புதன், நவம்பர் 14, 2018

நினைவலைகள்-19.

  தமிழ் மக்களை ஏமாற்றி விட்ட கம்பன்....


கம்பன் க்கான பட முடிவுமுன்னோரு காலத்தில் பசுமலை மேல் நிலைப்பள்ளியில் படித்த போது   தமிழ் பாட நேரத்தில் தமிழ் ஆசிரியர் சொன்னார்... கம்பனின் கவிதைகளில் அய்ம்பதை படித்தால் அவர்கள் ஒரு கவிஞானக ஆகலாம் என்று.

வகுப்பில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் கவிஞனாக ஆகும் ஆசையில் கம்பனின் கவிதையை மனப்பாடம் செய்து கொண்டு இருந்தனர்..அப்போதே அவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் கவிஞர் என்ற பட்டத்தை போட்டுக் கொண்டனர்.  நான் படிக்காமல் இருப்பதை கண்டு பலர் தமிழ் ஆசிரியரிடம் போட்டுக் கொடுத்தனர்

 தமிழ் ஆசிரியர் என்னை இரண்டு மொழி பேசுபவன் என்று அவராகவே முடிவு செய்து கொண்டு என்னிடம் கேட்டார். உன் தாய் மொழி என்ன என்று தமிழ்தான் என் தாய் மொழி அதில் கூட நான் தேறவில்லை அய்யா என்றபோது நம்ப மறுத்து  ஏன்? கம்பன் கவிதை  உனக்கு பிடிக்கவில்லையா? என்று கேட்டார்...

பிடிக்கவில்லை என்பதைவிட  கம்பன் கவிதை பாடப்புத்தகத்தில் நாலுவரி, ஐந்து வரியாக இருப்பதால் படிப்பதற்கு சிரமமாக இருக்கிறது. அய்யா..திருக்குறளை எடுத்துக் கொள்ளுங்கள் ரெண்டே வரி..படிப்பதற்கும் மனனம் செய்வதற்கும் எளிமையாக இருக்கிறது அய்யா.. என்றபோது.. என்னை மேலும் கீழுமாக பார்த்தவர்... சரி..உட்கார் என்றார்.. அதிலிருந்து அவர் வகுப்புக்கு வாந்தால் என்னைத்தான் தமிழ் புத்தக்தை வாசிக்கச் சொல்வார்.. நானும் பிழையில்லாமல் நிற்க வேண்டிய இடத்தில் நிறுத்தி அழகாக வாசித்துவிடுவேன்.. இடையிடையே அர்த்தங்களையும் கம்ப ராமாயண கதைகளையும் அவிழ்த்து விடுவார்... தமிழ் பாட வகுப்பு முடியும்வரை.. நானும் தமிழ் அய்யாவும் நின்று கொண்டே  இருப்போம்... பின்னாளில் அது எனக்கு தண்டனை தந்ததாக நினைத்துக் கொண்டேன்...


பிறகு பத்தாவதில் ஆங்கிலத்தில் பெயிலாகி அய்ந்து வருடம் படித்தபோதுதான் கம்பன் என்னை மட்டுமல்ல தமிழ் மக்களை ஏமாற்றியது எனக்கு தெரிந்தது.

திருவள்ளுவருடைய கொள்கைகளையும் அவரின் பாட்டின் அருமையையும், திராவிட நாடு பெற்றிருக்க வேண்டிய பலனையும் கம்பனது இராமாயணம் அடியோடு கெடுத்துவிட்டது. பார்ப்பன சூழ்ச்சிக்கு (அதாவது சமஸ்கிருதர்களின்)   பலியான கம்பனால்..இந்நாட்டில் நிலவிய திராவிடக் கலாச்சாரமே பாழாக்கப்பட்டுவிட்டது.

ஆரியப் பண்புகளையும் ஆரிய நடைமுறைகளையும் போற்றி புகழ்ந்து.. அவற்றை திராவிட மக்கள் ஏற்கும்படி அழகுத் தமிழில்பாடி தமிழ் மக்களை ஏமாற்றி விட்டான் கம்பன்..

 தமிழ் மக்கள் அனைவரும் ஒரே சாதி என்கிறது குறள். மக்கள் நாலு வர்ன சாதிகள் என்று சொல்கிறது இராமாயணம் (கீதையும்)

அன்று இயற்கையோடு இயைந்திருக்கக்கூடிய கருத்துக்களை கூறியது வள்ளுவரின் குறள்.. ஆனால். 

