புதன் 12 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-85.

கொலைகள் செய்யாத அபிராமிகள்.................


Image result for நாட்டுக்கட்டை







வெறும் ரோசம்மா என்றால் ஒருவருக்கும் தெரியாது.. நாட்டுக்கட்டை ரோஸ் என்றால்தான் பலருக்கும் தெரியும்.  கிராமத்திலிருந்து நகரத்தின்  சேரிப்பகுதிகளுக்கு குடி வந்ததுதான்.. சேரிப்பகுதியிலுள்ள  தெரு நாட்டாமைகள்  மற்றும் நாட்டாமையின் அளவுக்கு தகுதியிலுள்ளவர்களுக்கு நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும். இந்த நாட்டுக்கட்டை ரோசம்மாவை சைடாக..அதாவது வைப்பாட்டியாக வைத்துக் கொள்வதற்கு தெரு நாட்டாமையும் தெருக் கோயிலின் பூசாரிக்கும்  வீடு வாங்க,விற்க தொழில் செய்யும் புரோக்கருக்கும்  உசிலம்பட்டி சாதிவெறியர்களின் வெட்டு குத்து கதையை மிஞ்சிய தெருப்போரே நடந்தது..

அந்தளவுக்கு கள்.சாராயம் , குடிக்காதவர்களைக்கூட போதையேற்றும் உடல் வாகு அமைப்பை பெற்றவர் அந்த நாட்டுக்கட்டை..

இந்த நாட்டுக்கட்டை  அய்ந்து பெண் பிள்ளைகளும் ஒரு ஆணும் பெற்றெடுத்தது.. பெரும்பாலும் கிராமத்திலிருந்து நகரப் பகுதிக்கு வருபவர்களுக்கு உத்தரவாதமான வேலை ஒன்று உண்டென்றால் அது கட்டிட சித்தாள் வேலைதான்..நிரந்தரமாக ஒதுக்கப்பட்டுருக்கிறது. நாட்டுக்கட்டையும் அவரது கணவரும்  இந்த வேலையை பார்த்துதான் ஆறு குட்டிகளையும் பெற்று  வளர்த்துவிட்டனர்.

முதல் பெண் குட்டியானது... தன்னுடன் வேலை பார்க்கும்  வேலை பார்த்த கொத்தனாருடன் பழக்கம் ஏற்பட்டு..வயிற்றில் ஏற்றிக்கொண்டது தெரிந்ததும். கொத்தனார் ஏற்கனவே மணம் முடித்தவர் என்று தெரிந்ததும் தங்கள் உறவுக்கார பையனுக்கு மணம் முடித்துவிட்டனர்.. அது இரண்டு குட்டிகளை ஈன்று அது குடியிருக்கும் தெருவிலே.. தன் கணவனுக்கு. தெரிந்தே ஒரு பெரிய புள்ளிக்கு துணையாக இருந்து  தன் கணவனு்டன் பெரிய வட்டி தொழில் செய்து வருகிறது.

இரண்டாவது பெண் குட்டியும் சித்தாள் வேலைதான்... இந்த குட்டி முதல் குட்டியை போல் ஏமாறமல்... வீட்டார் ஏற்பாடு செய்த கணவனை விரட்டி விட்டு  திருமணமாகி நாலு குழந்தைக்கு தந்தையான கொத்தனாரையே   போலீஸ் ஸ்டேசன் மூலம் கரம்பிடித்து  ரெண்டு ஆண் குட்டியை ஈன்றது.

மூன்றாவது குட்டியும்  மேலே கூறியது போன்றே... ஆனால் சிறிது மாற்றம்  தன்னுடன் நிமிந்தால் வேலை செய்தவனை காதலித்து  திருமணம் முடித்தது. அந்த திருமணத்தை முடித்து வைத்தவரு கட்டிட காண்ட்டிராக்டர்.  ரெண்டு ஆண் குட்டிகளை ஈன்றது. ஒருநாள் கட்டிட காண்டிராக்டருடன் சேரந்து இருப்பதை பார்த்த கணவன் தற்கொலை செய்துவிட்டபடியால்..சுதந்திரமா கட்டிட காண்டிராக்ருடன் நட்பாய் இருந்து வருகிறது.

