சுமார் இருப்பதைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஐடி துறையில் அதிக சம்பளம் வாங்கிய அமெரிக்க ஊழியர்களை விட்டு, அந்த வேலைக்கு குறைந்த கூலியில் இந்திய ஊழியர்களை அமர்த்தி அதிக லாபம் சம்பாதித்த முதலாளிகள்..
இன்று இந்தியர்களின் கூலியைவிட குறைந்த கூலியில் வேலையை செய்ய எந்திரங்களை பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள்.. ஏன் ? இப்படி என்று கேட்டால்
“எந்திரங்களுக்கு தூக்கம் வராது, அரட்டை அடிக்காது, தம் அடிக்க அடிக்கடி வெளியே போகாது, பெண் ஊழியர் போல் மகப்பேறு விடுப்பு எடுக்காது, இதை எல்லாம் விட நிர்வாகத்துடன் வாதம் புரியாது” என்று பல ஆதாயங்கள் இருக்கின்றவாம்.
மனிதர்கள் செய்யும் வேலையை எந்திரங்களால் செய்விக்க முடியாத இடத்தில் மட்டும்தான் மனிதர்களுக்கு இடம் என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையின் விதி. கொடுக்கும் வேலையை செய்வதற்க்கான திறமையும், விருப்பமும் இருந்தும் இலாபம் ஈட்டுவதற்க்கு தேவைப்படாத கரணத்தினால்தான் ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுகிறார்கள்.
இப்படி மனிதர்களின் இடத்தில் எந்திரங்களை அமர்த்திக் கொண்டே போவதால், உற்பத்தி செய்யப்படும் பொருட்களையும் சேவைகளையும் நுகர்வதற்கு ஆளில்லாமல் சந்தை சுருங்குகிறது. இந்த முரண்பாடு தோற்றுவிக்கும் நெருக்கடிகள்தான் முற்றிப்போய் மீளமுடியாத சிக்கலில் சிக்கியிருக்கிறது முதலாளித்துவம்.
நானோ தொழில்நுட்பம்,கிளைவுட் தொழில்நுட்பம்,செயற்கை அறிவு தொழில் நுட்பம்,விண்வெளி பயணம்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு,சூரிய எரிசக்தி தொழில்நுட்பம் இப்படி பலப்பல புதிய தொழில் நுட்பம் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தனக்குத்தானே ம சொல்லிக் கொள்கிறது முதலாளித்துவம்ஃ
ஆக.....முதலாளித்துவ மூலதனத்தின் நோக்கம் “வேலை கொடுப்பதல்ல. இலாபம் ஈட்டுவதே ”
முதஸாளிகளின் நோக்கம் லாபம் மட்டுமே அன்றி வேறென்ன ?
பதிலளிநீக்குஇதிலும், மாற்றம் வரும் என்பதில் மாற்றமில்லையே:)
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே
பதிலளிநீக்குலாபம் மட்டுமே அவர்களின் குறி