செவ்வாய் 06 2018

நினைவலைகள்-15.

 நேரம் ஒதுக்கீடும்...!!!!!!!!!! பூ சுற்றும் வேலையும்

தீபாவாளிக்கு வேட்டு போடும் நேரம் காலை  ஆறு மணி முதல் ஏழு மணி வரையும் பின் மாலை ஏழு முதல் எட்டு மணிவரை நேரம் நிரண்யித்து இருப்பதை  நான் படித்த போது  அம்பேத்கர்  பேசிய பேச்சில்  நடந்த சம்பவம்தான் (படித்தது)  மறதி என்ற பாகுபாடு இல்லாமல்  என் நினைவுக்கு வந்தது.


ஸ்டெர்லைட்டால் காற்று மாசு க்கான பட முடிவு





பேஷ்வாக்கரின் ஆட்சியில், அவர்களின் தலைநகரம் பூனா( புனெ) அந்த நகருக்குள் பகல் ஒன்பது மணிக்கு முன்பும், பிற்பகல் மூன்று மணிக்கு பின்பும் தீண்டப்படாதவர்கள்  நுழையக்கூடாது.

இதற்கு காரணம் என்னவென்றால் காலை ஒன்பது முன்பும் மாலை மூன்று மணிக்கு பின்பும்  தீண்டப்படாதவர்களின் உருவ நிழல் நீளமாக இருக்குமாம்
அந்த நிழல் பார்ப்பனர் மீது பட்டால் அவர்கள் தீட்டாகி விடுவார்களாம்

ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுப்புறமே நஞ்சாகி. பலவித.. கொடிய நோய்களால் பதிக்கப்பட்டு குற்றுயிறும் கொலயிறுமாக செத்து கொண்டிருப்பவர்களை காக்க  ஸடெர்லைட் ஆலையை இழுத்து மூடு என்று அமைதியாக போராடியவர்களை துப்பாக்கி குண்டுகளால் 14 பேரை சகாடித்து விட்டு  இப்போ அதை திறக்க முயற்சி செய்துகிட்டு இருப்பதை மறைத்துவிட்டு... வேட்டு போடுவதால் காற்று மாசு படுவதாக சொல்லி இரண்டு மணி நேரம் ஒதுக்கினால் மட்டும் காற்று மாசு அடையாமல் நின்று விடுவது போல்  நல்லாவே காதில் பூ சுற்றுகிறார்கள்......

5 கருத்துகள்:

  1. அவர்கள் பூ சுற்றட்டும் நாமேன் காதைக் கொடுக்கவேண்டும் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம சும்மா இருந்தாலும் பூ சுற்றி விடுகிறார்களே! அதற்கு என்ன சொல்விங்க...

      நீக்கு
  2. எப்படி கொழுத்தினாலும் குறிப்பிட்ட நேரத்தில் என தடை போட்டாலும் அதது அப்படியே தான் நடக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்ல தடை இல்லை என்று சொன்னாலும் அதது அப்படியேதான் நடக்கிறதுங்க....

      நீக்கு
    2. ஆமாம் சும்மா கிடக்கும் சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி கதை தான்

      நீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...