புதன் 05 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-80.



Image result for மணல் கொள்ளை





மாப்ள....ஒரு நிமிசம் என்று ஒரு விரலை காட்டி அழைத்தார் அவர். அருகில் சென்று சென்று என்ன..மாமா என்றார்.

“இந்தா... இவிங்க ஆராய்ச்சிய..கொஞ்சம் தீர்த்துவிடேன்..”


“தீர்த்துவிட்டா போச்சு...!  என்ன ஆராய்ச்சி..சொல்லுங்க....!!

“ ஏய்..அங்கப்பா.... சொல்லுடா....உங்க ஆராய்ச்சிய.. மாப்ள  தீர்த்து விடுவாறு...??


“அது வந்து மாப்ள.....”

“டேய் லூசு...ஓன் கண்ணுக்கு அண்ணன் முறையெல்லாம் மாப்ளயா...தெரியவதிலிருந்தே... தெரியுதுடா...ஓம் சாராய புத்தி....” நான் சொல்றேன் கேளு மாமா...,


“சரி யாராவது  சொல்லுங்க.....”

ஏ......ரெண்டு பேரும் இருங்க....நான் சொல்றேன்... அதாவது மாப்ள...திருச்சியில முக்கொம்பு அண இடிந்ததுக்கு காரணம். கண் திஷ்டியிலா..? மணல் கொள்ளையிலா? எதனால இடிந்தது... அதான் இவிங்க ஆராய்ச்சி.......”

“ ரெண்டு பேரும் எந்தக் கட்சிய சார்ந்தவுக......மாமா”

“ ஒனக்கு தெரியாத மாப்ள...இவே...ஆத்தா கட்சிக்காரன், அவே அய்யாக் கட்சிக்காரன்..” அவுக அவுக காட்சிக்காரங்க சொல்றத ஆராய்ச்சி பன்றாங்கே மாப்ள...

“நா ..உள்ளத சொல்லுட்டுமா....மாமா...”

“ அதுக்குதானே மாப்ள.... உன்னட்ட கேட்கிறது..” சும்மா சொல்லு மாப்ள...”



“ மாமா..ஆத்தாக் கட்சிக்காரனவிட..அய்யாக் கட்சிக்காரனுக்கு கொஞ்சுன்னு பகுத்தறிவு இறுக்கிறதால.... அய்யாக் கட்சிக் காரரசொல்வதில்தான்...உண்மை இருக்கிறது.  மாமா...”

“ இத நான் ஒத்துக்க மாட்டேன்... உங்க மாப்ள... ஒங்களுக்கு ஜாயிண்டா சொல்றாரு... இத..ஒத்துக்க மாட்டேன்... உங்க மாப்ளக்கு கண் திஷ்டியப்பத்தி அவ்வளவா அனுபவமில்லேன்னு தெரியுது...”

“ஙே.... அண்ணே..... புது சட்ட.பேண்ட் போட்டு..ஒங்க ஏரியாவுல அஞ்சாறு தடவ சுத்து ரெண்டே நாள்ல..நீய்யி காய்ச்சல்ல விழுந்துடுவே....நா.. கண்ணேர்பட்டு உடம்புக்கு முடியாம விழுந்திருக்கேன் தெரியுமா?  அது எனக்குத்தான்
தெரியும் அதனால... முக்கொம்பு அண உடஞ்சது  கண்ணேர் பட்டுதான்..”

அட....பாத்தீயா...... ஆரம்பிச்சு்“டாண்டா...

“ மாப்ள..நீ  கிளம்பு .... ஆத்தா கட்சிக்காரனுங்கள பத்தி.... நீ... சொன்னதுதான் கரைட்டு.....” மண்ணு முட்டி பயல்க.....!!

3 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...