செவ்வாய் 11 2017

கிழக்கில் தோன்றிய செல்பி மகான்...

கிழக்கில் ஒரு
மனிதர் தோன்றினார்
அவர் தோன்றிய
மறு நிமிடமே
நாட்டில் கருப்பு
பணத்தை ஒழிப்பேன்
என்று அருள்
வாக்கு அளித்தார்

அவரின் அருள்
வாக்கு பலித்த
காரணத்தால் தெருவுக்கு
வந்த மக்கள்
எல்லோரும் அவரை
கலுப்பு பணத்தை
ஒலிக்க வந்த
மகான் என்று
வாயார புகழோ
புகழ்ன்னு தள்ளினர்
 அப்படி புகழ்ந்து
தள்ளிய மகானை
தொட்டு வணங்க
காலடி தடத்தை
தேடிக் கொண்டு
இருக்கையில் சிலர்
கருப்பு பணத்தை
ஒழித்த மகான்
தங்களின் விவசாய
கடன்களையும் ஒழிப்பார்
என்று க ணவு
கண்டு அந்த
மகானை கண்டு
தரிசிக்க ஆசிரமத்துக்கு
 சென்ற போது
அந்த மகான்
தன்னை தரிசிக்க
வந்தவர்களை சுட்டெரிக்கும்
வெயிலில் அம்மணமாக
உருள விட்டுட்டு

ஆஸி. பிரதமருடன்
மெட்ரோ ரயிலில்
பயணித்தபடி அடுத்த
அருள் வாக்கு
சொல்வதற்கு செல்பி
எடுத்துக் கொண்டு
உல்லாசமாக சுற்றி
வருகிறார்  கருப்பு
பணத்தை ஒழிக்க
கிழக்கில் தோன்றிய
செல்பி  மகான்...............


ஆஸி.பிரதமருடன் செல்பி மகான்

4 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...