1917ம் வருடம் ...ரசியா நாட்டில் புதிய ஆட்சிதொடங்கி பத்து நாட்கள்தான் ஆகியிருந்தன.
“உழுபவருக்கே நிலம் சொந்தம்” என்ற உத்தரவுப்படி, பணக்கார விவசாயிகள்,பண்ணையார்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்கள் அணைத்தும் ஏழை விவசாயிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுவிட்டது.
இப் புதிய ஆட்சி வீழ்ந்து பழைய எஜமானர்கள் மீண்டும் வந்து செமத்தியாக உதைத்து, கொடுத்த நிலத்தையும் பிடிங்கிக் கொள்வார்களோ என சில விவசாயிகளுக்கு பயம் இருந்தது. அதைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்க்காக ஒரு கிராமத்து விவசாயிகள் தங்கள் பிரதிநிதியை, நாட்டின் ஆட்சித் தலைவரிடம் அனுப்பி விளக்கம் கேட்டுக் கொள்ள முடிவு செய்தார்கள்.
அந்த கிராமத்து பிரதிநிதி தலைநகரத்திலுள்ளஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு வந்து, விவசாயம்,நிலம் சம்பந்தமான அதிகாரியை பார்த்தும் திருப்தி அடையாமல் தலைவரைத்தான் பார்க்க வேண்டுமென கிராமத்தார்கள் சொல்லியிருக்கிறார்கள்,அதனால் வேறு வழியே கிடையாது ஆட்சித் தலைவரைத்தான் பார்த்தாக வேண்டுமென கூறி, ஆட்சித்தலைவரை பார்த்து பேசி விட்டுச் சென்றார்.
விவசாயிகள்,தொழிலாளர்களின் பிரதிநிதிகளைச் சந்திப்பதும்,அவர்களது வாழ்க்கை நிலமை, புதியசோசலிச அரசு பற்றிய அவர்களது அபிப்பிராயங்கள் என்ன உதவிகளை எதிர் பார்க்கிறார்கள் எனத் தெரிந்து கொண்டு உடனடியாக செய்து கொடுப்பதுதான் அத் தலைவருக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்தது. அந்தத் தலைவர் தனக்கு நேரமில்லையென எப்போதும் சொன்னதேயில்லை. அந்த நம்பிக்கையில்தான் மக்கள் அவரை நேரில் சந்திக்க எப்போதும் வந்து கொண்டே இருந்தார்கள் அந்தத் தலைவர்தான் ஏழைப்பங்களான் தோழர் லெனின்.
ஆனால் இந்தியா என்றொரு நாட்டின் தென்கோடி தமிழகத்திலிருந்து, வயதான விவசாயிகள் நாட்டின் தலைநகரத்திற்கச் சென்று பனியிலும் வெயிலிலும் வாடுகிறார்கள்.சரியான உணவும் உறங்க இடமமின்றி சாலையில்கிடக்கிறார்கள். விதவிதமான போராட்டங்கள் நடத்துகிறார்கள்.
விவசாயிகளின் நிலமை மோசமாக இருக்கிறது.விவசாயிகளுக்கு கொடுத்த கடனை ரத்து செய்யுங்கள். முறையான் வறட்சி-வெள்ள நிவாரணம் கொடுங்கள். காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமையுங்கள் விவசாயத்தை மேம்படுத்த நதிகளை இணையுங்கள் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்துகிறார்கள். எப்படியாவது பிரதமரை பார்த்து மனு கொடுத்து பேசி விடவேண்டும் என்றும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை இங்கேயே கிடப்போம். பிரதமரை சந்திக்க முடியாவிட்டால் சாவோம் என்று கிடக்கிறார்கள்..... நாற்பது நாட்கள் ஆகியும் இந்திய பிரதமரான செல்ஃபி மகான் மோடிக்கு அவர்களை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை...
இனி தமிழ்நாட்டில் கிடைத்த ஒரு இடமும் கிடைக்காது நண்பரே
பதிலளிநீக்குசிந்திக்க வைக்கும் பதிவு
பதிலளிநீக்குலெனினைப் பற்றி
30 ஆண்டுகளுக்கு முன்
படித்த நினைவு!
#விவசாயிகள்,தொழிலாளர்களின் பிரதிநிதிகளைச் சந்திப்பதும்,அவர்களது வாழ்க்கை நிலமை,#
பதிலளிநீக்குஇவரல்லவோ மக்கள் தலைவர் ?இங்கே மாதக் கணக்கில் விவசாயி போராடினாலும் பிரதமரைப் பார்க்க முடியவில்லையே :)