நாலாவது..குட்டி ரெம்ப மாநிறம் போதாகுறைக்கு உடலெல்லாம் மஞ்சுள் பூச்சு.. பார்ப்பதற்கு நாட்டுக்கட்டையைவிட ரெம்பவும் தூக்கலாக இருக்கும். இதுக்கு யாரிடமும் காதல்கீதல் எதுவும் இல்லை... இது வேலை செய்யும் பில்டிங் ஒனர் முதல் ஒனரின் மகன் வரை பயன்படுத்திக் கொண்டார்கள். அதன் பயனமாக வயிறு பெருத்து.கலைக்க முடியாத தரணத்தில் பில்டிங் ஓனர் நாட்டுக் கட்டையையும் அவரது வீட்டுக்காரரையும் அழைத்து பேசி .ஒரு  குறிப்பிட்ட ஒரு தொகையை கொடுத்து போலீஸ் அது இது என்று செல்லாமல் பிரசவ செலவு எல்லாவற்றையும் அவரே பாரத்துக் கொண்டார்.

நாலாவது குட்டி ஈன்ற குட்டி ரெம்பவும் கொழு கொழுவென்றும் ரத்தக் கலரில் இருந்ததால். அந்த குழந்தையை வாங்க பலர் போட்டி போட்டதாக செய்தி.. கடைசியில் பிரவசம் பார்த்த மருத்துவமனை மூலமாக நல்ல விலைக்கு விற்கப்பட்டதாக தகவல்...சில மாதங்கள் கடந்து மாப்பிளை பார்த்து திருமணம்
முடித்து அவருக்கு ஒரு பிள்ளையை பெற்றெடுத்து.. அவனை வேண்டா மென்று துரத்திவிட்டு, மீண்டும் சித்தாள் வேலைக்கு சென்ற இடத்தில்... திருமணமாகி ரெண்டு பெண் குழந்தைகளை விட்டு ஓடிவந்த கொத்தனார் ஒருவனை சேரத்துக் கொண்டு அவனுக்கு ரெண்டு குட்டிகளை ஈன்றது.

அய்ந்தாவது ஆண்....அவன் தன் உறவுக்கார பெண்ணுடன் சிநேகமாய் இருந்து ஓடிப் போக இருந்தவனை  பெண் வீட்டார்கள் விரட்டி பிடித்து அவனுக்கே கட்டி வைத்துவிட்டனர். அந்தப் பெண் இரண்டு பெண் குட்டிகளை ஈன்றவுடன் அவுக ஊரிலுள்ள பெரிய புள்ளிகளுடன் சிநேகமாய் இருப்பதை கண்டும் காணாமல் தண்ணியடித்த பொளந்து கிடக்கிறான்..

ஐந்தாவது பெண்... இதுதான் படித்தப் பெண்.... இது படிக்கும் காலத்தில் தெருவில் உள்ள பையனுடன்  காதல் மொழி பேசிக் கொண்டு இருந்ததை.பையனுடைய வீட்டாளுக்கு தெரிந்ததால் பையனுக்கு தடை போட்டு விட்டார்கள்.... பத்தாவது வரை படித்துவிட்டு,  மாங்கல்ய திட்டத்தில் நூற்பாலைக்கு வேலைக்கு சென்றதில்.. எப்படியோ வயிற்றில் ஏறிவிட கலைப்பதற்கு முடியாமல்  பிறந்த குழந்தையை  குழந்தையில்லாதவர்களுக்கு கொடுத்துவிட்டனர்...பின் ஊனமுற்ற ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து .. ஒரு பிள்ளை பிறந்தவுடன்.  அந்தப்பிள்ளையை அவனிடமே கொடுத்துவிட்டு... அவனின் உறவுக்கார  ஒருவனுடன் குடும்பம் நடத்தி.. ஆண் ஒன்று பெண் ஒன்று இரண்டு குட்டிகளை ஈன்று  காலத்தை ஒட்டிக் கொண்டு இருக்கிறது.

இந்த லட்சணத்தில்.. கொலை செய்யாத அபிராமியான நாட்டுகட்டை ரோசம்மாவும்..அது ஈன்ற குட்டிகளும்.. தன் ஒழுக்கத்தைப் பற்றியும் தன் குட்டிகளின் ஒழுக்கத்தைப் பற்றியும் தெரியாதவர்களிடம்.. தான் அப்படியாக்கும்... இப்படியாக்கும் என்று தப்படிப்பதோடு நில்லாமல்..மற்றவர்களின் ஒழுக்கத்தை பற்றி புறம் பேசி  வருகிறதுகள்....

2 கருத்துகள்:

  1. சமூகத்தில் மிக உயர்ந்த குடும்ப சரித்திரத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமூகத்தில் உயர்ந்த குடும்ப சரித்திரம் இன்னும் நிறையவே இருக்கிறது..நண்பரே....அவ்வப்போது பகிர்ந்து....தெரிவித்துக் கொள்கிறேன் நண்பரே...

      நீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...