நண்பர் சொன்னதில் தாமதமாக ரசித்தது........
தமிழ் வலை தளத்தில் பிரபலமாக உள்ள மீசைக்காரர் |
தமிழ் வலை தளத்தில் பிரபலமாக உள்ள மீசைக்கார நண்பரின் ஊர்க்காரர் அவர்.. ராமநாதன்னு பேரு.. தற்கொலைக்கு முயன்று சாகப் போனவரை தன் நகைச்சுவையால் தடுத்து காப்பாற்றியவராம். அப்படிப்பட்ட நகைச்சுவைக்காரரின் நகைச்சுவை சொற்பொழிவை...
முன்னோரு காலத்தில் வேலை செய்த காலத்தில் நண்பராக இருந்தவர் ஒருவர் . என்னைப்பற்றி நன்கு அறிந்தவர். அவர் மதுரையில் நடந்த பிரிண்டிங் கண்காட்சிக்கு சென்று...அலைந்த களைப்பில் ..குளிருட்டப்பட்ட அரங்கத்தில் நடந்து கொண்டிருந்த சொற்பொழிவை கேட்க அல்லாமல் ஓய்வுக்காக உள்ளே சென்றவர்.
நகைச்சுவை சொற்பொழிவை ஏதேச்சையாக கேட்டுருக்கிறார். தேவகோட்டை ராமநாதன் பேசப் பேச...கேட்டுக் கொண்டிருந்த நண்பருக்கு சிரிப்பு தாள முடியவில்லை.... பேசிய நகைச்சுவையை கேட்டபோது நண்பருக்கு எனது ஞாபகம்தான் வந்தது என்று எண்ணிடம் ராமசத்தியம் அடித்துச் சொன்னார்.....
அவர் சொன்னதை உங்களுக்குச் சொல்கிறேன் சிரிப்பு வந்தால் சிரியுங்கள்.. சிரிப்பு வரவில்லை என்றால் என்னை கோபிக்காதீர்கள்.
வாழ்க்கையில் துனை எவ்வளவு முக்கியமோ...அதுபோல் எழுதுகிற எழுத்திலும் அந்த துனை எவ்வளவு முக்கியம் என்று விளக்கியதோடு அந்த துனை ஆனது இடம்மாறி வந்தால் எவ்வளவு சிரமம் என்று எடுத்துரைத்தார்.
பத்திரிக்கைகளுக்கு மாத சந்தா அனுப்பாமல் இருக்கிறவர்களுக்கு அந்த பத்திரிகை அலுவலகத்திலிருந்து நிணைவூட்டும் கடிதம் அனுப்புவதில்.. எங்களின் இதழ்களை தொடர்ந்து படித்து வருவதற்கு நன்றி!.. தங்களுக்கு தொடர்ந்து இதழ் கிடைக்க, எங்கள் மனம் குளிர விரைவில் எங்கள் அலுவலக முகவரிக்கு சாந்தாவை அனுப்பி வைத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்...என்று இருந்தால் எப்படி இருக்கும்” என்று சொல்லி கலகல வென்று சிரிக்க வைத்தாராம்...ராமநாதன்.
நண்பர் சொல்லி விட்டு அவராக சிரித்தார்..முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை... என்னது..நுீண்டநாள் கழித்து சந்திக்கும் நண்பர் என்னை இப்படி இம்சைக்குள்ளாக்குறாறே... என்று தோன்றியது.....
நண்பரும் நான் சிரிக்காததை...என்னடா இவர் ரசிக்கத் தெரியாதவரா இருக்காரே.. இவரிடம் சொல்வதற்காக இவ்வளவு மெனக்கெட்டோம. என்று யோசித்தார்.....
எமக்கு...அப்பேயிலிருந்து..இப்பேல வரைக்கும் எதுவும் சட்டென உடனே புரியாது... சில நேரம், சில நாள், சில மாதம், ஏன் பல வருடங்களுக்குப் பின்புதான் விசயம் புரியும்...
அதுமாதிரிதான்.. தேவகோட்டை ராமநாதனின் துனை..அதாவது எழுத்தின் துனைக்கால்கள் பற்றி இந்தப் பதிவுக்கு முன்புதான் புரிந்தது..... பத்திரிகை அலுவலகத்துக்கு விரைந்து சாந்தாவை அனுப்பி வைக்கவும் என்ற பொருள்.
பொருள் புரிந்தவுடன் சிரித்தேன் நண்பருக்கு போன் போட்டு, பொருள் புரிந்ததை சொன்னேன்... நண்பரோ...“அடேங்கப்பா அருணாசலம்” என்று தொனியில் வெளுத்து வாங்கி விட்டார்.....
என்ன செய்ய ....நான் விரும்பாவிட்டாலும் எனக்கு கிடைப்பது/ கிடைத்தது கடைசி பெஞ்சுதானே........
சரி நண்பரே அந்த சாந்தா இப்ப எங்கு இருக்கிறார் ?
பதிலளிநீக்குசந்தாவை அனுப்பி வையுங்கள் என்பதற்குபதிலாக... துனைக்கால கூடுதலாக போட்டதால் சாந்தாவை அனுப்பி வைக்கவும் என்று அர்த்தம் மாறி விட்டது... சத்தியமாக எனக்கு சாந்தாவை பற்றி தெரியவே தெரியாது நண்பரே...
நீக்குசந்தாவா சாந்தாவா
பதிலளிநீக்குஎனக்குத் தலை சுற்றுதே!
சாந்தா சந்தா கட்டவில்லையாம் நண்பரே அதனால் சாந்தகுமார் புகார் செய்து விட்டாராம்.
நீக்குசந்தாவைத்தான்...தவறி சாந்தான்னு துனைக்கால் அச்சுப் பிழையாம் நண்பரே....மீசைக்கார நண்பரின் ஊருக்காரரு உங்களை் தலையை சுற்ற வைத்துவிட்டதுக்கு..நம்ம மீசைக்கார நண்பரிடம் சொல்லி வையுங்கள் நண்பரே...
நீக்கு