திங்கள் 17 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-88.

அந்த நாள் நினைவுகள்..என் நெஞ்சில் வந்தது..


Image result for மிளகாய்Image result for மிளகாய்




பெத்துராஜ் கடைக்கு போவதற்கு  சங்கடமாகத்தான் இருந்தது. கடையில் அவர் இருந்தால் தைரியமாக போய் வாங்கலாம்.... அவருடைய வீட்டுக்காரம்மா இருந்து விட்டால்......இப்படியே சிந்தித்த வண்ணம் போனவன்.. அவர் கடைக்கு முன் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி கடைக்குள்ளே பார்த்தால்.... பெத்துராஜ் மனைவி...வேறு வழி இல்லை. அவரை பார்த்தபோது... ஒருவித கேலிப் புன்னகையுடன்...எனைப் பார்த்தார்...நான் சைகையால்  வண்டியில் கட்டும் வயர் என்று சொல்லி முடிக்கும் முன்  ரேப்பா  என்றார் கிண்டலாக..... தலையை மட்டும் ஆட்டி  விட்டு அவரைப் பார்த்தேன்.

சில நாட்களுக்கு முன் அவர் கடைக்கு சென்றபோது “ரோப்”“ என்பதற்கு மாறாக “ரேப்பு”  ஒன்னு கொடுங்க என்று  சர்வசாதரணமாக கேட்டேன்.. அவர் அதிர்ச்சியடைந்தவராக திரும்பவும்  என்னிடம் என்ன வேண்டும் என்று கேட்டார்.  நான் அதன் அர்த்தம் தெரியாமல்..“ அதாங்க வண்டியிக்கு பின்னால கயிறுக்கு ரப்பர் மாதிரி இழுத்தா வரும்ல” அந்த ரேப்பு ஒன்னு கொடுங்கன்னு கேட்டேன். ”களுக்” கென்று சிரித்தவர். நான் கேட்டதை கீழே குனிந்து எடுத்துக் கொடுத்தார். நான் வாங்கிக் கொண்டு கடையைவிட்டு நகரும்வரை சிரித்துக் கொண்டே இருந்தார்..

அவருடைய சிரிப்புக்கு அர்த்தம் புரியாமல் விழித்தேன்.. தாடியோடு திரிந்த நான் சேவிங் செய்து கூலிங் கிளாஸ் கண்ணாடி அணிந்திருப்பதை பார்த்து சிரித்திருப்பார்கள் என்று நிணைத்தேன் அந்த நினைப்பு தப்பு என்று மறுநாள் தான் எனக்கு புரிந்தது. ரோப்புக்கு பதிலாக நான் ரேப்பு என்று கேட்டு இருக்கிறேன் என்று...ஒரு வழியாக அதை வாங்கிக் கொண்டு பண்டல்களை கட்டி டெலிவரி செய்யும் நேரத்தில் என் மருமகன் ..பெத்துராஜ் கடையில் வாங்கிய வயரை  ”ரோப்” என்று சொன்ன பிறகுதான். பெத்துராஜ் மனைவி சிரித்த சிரிப்புக்கு காரணம் தெரிந்தது.

 இன்னொரு ரோப்பு வாங்க வேண்டும் என்று நிணைத்தபோதுதான் எனது தர்மசங்கடத்தை  விவரித்தது.... இந்த தடவை சரியாகச் சொன்னபோதும் அவர் புன்னகை தாளாமல்.. என்னை பார்த்தபடியே கைகள் இரண்டையும் மேல தூக்கி தேடினார். அந்த சமயத்தில் முழுமையாக தெரிந்த அவர் மார்பகத்தை, பார்க்காமல்   தலை குணிந்து நின்றேன். அவர் பேசிக் கொண்டே என்னை மேலே பார்க்கச செய்தார்.. சிறிது நேரத்தில் கடைக்க வேறு ஒருவர் வந்தவுடன் மேலே தூக்கிய கைகளை போட்டுவிட்டு  வந்தவர் கேட்டதை கொடுத்துவிட்டு... நான்  சரியாக  ரோப்பு என்று சொன்னதை .. ரேப்பைக் காணோமே..என்றபடி மீண்டும் கைகைளை மேலே தூக்க ஆரம்பித்தார் இருங்க... இருங்க...அன்றைக்கு கீழே இருந்து எடுத்துக் கொடுத்தீங்களே..அங்க பாருங்க...என்றபோது... மீண்டும் கிண்டல் புன்னகை மாறாமல் அவர் நெற்றியை தட்டியபடியே.. சிறிது நேர காத்திருத்தலுக்கு பின்.. நான் கேட்ட ரோப்பை எடுத்துக் கொடுத்தார்.

