புதன், டிசம்பர் 12, 2018

நினைவலைகள்-37.

காலம் கடந்த மன்னிப்பு...

தொடர்புடைய படம்


அவருடன் எட்டாம் வகுப்பு வரை படித்த ரவி என்பவர் தன் ஒரே மகளின் திருமண அழைப்பிதழை கொடுத்து கண்டிப்பாக தனது  மகள் திருமணத்திற்கு    வர வேண்டும் என்று கட்டளையிட்டார்.

அன்று கண்டிப்பாக  வருகிறேன் என்றவர்.  மறந்தே போய்விட்டார்.. திடிரென்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் புது உடை உடுத்தி அலங்காரம் செய்து கூட்டமாக சலசலவென்று பேசிக் கொண்டு அவர்களின் உறவுக்கார திருமணத்திற்கு சென்றதைப பார்த்ததும் அவரு,க்கு நண்பரின் மகள் திருமணம் நிணைவுக்கு வந்தது.

அவசரமாக  திருமண பத்திரிக்கையை தேடி பிடித்து  நேரத்தை பார்த்த போது  முகூர்த்த நேரம்  நெருங்கி கொண்டிருந்தது. செய்து கொண்டிருந்த வேலையை பாதியில் நிறுத்தி ஒதுங்க வைத்துவிட்டு..தயராகிக் கொண்டு திருமண மண்டபத்தை  நோக்கி இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டார் .

அரை மணி நேரத்துக்கு குறைவான பயணத்தில் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்ட மண்டபத்தை கண்டுபிடித்து வாகனத்தை நிறுத்திவிட்டு, தான் வாங்கி வந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு மண்டபத்திற்கு உள்ளே நுழைந்தார்.

 மணமக்களின் உறவினர்களும் நண்பர்களும் மணமக்களுக்கு பரிசு பொருள் வழங்கியும் அவர்களுடன் சேர்ந்தும் ஒளிப்படம் எடுத்துக் கொண்டு இருந்ததை கண்டார். வரிசை அதிகமாக இருப்பதால் நண்பரை தேடினார். அவரின் கண்களுக்கு நண்பர் அகப்படவில்லை... நண்பரின் மனைவி தனியாக உட்கார்ந்திருப்பதைக் கண்டு .அருகில் சென்று வணக்கம் சொல்லிவிட்டு நண்பரை கேட்டார்..

நண்பரின் மனைவி, அவரின் வணக்கத்தை ஏற்று முகத்தில் மலர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டு , நண்பர் இருக்கும் பகுதியை கை நீட்டிக் காட்டினார். அந்தத் திசையை  பார்த்ததும் திடுக்கிட்டார். பின்னர் சமாளித்து நண்பரின் மனைவியிடம் விடைபெற்று  பெண்கள் சூழ மையத்தில் அமர்ந்து
சிரித்துக் கொண்டும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டும் நண்பர்க்கு இடைஞ்சலாக நண்பர் போய் அருகில் நின்றதும்.  நண்பர் வந்திருந்த நண்பரின் பெயரைச் சொல்லி அழைத்து வரவேற்று... சூழ்ந்து நின்ற பெண்களிடம் அவரை அறிமுகம் செய்து வைத்தார்.


“ ஏய்....சுப்பு...இது யாரு  தெரியுமில.....”

“சுப்பு என்ற பெண் தன் உதட்டை பிதுக்கி தனக்கு தெரியாது என்றார்.

“செம்பு...இவரு யாருன்னு பாரு....?”

”செம்பு என்ற பெண்மணி..“ நம்ம ஏரியாவுல அடிக்கடி பார்த்திருக்கேன் ” என்றார்
“ சுமதி   உனக்குமா தெரியல....”

” சுமதி என்பவர்  சற்று நெளிந்தார்... இப்படி அவரைச் சூழ்ந்திருந்த பெண்களிடம் வந்திருந்தவரை  காட்டி...யாருன்னு வினாவை எழுப்பிக் கொண்டிருந்தார். அந்த நேரங்களில் நண்பரின் மனைவி தனியாக அமர்திருந்திருப்பதற்க்கான காரணம் விளங்கிவிட்டது. நண்பர் கட்டையனாகவும் குட்டையாகவும்... இருந்தார்  தேவையில்லாமல் வந்திருந்த நண்பருக்கு நெட்டையனை நம்பினாலும் குட்டையனை நம்பக்கூடாது என்ற சொல்வடை வந்து போனது..