இராமாயணமும் (கீதையும்) அறிவுக்கு மாறான பல கட்டுக் கதைகளை காட்டுமிரண்டித்தனமான, நடந்திருக்க முடியாத. நடத்திக் காட்ட முடியாத சாத்தியமற்ற தாறுமறான கதைகளை கூறுகிறது.. நான் படிக்கும் காலத்தில் தமிழ் அய்யா கூறிய கதைகள் இன்றும் என் நினைவுக்கு வருகின்றன.

ஆரியக் கடவுள்கள் எல்லாம் ஒழக்கம் கெட்டவைகள்... பிறர் மனைவி மீது ஆசைப்படுவதும், பின் வஞ்சகமாக அனுபவிப்பதுதான் கடவுளின்  நடவடிக்கைகள். ஆரியக் கடவுள்கள் எல்லாம் முறைகெட்டவைகள்,

கடைசியாக எனக்கு தோன்றியது இதுதான்.

உண்மைத் திராவிடன் தீட்டியது திருக்குறள்
திராவிடத்துரோகி தீட்டியது இராமாயணம்...

அன்று தமிழ் அய்யா என்னை மேலும் கீழும் பார்த்தது... அவர் வரும் எல்லா வகுப்பு  நாட்களிலும் என்னை வாசிக்க சொல்லி என்ற போர்வையில் நிற்க வைத்தது எல்லாம் என் நினைவுக்கு  இப்போது வந்து ஆட்டம் போடுகிறது .

7 கருத்துகள்:

 1. உங்கள் கருத்தோடு ஒத்துப்போகிறேன்... நீண்ட இடைவெளிக்குப்பின் இப்போது தான் இப்பகுதியில் உருகி உருகி வழிபடும் சிவனின் அடியார்களான 63 நாயன்மார்கள் கதைகளை (பெரிய புராணம் - வசன வடிவத்தில்) வாசிக்கத் துவங்கி உள்ளேன். ஆரம்பமே அசத்தல் சமணர்கள் இயற்றிய சீவக சிந்தாமணி காப்பியக் கதையில் மயங்கிக் கிடந்த அநபாய குலோத்துங்க சோழ மன்னனை மீட்டெடுக்கவே பல ஆய்வுகள் செய்து சேக்கிழார் பெரியபுராணத்தை கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் எழுதி உள்ளார்... அதுவும் துவக்கத்திலேயே மனுவைத் தூக்கிப் பிடிக்கிறார். மனுநீதிச் சோழனின் கதை வாயிலாக.. அடுத்தாண்டு.. இப்புத்தகத்தை ஒலிவடிவில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளேன். மக்களின் விழிப்புணர்வுக்கு கொஞ்சம் உதவிகரமாக இருக்குமென்ற நம்பிக்கையில்.. என்னைப் பொறுத்தவரையில், எந்தக் கேள்வியும் கேட்காமல் மக்கள் வெறும் நம்பிக்கையில் மட்டும் வாழ்வதால் மாபெரும் வீழ்ச்சியை சிந்தனை அளவில் மட்டுமல்லாமல் வாழ்விலும் சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 2. //ஆரியப் பண்புகளையும் ஆரிய நடைமுறைகளையும் போற்றி புகழ்ந்து.. அவற்றை திராவிட மக்கள் ஏற்கும்படி அழகுத் தமிழில்பாடி தமிழ் மக்களை ஏமாற்றி விட்டான் கம்பன்..//
  தமிழில்பாடி தமிழ் மக்களை தானே ஏமாற்ற முடியும். எப்படி அவற்றை திராவிட மக்கள் ஏற்கும்படி ஏமாற்றினான் கம்பன்?

  //தமிழ் மக்கள் அனைவரும் ஒரே சாதி என்கிறது குறள். மக்கள் நாலு வர்ன சாதிகள் என்று சொல்கிறது இராமாயணம் (கீதையும்)//
  அப்படியாயின் தமிழ் மக்கள் அனைவரும் ஒரே சாதி என்கிறது குறள் சொன்னதை நிராகரித்து எதற்காக தமிழ் மக்கள் இராமாயணம் சொல்கின்ற ஜாதி வெறியை பின்பற்ற வேண்டும்?
  சூடு்கொண்டபள்ளி நந்தீஸ், சுவாதி தம்பதிகளை ஜாதி வெறிக்காக இப்போதும் தமிழர்கள் வெறித்தனமாக கொலை செய்ய வேண்டும்?
  தமிழ் மக்களுக்கு சுய சிந்தனை என்று ஒன்றே கிடையாதா?

  பதிலளிநீக்கு