இந்த சம்பவம் என் பள்ளிப் பருவத்தில் நான் வாய் உளறி கொட்டிய நினைவுகளை கிளறி விட்டதோடு... கடை அண்ணாசியின் நினைவையும் தூண்டிவிட்டது.

நான் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்த காலம் என்று நிணைக்கிறேன். பள்ளிக்கு போகாமல் டிமிக்கு கொடுத்துவிட்டு ஊர் சுற்றி வந்த நான் பசி  பொறுக்க முடியாமல் வீட்டுக்கு வந்தபோது.. என் தாயார்  ஒரு நாளுக்கு முன் ஆக்கி வைத்திருந்த பழையது தண்ணியும் கஞ்சிமாக இருந்தது.

தொட்டுக் கொள்வதற்கு வெஞ்சனம்  .. தட்டுமுட்டியில் தேடியபோது   எதுவும் கிடைக்க வில்லை. அதனால்  நான் சோர்ந்து  போயி உட்காரமல் நெடுநாட்களாக என் டவசர் பையில் கிடந்த பத்து பைசாவை கொண்டு ஒரு பச்ச மிளகாயை வாங்கி நறுக்கென்று கடித்து.. இருக்கிற தண்ணியும் கஞ்சியையும் உள்ளே இறக்கி விடலாம் என்ற  முடிவோடு...

அண்ணாச்சி கடைக்கு சென்றேன். அங்கு இருவித மிளகாய்கள் இருந்தன.. ஒன்று  குண்டு மிளகாய், இன்னொன்று குச்சி மிளகாய்.. கையில் வைத்திருக்கிற பத்து பைசாவில் மிச்சம் பிடிக்க வேண்டும் என்ற நிணைப்பில் அண்ணாச்சிடம் விலை கேட்டேன்.

நான் எப்படி கேட்டனோ..அப்படியே... அண்ணாச்சியும் பேசினார்.. அண்ணாச்சி  இந்த குண்டு முல எவ்வளவு?  குச்சி முல எவ்வளவு என்று.... கடைசியல் குச்சியில ஒன்றும் குண்டுல ஒன்றுமாக வாங்கி வந்து நறுக்கென்று கடித்து அந்த உரப்பில் எல்லா தண்ணியையும் கஞ்சியையும் என் வயிற்றுக்குள் இறக்கி விட்டேன்.

குண்டு மிளகாய்..குச்சி மிளகாய் என்று நான் கேட்பதற்கு பதிலாக வெள்ளந்தியாய் நான் கேட்டதும்...அண்ணாச்சியும் நான் கேட்ட வாரத்தையிலே சொன்னதும் கடைசி பெஞ்சுக்காரனான எனக்கும் தெரியவில்லை அருகில் நின்றவர்களும் கவனிக்கவில்லை ..  ரோப்பு-வை ரேப்பு என்று கேட்திலிருந்து அந்த பழைய நினைவுகள் பச்சையாய் நினைவுக்கு வந்தது. இன்று நான் இருக்கிறேன்.  அண்ணாச்சி அவரில்லை.. ...

3 கருத்துகள்:

  1. அண்ணாச்சியின் நினைவுகளை எங்களுக்கும் மீட்டி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. இப்படியாய் எல்லோருக்குள்ளும் புரட்டிப்பார்க்க ஒரு இனிய நினைவு இருக்கிறதுதான்,தெரியாட்மல் பேசி விடுகிற வார்த்தைகள் எப்பொழுதும் சுட்டுவிடுவதில்லை,தெரிந்து பேசிவிடுகிற வார்த்தைகள்தான்சட்டென சுட்டுச்சென்று விடுகிறதாய்/

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...