புதன் 09 2017

மூதேவி பெற்றெடுத்த நானூறு கொள்ளையர்கள்

அந்தக் காட்டை
ஆட்சி செய்த
கோமாளி ஒரு
கட்டத்தில் பேச
முடியாத ஊமையாகி
செத்த போன
பிறகு கோமாளியின்
அந்தப்புர நாயகிகளில்
இருவரில் முதலில்
வந்தவர் அந்தக்
காட்டின் ஆட்சி
கட்டிலில் அமர்ந்த
சில நாளில்
கோமாளியின் இரண்டாவது
அந்தப்புர நாயகி
ஆன மூதேவி
முதல் நாயகியின்
கட்டிலை கவிழ்த்து
தானே கோமாளியின்
உண்மை நாயகி
என்று அறிவித்து
ஆட்சிக் கட்டிலில்
அமர்ந்து நாட்டின்
குடி மக்களை
குடிகார மாக்களாக
ஆக்கியதோடு தன்
பங்கிற்காக நானூறு
கொள்ளையர்களை பெற்று
திடிரென்று செத்து
போனது இன்று
அந்தக் காட்டை
நானூறு கொள்ளையர்களும்
நானூறு பிரிவாக
பிரிந்து வட்டம்
குட்டம் என
ஆட்சி செய்து
கொண்டு இருக்கிறார்கள்.
செருப்பு  ஆண்டு
பின் கோமாளி
வந்து அடுத்து
மூதேவி போன்றவை
ஆண்ட போது
பெருமையாக பூரித்து
புளகாங்கிதம் அடைந்து
 கொண்ட அந்தக்
காட்டில் வாழும்
காட்டுவாசிகள்
பெரும்பானோர்  நானூறு
கொள்ளையர்கள் ஆள்வதையும்
கண்டும் கேட்டும்
மௌனமாக ரசித்துக்
கொண்டு இருக்கிறார்கள்





5 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...