நண்பரை சுற்றி இருந்தவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு. இவர்களுடன் பேசிக் கொண்டு இரு... இந்தப் புத்தகத்தை மணமக்களிடம் கொடுத்துவிட்டு வருகிறேன் என்றுவிட்டு மணமக்களிடம் வந்து  குறிப்பாக மணமகளிடம் அவரின் தந்தையின் பள்ளித்தோழன் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு நேரம் இருக்கும்போது இந்த  புத்தகத்தை கண்டிப்பாக படியுங்கள் என்ற அறிவுரையுடன் அன்பளிப்பாக வழங்கினார்.

தங்களைத் தெரியும் சார்,...அப்பாவை காண பல தடவை வீட்டிற்கு வந்ததை நினைவுப்படுத்தினார் மணமகள். மணமகனும் கண்டிப்பா படிக்கிறேன் சார்,    ஒளிப்படம் எடுப்பவரை தேடினார்கள்.  நண்பர் பரவாயில்லை என்று அவர்களை வாழ்த்திவிட்டு நண்பர்க்கு அருகில் வந்தார். இப்போது நண்பர்க்கு அருகில் அவரது மனைவியும் சில உறவுக்கார பெண்கள் மட்டுமே இருந்தனர்.

அருகில் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தபோது... நண்பரும் மனைவியும் சாப்பிட்டு வருமாறு வற்புறுத்தினார்  மெதுவாக சாப்பிடுவோம் என்று விட்டு சிறிது நேரம் ஓய்வாக அமர்திருந்தார்..

நண்பர்க்கு அருகில் ஒரு குண்டம்மா வந்தமர்ந்து..  வெற்றிலையை மடித்து வாயில் தள்ளியபடி.....என்ன.........கணேசா...நல்லாயிருக்கியா...?? என்று கேட்டது... தூக்கத்திலிருந்து விழித்தவர் போல... நல்லாயிருக்கேன் என்று பதில் சொல்லிவிட்டு யாரென்று தெரியாமல் நண்பர் ரவியை பார்த்து “ யாரென்று கண்களால் விசாரித்தார். நண்பர்  சொல்ல வாய் திறந்த போது குண்டம்மா ரவியை தடுத்து...நீ ஒன்னும் சொல்லத ரவி அவனா கண்டுபிடிக்கட்டும் என்றார். ரவி சிரித்தபடியே வாயை பொத்திக் கொண்டார்.

தன்னுடன் படித்தவராகத்தான் இருக்கும் இவ்வளவு உரிமையா  ”டா” பேசுவதிலிருந்து தெரிந்து கொண்டார்... யோசிக்கத் தொடங்கினார்...யோசனை வந்தபாடில்லை.... என்ன செய்வது என்று அந்த குண்டம்மாவை பார்த்தபடியே இருந்தார்.     சிறிது அவகாசத்துக்கு பிறகு அந்தக் குண்டம்மா.. ஒருவரை அழைத்து இவன்(ர்) என் வீட்டுக்காரர்  இவனைப் பார்த்தாவது  நான்..இவன் யாரென்று தெரிகிறதா என்று கேட்டார்.. மௌனமாக  தெரியவில்லை என்று தலையை ஆட்டினார்

அந்தக் குண்டம்மாவுக்கு கோபம் பொத்துகிட்டு வந்தது.. “அட..மக்கு கணேசா... இவன் கொடுத்த லவ் லெட்டரை என்னிடம்  கொடுத்து, நான் நீ கொடுத்ததாக நிணைத்து டீச்சரிடம் செமையா அடி வாங்க வைத்ததுகூட மறந்து போச்சாடா என்றபோது.....

சட்ரென்று நினைவுக்கு வந்தது. நண்பர்க்கு     ஆ......ஆ.....நீய்யா.....???.


3 கருத்துகள்:

  1. நிகழ்வுகளை கதையாக்குவது உங்களுக்கு அருமையாக வருகிறது. இரசிக்கும்படியாகவும் உள்ளது.

    வாய்ப்பு கிடைத்தால் நேரம் ஒதுக்கி எழுத்துப் பிழைகளையும் திருத்தி வெளியிடவும்.

    நான் இரு தினங்களுக்கு முன் வெளியிட்ட கதையை இங்கே பதிவிறக்கலாம்... இதுவும் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப் பட்டதே... "குற்றால வலி(ழி)" https://karuveli.wordpress.com/2018/12/12/kuttrala-vali/

    பதிலளிநீக்கு