“தண்டிப்பது யாருங்க”
விகடன் |
திருவேற்காடு பகுதியை சேர்ந்த நர்ஸ் ரேணுகா என்பவர் தனது வீட்டில் கழிப்பறை கட்டியதால் பக்கத்துவீட்டு அமிர்தவல்லியோடு தகராறு ஏற்ப்பட்டதனால் போலீசு இன்ஸ்பெக்டரும். போலீசு சப்பு இன்ஸ்பெக்டரும் சேர்ந்து நர்ஸ் ரேணுகாவையும் அவரது கணவரையும் போலிசு ஸ்டேசனுக்கு வரவழைத்து பக்கத்து வீட்டு அமிர்த வல்லிக்கு ஆதரவாக தகாத வார்த்தைகளால் திட்டி விபச்சார வழக்கில் உள்ளே தள்ளுவேன் என்று மிரட்டியதால் மிரண்டு போய் அந்த ஸ்டேசன் முன்பே தீக்குளித்து தற்கொலை செய்து எரிந்துபோயி சாவதற்கு முன் வாக்குமூலம் கொடுத்து இறந்துவிட்டார்.
தலைப்பைச் சேருங்கள் |
இது ஏதோ அபூர்வமாக நடந்துவிட்டதாக சொல்லப்படும் கதை அல்ல... ஒவ்வொரு போலீஸ் ஸ்டேசனும் இப்படித்தான் இருக்கின்றன.
1983லிருந்து 2018வரை என்னுடைய வீட்டுப் பிரச்சினையில் என் பகுதி காவல்நிலையம் ஒரு துளி அளவு கூட நேர்மையாக நடந்ததாக வரலாறு கிடையவே கிடையாது..ஐந்து வருடத்துக்கு முன் என் வீட்டுக்கு என் இடத்தில் கழிப்பறை கட்டியபோதும் சரி, தற்போது பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க விடாமல் தடுத்ததுவரை மக்களின் நண்பனாகவோ..? சட்டத்தின் படியோ நடக்கவோ இல்லை..

நர்ஸ் ரேணுகா தேவி பெண் என்பதால் விபச்சார வழக்கில் உள்ளே தள்ளுவேன் என்ற மிரட்டலை எதிர் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து விட்டார்.
நானோ... பலத்கார- மானபங்க வழக்கில் என்னை உள்ளே தள்ளிவிடுவேன் என்று என்னை மிரட்டிய போது....பாதாள சாக்கடை இணைப்பே வேண்டாம் என்றும்..போலீசின் பொய் வழக்கால் ஏற்படும் கைது,சிறை போன்றவற்றால் ஏற்படும் செலவிலிருந்தும் மன உளச்சலிருந்தும் பின்வாங்கி நீதிமன்ற கதவை தட்டிக் கொண்டு இருக்கிறேன். இன்னும் அங்கு கதவுகள் திறந்த பாடில்லை.
போலீசு கடுமையான பணிச்சுமையில் இருப்பதால்.. போலீசு நேர்மையாக நடந்து கொள்ளாது என்று போலீசுக்கு ஆதரவானவர்கள் சாக்கு- போக்கு சொல்வார்கள், எனக்கு எனது அனுபவத்தில் போலீசு என்றாலேஆத்திரமும் வெறுப்பும்தான் உள்ளது...
தற்காப்புக்குதான் ஒன்றிரண்டு தடவை போலீஸில் புகார் செய்துள்ளேனே தவிர மற்றவை..எல்லாம் என் இடத்தில் ஆக்கிரமிப்பு,என் இடத்தை என்னையே பயன்படுத்துவதை தடுப்பது போன்ற பெரும்பாலானவை என் மீதான பொய்புகார்களே... சிலதுகளின் அபதாரமும் பலதுகளில் பின்வாங்கலுமே... நடந்துள்ளது...

எனது அனுபவத்தோடு நாட்டில் நடக்கும் மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்து நசுக்கும் இந்த போலீசு படையை திருத்துவது எப்படி? தண்டித்தால்தானே திருத்த முடியும்...திருடன்கள் கொலைகாரன்கள். போன்றவர்களை திருத்தத்தானே தண்டித்து வருடக்கணக்கில் சிறை வைக்கிறார்கள். இந்த சமூக அமைப்பில் இவர்களை தண்டிக்க முடியுமா??
தண்டிப்பதற்க்கான வழியாவது உண்டா..?????????
மக்கள் வாக்கின் தன்மையை உணராதவரை கீழ்மட்டத்தில் உள்ள எல்லோரும் கஷ்டப்பட்டே தீரணும் நண்பரே
பதிலளிநீக்குபோலீசும் அரசியல்வாதிகளும் பயிரை மேயும் வேலிகள்.
பதிலளிநீக்கு//எனது அனுபவத்தோடு நாட்டில் நடக்கும் மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்து நசுக்கும் இந்த போலீசு படையை திருத்துவது எப்படி? தண்டித்தால்தானே திருத்த முடியும்.//
பதிலளிநீக்குமிகவும் சரி.இந்திய போலீஸ் என்பது தனது சொந்த நாட்டு மக்களை கொடுமைபடுத்தும் ஒரு அமைப்பாகவே இதுவரை இருந்து வருகிறது.
இந்த கொடுமை, அவசியம் மாற்றபட வேசண்டும். தனது சொந்த நாட்டு இந்திய மக்களுக்கெதிராக கொடூரங்கள் செய்யும் இந்திய போலீஸ் கடுமையாக தண்டிக்கபட்டு திருத்தி அமைக்கபட வேண்டும்.