ஞாயிறு 11 2018

நினைவலைகள்-18.

இரு  பார்வைகள்....


மச்சவதாரம் க்கான பட முடிவு








மீன் வியாபாரி
மாரியம்மாள் என்
வீட்டிற்கு வந்தார்
மீன் வாங்கச்
சொல்லி நான்
உத்தரவு விட
வேண்டினார் காசு
இல்லை என்ற
போது பிறகு
தாருங்கள் என்றார்

அய்யோ கடவுளின்
மச்ச அவதாரம்
சாப்பிட்டால் சாமி
குத்தம் ஆகிவிடாத
என்ற போது..

ஒன்றும் ஆகி
விடாது. சாட்சி
தானே என்றார்


பின் ஒரு
நினைவு வந்தது
மீனை வெள்ளக்காரனும்
 தமிழனும் பார்த்த
பார்வை  என்ன....



கடலிலே மீனைப்
பார்த்த வெள்ளைக்காரன்
சப்மரீன் செய்தான்

அதே கடலில்
மீனைப் பார்த்த
தமிழன் மச்சவதாரம்
என்று வணங்கினான்


----கலைஞரின் சந்தனக் கின்னத்திலிருந்து மாற்றி

9 கருத்துகள்:

  1. மீன் சாப்பிட்டீர்களா இல்லையா?

    பதிலளிநீக்கு
  2. சந்தனக்கிண்ணத்திலிருந்து மீன் வாசமா ?

    பதிலளிநீக்கு
  3. டார்வினுக்கும் முன்னே உயிரின் பரிணாமக் கொள்கையைக் கண்டுபிடித்தவர்கள் தமிழர்கள்தான். முதன் முதலில் நீரில் உயிர் தோன்றியது, பின் மெல்ல நீரிலும் நிலத்திலும் வாழும் உயிர் தோன்றியது, பின் நிலத்தில் வாழும் மிருகம், பின் மிருகத்திலிருந்து மனிதன் இதுதான் நம்மவர் கண்டுபிடிப்பு. பின்னாளில் வந்தவர்கள் இதன் ஒவ்வொரு கண்டுபிடிப்புகளுக்கு உள்ளும் ஒரு சாமியைப் புகுத்திவிட்டார்கள், அவதாரமாய் மாற்றினார்கள், நாமும் ஏற்றுக் கொண்டுவிட்டோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டுபிடித்தது தமிழர்கள்; சாமியை புகுத்தியது சமஸ்கிருதர்கள்.

      நீக்கு
    2. அவ்வளவு பெருமை மிக்க தமிழர்களை நினைக்கும்போது ரெம்பவும் பெருமையாக இருக்கிறது..ஆனால் இன்றைய தமிழர்களை நினைக்கும்போது வேதனையாகவும் இருக்கிறது...

      நீக்கு
  4. தமிழர்கள் மட்டுமல்ல.. அகிலம் முழுவதும் மக்கள் கதைகளுக்குத்தான் மிக முக்கியத்துவம் தருகிறார்கள், அதையே வாழ்வென்று நம்பி.. வாழ்வாக்கி வாழ்கிறார்கள்.. இடையில் நம்மைப் போல் சிலர் புலம்பிக் கொண்டே இருக்க வேண்டியது தான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த புலம்பலிலாவது மனது ஆறுதல் அடையதா என்ற ஒரு ஆசைதான் நண்பரே.....

      நீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...