புதன் 24 2018

அதிகாலை கனவு-8..

அவதி அவதியாய்.. ஒரு  கனவு...............!!!!!!


வைகையில் வெள்ளம் க்கான பட முடிவு



 வேலை  செய்து முடித்த பொருட்களை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு குறுகிய தெருக்களைக் கடந்து மெயின் ரோட்டுக்கு வந்துக் கொண்டிருக்கும்போது  பிடித்தது பெரு மழை... வண்டியை பாதுகாப்பாய் ஒரு கடையின் முன்னால் ஓரமாய் நிறுத்துகிறேன்.

சிறிது நேரத்தில் ரோட்டில் வெள்ளம். நடந்து சென்றவர்கள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்படுகிறார்கள்.  என்னருகில் வந்தவரை காப்பாற்றுவதற்க்காக  நீட்டிய  அவர் கைகளை பற்றுகிறேன்.  பலம் கொண்ட மட்டும் இழுத்துப் பார்த்தும் என்னால் அவரை இழுக்க முடியவில்லை. அதற்கு மாறாக....அவர் என்னையும் வெள்ளத்திலே இழுத்துவிட்டார்....

வெள்ளத்திலே எல்லோரும்  காப்பாற்ற சொல்லி சத்தம் போடுகிறார்கள்... நானும் சத்தம் போட முயலகிறேன்.. சத்தம் போட முடியவில்லை... ரோட்டைக் கடந்து பிரதான ஆற்றில் இழுத்துச் செல்லப்படுகிறேன். 

ஆற்றில் உள்ள படிக்கட்டுகளில்  பெண்கள் துணிகளை துவைத்துக் கொண்டு இருக்கிறார்கள்..நாங்கள் இழுத்துச் செல்லப்படுவதை கண்டும் காணாமல்  தங்கள் வேலைகளில் முழ்கிறார்கள்.

 இழுத்துச் செல்லப்பட்டமனிதர்கள் வெள்ளத்திலே  தனித்தனியாக  சிதறடிக்கப்பட்டார்கள்.. அப்படி சிதறடிக்கப்பட்ட வயல் வெளிகளிலே தள்ளப்பட்டேன்...

வயல் வெளியில் உள்ள ஓடையில் பலர் குளித்துக் கொண்டுருந்தார்கள். வெள்ளம் அவர்களை இழுத்துச் செல்லவில்லை என்னை மட்டும் இழுத்துச் சென்று வரப்பு ஓரமா உள்ள பள்ளத்தில் தள்ளிவிட்டது.

பள்ளத்துக்கு மேலே வரப்பு. அது ஒத்தையடி பாதையாக தெரிந்தது.. ஆட்கள் நடந்து செல்வது தெரிந்தது. சத்தம் போடுகிறேன்..சத்தம்  வரவில்லை. சிறிது ஆடு  கத்தும் சத்தமும் நாய் குரைக்கும் சத்தமும் கேட்டது அதைத் தொடர்ந்து மனிதர்கள் சலசலவென்று பேசும் சத்தமும் கேட்டது.

பள்ளத்தில் இருந்து மேலே பார்த்தபோது  ..வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டவரை காப்பாற்ற நான் கை கொடுத்தவர் என்னை காப்பாற்ற கையை நீட்டிக் கொண்டிருந்தார்.  அவரைப் போல் நானும் அவரை இழுத்துவிட்டால் என்ன செய்வது.என நிணைத்து.நான் கையை நீட்டாமல் இருந்தேன்.

என்னவோ சொன்னார்..மனிதர்களின் சலசலப்பில்  ஒன்றும்  புரியவில்லை. தலை குனிந்தேன். அடுத்த மணித் துளியில் பள்ளத்தில் மேல் ஒரு பகுதியிலிருந்து  தண்ணீர் வெள்ளமென பாய்ந்து பள்ளத்தை நிரப்பியது.

மேலே வந்த நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒருத்தரையும் காணவில்லை.
கண்ணுக்கு எட்டியவரை ஒரே வெள்ளக்காடாக இருக்கிறது. கரையையே காணோம்...காற்று மட்டும் வீசிக் கொண்டு இருக்கிறது..உடலெல்லாம் நடுங்கிக் கொண்டு இருக்கிறது... எது பள்ளம் எது மேடு என்று தெரியாமல்
தவித்த நேரத்தில் செல்போன் ஒலிக்கிற சத்தம் கேட்கிறது.  பேண்ட் பைக்குள் கையைவிட்டு செல்போனை எடுக்கிறேன். நனைந்து இருந்தது. தூக்கி வீசுகிறேன். விடாமல் போன் ஒலிக்கிறது..

தண்ணிரில் முழ்கி இருந்த கால்களை யாரோ இழுக்கிறார்கள். கால்களை பதறியடித்து இழுத்துக ் கொள்கிறேன்.. இப்போது கையை பிடித்து கொண்டு என் உடலை உலுக்கிறார்கள்.

திடீர் அதிர்ச்சி அடைந்து முழிக்கிறேன்..எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை...எதிரே இருவர் உட்கார்ந்திருக்கிறார்கள்..அண்ணே என்கிறார்கள்.  என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள்.. சிறிது சிறிதாக நிதானம் வருகிறது..

வந்தவர்கள் “ என்னண்ணே....நல்ல தூக்கமா..? என்றார்கள்...

ஆமாப்பா...நல்ல தூக்கம்தான்..உங்க வேலையை முடித்துவிட்டு தூங்குவதற்கு நேரமாகிவிட்டது..என்றேன். 

கைகால்கள் எல்லாம் அடித்து போட்டது போல் வலி எடுத்தது...



4 கருத்துகள்:

  1. மன ஓட்டங்களின் பிரதிபலிப்புதான் கனவு நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. நிகழ்விலிருந்து நினைவாகி கனவான...கனவை நினைவு படுத்தி நிகழ்வுக்கு திரும்பிய பின்னே சொல்வதே ஒரு பெரும் திறமை தான் அது உங்களுக்கு சிறப்பாய் கைகூடி உள்ளது.. தொடரட்டும் இப்பயணம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு நீங்கள் சொல்வது மாதிரியெல்லாம் திறமை இல்லை நண்பரே...எதோ.. நினைவுக்கு வந்ததை..தெரிந்ததை எழுதுகிறேன் நண்பரே...

      நீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...