திங்கள் 03 2017

ஒரு நாதியற்றவரின் அங்கலாயிப்பு....!!!

வட 
இந்தியாவிலிருந்து சாலைகள் போட வந்தார்கள்..
பொறுத்துக் கொண்டார்கள்;

கட்டடங்கள் கட்ட வந்தார்கள்..
பொறுத்துக்
கொண்டார்கள் 
கடைகளில் வேலைக்கு வந்தார்கள்..
பொறுத்துக்
கொண்டார்கள் ;

பாணிபூரி, பேல்பூரி விற்க வந்தார்கள்...பொறுத்துக்கொண்டு, வாய்பிளந்து வாங்கித் தின்றார்கள்

சப்புக்கொட்டி.
மத்திய அரசுப் பணிகளில் வந்தார்கள்..
பொறுத்துக்
கொண்டார்கள

தமிழன் சாரங் கட்டி ஏற்றிய கோயிலில் தமிழனையும் தமிழையும் சேர்த்தே விரட்டினார்கள் பொறுத்துக்
கொண்டார்கள்

இலங்கையில் கொன்றார்கள் பொறுமை
கொண்டார்கள்

கச்சத்தீவு இல்லை.
பொறுத்துக்
கொண்டார்கள்

அணுமின் நிலையம்
பொறுத்துக்
கொண்டார்கள்

கெயில் குழாய் பதிப்பு
பொறுத்துக்
கொண்டார்கள்

நியூட்ரினோ ஆராய்ச்சி
பொறுத்துக்
கொண்டார்கள் 

ஆத்து மணல் கொள்ளை/ மலைகள் குவாரி பொறுத்துக்
கொண்டார்கள.



ஆந்திராவில் கொன்றார்கள் பொறுத்துக்
கொண்டார்கள்

கர்நாடகாவில் எரித்தார்கள் பொறுத்துக்
கொண்டார்கள்

முல்லை பெரியாறில் விரட்டினார்கள் பொறுத்துக்
கொண்டார்கள்

இனி நீட் மூலம்  இங்குள்ள மருத்து மனைகளுக்கும் வியாபாம் மாதிரி சதி செய்து பின்வாசல் வழியாக வந்து விடுவார்கள். பொறுத்துக்
கொள்வார்கள். 

தமிழக மாணவர்களுக்கு திறமை குறைந்து விட்டது என தாமரைக் கட்சியினர் சொன்னார்கள் 

நாளை தமிழர்களுக்கு தமிழ் படிக்கவே தகுதியில்லை என்று ஹிந்தியை திணித்து தமிழை அழிப்பார்கள் பொறுத்துக்
கொள்வார்கள்

தமிழர்கள் நாமும் பொறுத்துக் கொள்ள பழகிக் கொள்ள சொல்வார்கள்,

 நமக்குத்தான்
இலவச அரிசியும், பொழுது கழிக்க நூறு நாள் வேலையும், களைப்பு நீங்க சரக்கும், திரையில் சினிமாவும், சண்டையிட்டு சாக சாதி வெறியும் எளிதாக கிடைக்கிறதே.

இப்படிக்கு

*சாதி மதத்தால் பிளவுபட்டு, தனித்தொன்மை வரலாற்றின் வீரமும் மானத்தையும் இழந்து அழிவின் விளிம்பில் நிற்கும் ஒரு நாதியற்ற இனத்தின் மகன்.....!!!!!!!*

6 கருத்துகள்:

  1. தமிழனை ஆள இன்னொரு இனத்தான் வந்தாலும் பொறுத்துக் கொள்வார்களோ :)

    பதிலளிநீக்கு
  2. வந்தவர்களை வாழ வைத்து வாழ வைத்து,
    நாமும் வாழ வேண்டும் என்பதை மறந்தே போனோம்

    பதிலளிநீக்கு
  3. உண்மை சவுக்கடி வார்த்தைகள்.

    பதிலளிநீக்கு
  4. பொங்கி எழும் உள்ளத்து உணர்வுகளை
    தங்கள் பாவினில் கண்டேன்

    பதிலளிநீக்கு
  5. உலகத்து தொளிலாளிகள் சுரண்டபடுகிறார்கள் என்று கவலை கொண்ட பதிவரின் அகன்ற பார்வை, இன்று இந்திய தொளிலாளிகளால் தமிழர்கள் சுரண்டபடுகிறார்கள் என்ற நிலைக்கு வந்து நிற்கின்றது.
    வீர தமிழிச்சி ஜூலியான தமிழக முதல்வராகி வலிப்போக்கனரின் குறைகளை தீர்க்க வேண்டும் என்று கடவுளாரை பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு

“மார்ச் 8 உலக மகளிர் தினம்-”

                                                              கிளாரா ஜெட்கின். உண்மையான ஜனநாயகம், சமத்துவம் நோக்கி மனிதகுலத்தை முன்னெடுத்துச...