வியாழன் 07 2019

நினைவலைகள்-81.


இறகு பிடுங்கப்படும் கோழியும்
2000 ரூபாய் பெறும் மக்களும்.....



இறகு பிடுங்கப்பட்ட கோழி க்கான பட முடிவு







ரஷ்ய அதிபர் தோழர் ஸ்டாலின் ஒரு முறை நாடாளுமன்றத்துக்கு வரும்போது ஒரு கோழியை வந்து அதன் இறகுகளை ஒவ்வொன்றாக பிடிங்கி கீழே போட்டார். கோழி வலியால் கத்தியது.


அ ந்தக் கோழியின் இறகுகளை முற்றிலும் பிடிங்கியபின்  அதன் முன்னால் சிறிது தானியத்தை தூவினார். வழியால் துடித்த கோழி மெதுவாக நகர்ந்து வந்தது. மேலும் சிறிரஷ்ய து தானியங்களை தன் காலடிவரை தூவினார். அந்த தானியங்களை பொறுக்கியபடியே அந்தக் கோழி அவர் காலாடியில் வந்து நின்றது.

அப்போது ரஷ்ய அதிபர் தோழர் ஸ்டாலின் கூறினார். இதுதான் அரசியல், மக்களை எவ்வளவு வேண்டமானாலும் கசக்கி பிழிந்து எடுத்துவிட்டு, கடைசியில் சிறிது தானியம் போன்று எதையாவது தூவினால் மக்கள் தங்கள் காலாடியில் கிடப்பார்கள் என்று”

அன்று ரஷ்ய பாராளுமன்றத்தில் அவர் சொல்லியது போலவே...  ஒரு சாவின் மூலம் ஆட்சிக்கு வந்த அடிமை தமிழக அரசும் பல குளறுபடிகள் செய்து, குறிப்பாக தூத்துகுடி  துப்பாக்கி சூடு, மெரினா போராட்டகாரர்கள் மீது தாக்குதல். நெடுவாசல்.. இப்படி பல வகைகளில் தமிழக மக்களை வஞ்சித்து தற்போது  இலவசங்கள் என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை 2000ரூபாய் கொடுத்து  சாராய போதை போல.. இலவசம் என்ற போதையேற்றி மக்களை தம்பக்கம் திருப்பி வரும் தேர்தலை எதிர் கொள்கிறார்கள்.

தேர்தல் பாதை க்கான பட முடிவு

ஓட்டு போடும் மக்கள் இதை சரியாக புரிந்து கொள்ளவில்லை  என்றால் மீண்டும் மீண்டும் அவர்களின்  சிறகுகள் பிடிங்கி எறியப்படும் நிலைதான் ஏற்படும்.....



5 கருத்துகள்:

  1. நம் வேதனையை அவர்கள் சாதனையாக பீற்றுகிறார்கள்...

    பதிலளிநீக்கு
  2. தேர்தலில் வாக்கு அளிப்பதற்கு 2000 ரூபாய் பெற்று கொண்டு வாக்களிப்பது தமிழக மக்களின் கடைந்தெடுத்த கேவலமான செயல்.
    அதற்காக ஓட்டு போடாதே புரட்சி செய் தேர்தல் பாதை திருடர் பாதை என்றால்?!
    சரி தமிழர்கள் பாட்டாளிகள் எல்லாம் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் புரச்சி செய்தால் ராமதாசின் மகன் அன்புமணி ஆட்சி அதிகாரத்திற்கு வருவார் அதன் பின்பு அன்புமணியின் மகன் வருவார்.
    கம்யூனிஸ் நாடன வட கொரியா நாட்டில் புரச்சி செய்து அதிகாரத்துக்கு வந்த வட கொரிய பாட்டாளிகள் கட்சியால் கிம் ஜொங்-இல் தொடங்கி நடத்தபட்டு வருகின்ற குடும்ப சர்வாதிகாரமும் அதையே உறுதி செய்கிறது.
    //குறிப்பாக தூத்துகுடி துப்பாக்கி சூடுஇ மெரினா போராட்டகாரர்கள் மீது தாக்குதல். நெடுவாசல்.//
    நெடுவாசல்,தூத்துகுடி துப்பாக்கி சூடு,அநீதி.
    அது என்ன மெரினா போராட்டகாரர்கள் மீது தாக்குதல்?
    மெரினாவில் பிக்னிக்கி சென்றோம் என்பதிற்காக அங்கே செய்வதெல்லாம் எல்லாம் ஒரு போராட்டமா?

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....