*பிள்ளையாரை போட்டுடைத்த பெரியார்:* *நீதிமன்ற விவாதம்*
*பிள்ளையாரை போட்டுடைத்த பெரியார்: நீதிமன்றத்தில் சுவையான விவாதம்!*
*பெரியார் பிள்ளையாரை போட்டுடைத்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்…*
*நீதிபதி (கைது செய்த காவலரிடம்): இவர் என்ன குற்றம் செய்தார்?*
*காவலர்: இவர் பிள்ளையாரைப் போட்டுடைத்தார்.*
*நீதிபதி (பெரியாரிடம்): பிள்ளையாரைப் போட்டுடைத்தீர்களா?*
*பெரியார்: ஆமாம், போட்டுடைத்தேன்.*
*நீதிபதி: ஏன் அப்படிச் செய்தீர்கள்?*
*பெரியார்: கடைவீதிக்குப் போனேன். அங்கு பிள்ளையார் சிலையை விலைக்கு வாங்கினேன். யாருக்கும் இடையூறு இல்லாமல், தெரு ஓரமாகப் போட்டுடைத்தேன்.*
*நீதிபதி: ஒரு மதத்தவர் வணங்கும் கடவுளைப் போட்டுடைப்பது அவர்களது மனதைப் புண்படுத்தாதா? அது தவறல்லவா?*
*பெரியார்: நான் பிள்ளையார் சிலையை வாங்கும்போது, பலர் அதேபோல வாங்கினார்கள். அவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள் என்று கேளுங்கள்.*
*நீதிபதி (காவலரிடம்): மற்றவர்கள் என்ன செய்தார்கள்?*
*காவலர்: அவர்களும் போட்டுடைத்தார்கள்.*
*நீதிபதி: அவர்களை ஏன் கைது செய்யவில்லை?*
*காவலர்: அவர்கள் “கடவுள் உண்டு” என்று சொல்லி உடைத்தார்கள். ஆனால் இவரோ, “கடவுள் இல்லவே இல்லை” என்று சொல்லி உடைத்தார்.*
*நீதிபதி: இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? “கடவுள் இல்லை” என்று சொல்பவர் உடைப்பதில் அர்த்தம் உண்டு. “கடவுள் உண்டு” என்று சொல்பவர், அவர்கள் வணங்கும் கடவுளையே உடைப்பது நியாயமா? (பெரியாரை பார்த்து) அய்யா, நீங்கள் போகலாம்.*
நல்ல வேளை,இந்த வழக்கு நடந்தது அந்த காலத்தில் :)
பதிலளிநீக்குsuper
பதிலளிநீக்குஅன்று நீதி"மான்கள்" இருந்தார்கள்.
பதிலளிநீக்குஇன்று சல்"மான்கான்" இருக்கிறார்கள்.
நல்ல வேளை!த ம 4
பதிலளிநீக்கு