனக்கு தெரியுமா...?

உனக்கு தெரியாது
சொல்றேன் கேளு..

சப்பு இன்ஸ்பெக்டராக
சேர்ந்து இன்ஸ்சு பெக்டராக
ஆகி  கடைசியல
போலீஸ் படைக்கே
தலைவராக இருந்தவர்களைப்
போல..  அவரு...........

 கூலிக்கு கொலை
செய்யும் கொலைகார
கூலிப்  படையில்
எடுபிடியாக சேர்ந்து
பல கொலைகளை
 செய்து அதன்
மூலம் பல
நாள் சிறையில்
ராஜாவாக வலம்
வந்து பதவி
உயர்வு பெற்று
பெரும் கொலைகார
கூலிப் படைக்கே
தலைவராக இருக்காரு..

வாயை பொளக்காதே
மூடு     நீ
வாயை பொளப்பது
அவருக்கு தெரிந்தால்
 கூலி வாங்காமல்
உன்னோடு எண்ணையும்
சேர்த்து போட்டு
தள்ளி  விட்டு
போய்கிட்டே இருப்பாருடா...


5 கருத்துகள்:

  1. நண்பரே கருத்துரை போடவும் பயமாக இருக்கிறது எம்மை போட்டுற மாட்டாரே....?

    பதிலளிநீக்கு
  2. நம்ம மதுரையிலா அவர் இருக்கார் ?எதுக்கும் ஜாக்கிரதையா நான் இருந்துகிறேன் :)

    பதிலளிநீக்கு
  3. these people exist everywhere in all places
    i know a gangster who rescued one purohits daughter who was kidnapped by another gang.. police could not help the purohit...somehow these gangsters meet a violent death only...ji

    பதிலளிநீக்கு
  4. வாயைப் பொளந்தா
    போட்டுத் தள்ளிவிடுவாங்களா - அப்ப
    இந்தியா என்னாகும்?

    பதிலளிநீக்கு
  5. என்ன செய்வது போட்டுத் தள்ளுபவர்களை புகழ் பாட ஒரு பகுதி மக்கள் நமது நாட்டில் இருக்கிறார்களே!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...