செவ்வாய் 23 2018

அதிகாலை கனவு-7.

அம்மா இல்லையென்றாலும் விலகாத பயம்....!!!!



தூக்கத்தில் பயம் க்கான பட முடிவு





பாஸ் ..........எழுந்திருங்க  பாஸ்... விடிந்து விட்டது பாஸ்...


விடியட்டும்..பாஸ்,        இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமைதானே பாஸ்....சிறிது நேரம் துாங்கிக்கிறேன்  பாஸ்...... அதுவரைக்கும். நீங்கள் அதோ..அங்கியிருக்கும் புத்தகங்களில் எதையாவது எடுத்து படித்திகிட்டு இருங்க பாஸ்..........


“அம்மா  எழுப்ப சொன்னால்........”

“கண்டுகிராதிங்க...பாஸ்”


“..............சரிங்க......பாஸ்”

“ டேய்..... மணி எட்டாக போகுது, இன்னுமா...தூங்கிற....!!!. விடிஞ்ச பிறகும் என்னடா தூக்கம்.... எழுந்திருடா...... !!!!!!!!!!. எழுந்திருக்கப் போறீயா..இல்ல..நா....வரவாடா...”

----சட்டென  விழித்து படுக்கையை விட்டு எழுந்தேன்.. என் பால்ய வயது நண்பனையும் காணோம்..... சவுண்டு கொடுத்த என் அம்மாவையும் காணோம்.



பால்ய நண்பன் எழுப்பிய போது எழுந்திருக்க மறுத்த நான்.  என் அம்மாவின் குரலைக் கேட்டவுடன் பதறியடித்து எழுந்துவிட்டேன்..

என் தாயார் இறந்து மூன்று வருடங்கள் கடந்து விட்டபோதும் . தாயார்  இல்லை என்பது நன்கு தெரிந்த போதும் தாயார் மீதிருந்த பயம் மட்டும் இன்னும் விட்டுப் போகவில்லை என்பது ..சிறிது நேரத்திற்கு பின்புதான் எனக்கு புரிந்தது..




வடிவேல் பாணியில் சொல்வதென்றால்..பயம் என்னை விட்டுப் போகாது போலிருக்கே..........!!!!!!!!!

6 கருத்துகள்:

  1. மறைந்த பெற்றோர்கள் கனவில் வருவது எல்லோருக்கும் கிடைக்காது நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ..கனவில் வந்தாலும் பயமுறுத்திதான் வருவங்களா..!! பாஸ்...

      நீக்கு
  2. பதில்கள்
    1. சிறு வயதில் அம்மாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதால் வந்த பயத்தால் விளைந்த விளைவு என்று ஒரு நண்பர் சொன்னததான் எனக்கு சரி என்று தோன்கிறது நண்பரே...

      நீக்கு
  3. பயமில்லை சார்,உயரிய அன்பின் வடு அது,,,,/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயமில்லை என்றால்.. குரலைக் கேட்டவுடனே..சட்டுபுட்டுன்னு எழுந்திருக்க முடியாதுல சார்.. போம்மா..என்று அடம் பிடிக்கல்ல தோனும் சார்,....

      நீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...