வெள்ளி 12 2018

நினைவலைகள்-5.

 பாவிகள் நிறைந்த உலகில்................


Related image






படுப்பதற்கு ஒரு
இடம் இல்லா
மனிதர்களில் மத்தியில்

குடியிருக்க ஒரு
ஓலைக் குடிசை
எங்களுக்கு கிடைத்தது.

 ஆயிரம் ஓட்டைகள்
இருந்தாலும் கோடையில்
இதமாக இருக்கும்

மழைக் காலத்தில்
குட்டைக் குளமாகி
மீன் இல்லாத
தண்ணிரை இறைக்கும்
வேலை கிடைத்து
விடும் விடிய
விடிய பெய்யும்
மழையால் தாயும்
மகளும் மகனும்
மூவருமாய் மாறி
இரைத்த களைப்பினால்
மூலையில் ஓய்வாய்.........

மழை நின்றால்
ஈரத்தரையில் தூக்கம்
இல்லை என்றால்
தாமிரபரணி புஷ்கரத்தோடு
சிவன் ராத்திரியும்தான்

அந்த சிறு
ஓலைக் குடிசையையும்
அபகரித்து விரட்ட
ஒரு கூட்டம்..

மழை காலத்தில்
குடியிறுக்கும் வீட்டில்தான்
இப்படி என்றால்
டெங்குவால் செத்து
சுடுகாட்டிலாவது படுக்கலாம்
என்றால் அங்கும
 இடமில்லை என்று
எரித்து விடுகிறார்கள்..
பாவிகள் நிறைந்த
உலகில். புதைக்கவும்
இடமில்லை..........

4 கருத்துகள்:

  1. உண்மையின் நிலைப்பாடு இதுதான்.

    பதிலளிநீக்கு
  2. புதைக்கும் பழக்கமுள்ள கூட்டத்தாரையும் எரிக்கும்படி செய்துவிட்டது.. மிக மிக அதிகமான கூட்டம்..

    உண்மையாக சொல்வதென்றால் நாமும் பாவிகள் கூட்டத்தில் ஒருவர் தானே..

    அனைவரையும் புதைக்க வேண்டுமென்றால்... அடுக்குமாடி கட்டிடங்கள் போன்று.. அடுக்கு பாதாள சவக்குழிகள் திட்டத்தை அறிமுகம் செய்யலாம்..
    அதிலும் ஊழல் என்று குறை கூற மாட்டீர்கள் என்றால் நான் இத்திட்டத்தை முதன் முதலாக உலகிற்கு அறிமுகம் நமது அரசிடம் விண்ணப்பிக்கிறேன் :)

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...