திங்கள், செப்டம்பர் 16, 2019

கனவல்ல நிஜம்.....
உளைச்சல் க்கான பட முடிவுதொழில் முடக்கம் கடன் பிரச்சினை, இடப் பிரச்சினை,உடல் பிரச்சினை இப்படி.... இப்படி பல பிரச்சினைகளில் அல்லாடி வந்தநிலையில் ஓரளவுக்கு அஞ்சாமல் சிறு நடைபோட்டு தெம்பு வந்த நிலையில்....கணினியை திறந்து என்ன செய்யலாம் எதை பதிவிடலாம் என்று யோசிக்கையில்  ஒன்னுமே நினைவுக்கு வரவில்லை..நேற்றைய தினத்திலிருந்து ஒவ்வொன்றாக யோசித்தபோது காலையில்  ஊர் பேர் முகம் தெரியாதவரிடம் சம்மதமே இல்லாமல் வாங்கிக் கட்டிக் கொண்டது வந்து நின்றது... சரி ..அதை எழுதுவோம். என்று  தோன்றியது.. தோன்றியதை உடனே செயல்படுத்தினேன். அப்புறம் எழுதுவோம் என்றால். மறந்துவிடும். அதோடு கணினியில் உட்கார இடம் கிடைக்காது.. என்பதால் சூட்டோடு சூட்டாக எழுத ஆரம்பித்தேன்

காலையில் விடாமல் அடித்த செல்போனின் ஒலிகேட்டு கண் விழித்தபோது
சிறுநீர் முட்டிக் கொண்டு வந்து நின்றது...எழுந்து அவசரமாக வந்த சிறு நீரை கழித்துக் கொண்டு இருக்கும்போதே சாமி வேறு இரண்டாவதாக அருள் வந்து நின்றது.( சாமி என்பது  மலம்) அருள் வந்து சாமி வந்தால் அதை அடக்ககூடாது என்பது ஐதீகம்,  எந்த சிக்கல் வந்தாலும் மலச்சிக்கல் வரக்கூடாது என்று ஆறு அடி,ஏழு அடி உயரமுள்ளபெரியோர்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டு... கோயில் கருவறையான  கழிப்பிட அறைக்குள் சாமியையும் கும்பிட்டு தண்ணீர் ஊற்றி அலம்பிவிட்டு வருவதற்குள் சத்தம் எழுப்பிய போன் ஒலி நின்றுவிட்டது. செல்போனை நோண்டி  பார்த்தால் பத்து தடவை ஒலித்ததை காட்டியது..யாரென்று தெரியவில்லை.யாரா இருக்கும் என்பதும் தெரியவில்லை போனில் சேமிக்காத எண்ணாக இருந்தது..ட்ரு காலர் அப்பீ என் போனில்இல்லை..

பத்து  தடவை சலிக்காமல் அடித்திருக்கிறார்கள்... நாம் திரும்ப அடித்து கேட்போம் ஏன்? எடுக்கவில்லை என்று கேட்டால் .இருக்கவே இருக்கிறது..ரெடிமேட் பதில்” எனக்கு காது அவுட்டு ”என்பது, இந்த பதிலை ஏற்கவில்லை என்றால்..போனில் சார்ச் இல்லை என்று இப்படி ஒன்றிரண்டு பதிலை தயாரித்துக் கொண்டு..வந்த மிஸ்டு கால் நம்பரை தொடர்பு கொண்டேன்.

சட்டென்று எடுத்தார் ஒரு பெண்... நான் யாரென்று கேட்பதற்குள் சரமாறியான வசவுகள்...  நான் பேசுவதை கேட்க தயாரில்லை...கடைசியாக வசவுகளுக்கு பின் அந்தப் பெண் சொன்னதுதான் என் மண்டைக்குள் நின்றது. அதாவது. உன் உறவும் வேணாம் உன் ஒட்டும் வேணாம்.நான் ஏமாந்தது போதும்.. இனிமேல் என் வீட்டுக்கு  பல்ல இளிச்சிகிட்டு வந்திடாதே!... மீறி வந்தே! உன் மானத்த வீதிக்கு வந்து நாறடித்துவிடுவேன்.. .வைய்யிடா  போன... என்றுவிட்டு இணைப்பை துண்டித்தார்..

என்னடா..இது.... இருக்கிற உளச்சல்ல . இருந்து இப்பதான் மீண்டு வரேன்.இதுல கண் காணதா உளச்சல் வேறா.... என்று நானும் எனக்குள்ளே சிறிதுநேரம் என்னை திட்டிய பெண்னை நானும்  திட்டி புலம்பி  என் கோபத்தை  அடக்கிக் கொண்டேன்...கோபத்தை அடக்க கூடாது என்பதால் நானாக திட்டிக் கொண்டேன் நல்லவேளை... வீட்டில் உள்ளவர்களுக்கு நான் திட்டியது கேட்கவில்லை... இன்னும் கோபம் அடங்காமல் நம்மளைத்தான் . திட்டுகிறேன் என்று நிணைக்கவில்லை...

கடந்த மாதங்களில் இருந்து அக்கா. மச்சான் மருமகன் மருமகள் எல்லாருக்கும்  இறந்து போன என் அம்மாவுக்கும் சேர்த்து டோஸ் விட்டு கோபத்தில் எல்லாரையும் திட்டிக்  கொண்டு இருந்தேன்... கடனும் செலவும் அவர்காளல் அதிகமானதால் வந்த ஆத்திரம்......கெட்டு போன பிறகுதான் புத்தி வரும் என்பது மாதிரி  வரவு-செலவில் நான் கறார் காட்டாமல் விட்டதால் வந்த வினை...

அதில் ரிலாக்ஸ் ஆகி வந்தால்....கனாக்கடி மாதிரி..கனா வசவு  போல......அடுத்த ஒரு உளச்சல்....ஏற்கனவே..மோடி..அமித்சா...ஆட்சியில் பல  புற உளச்சலை ஏற்படுத்தியது போல..இது அக உளச்சலு போல............


2 கருத்துகள்:

 1. மறுநாள் நிதானமாக அதே பெண்ணை அழைத்து யாரடி நீ மோகினி ?
  என்று கேட்டு இருக்கலாமே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் மேலான கருத்துரையை படித்த உடனே மறு வினாடியே நிதானமாக அந்த யாரடிநீ மோகினி என்று கேட்பதற்கு நானும் விடாமல் மூன்று தடவை அந்த நம்பரை அழைத்தேன்...பதிலே இல்லை செல்லிருந்து ஏதாவது ஒரு பதிலு கூகும்.... எதுவுமே வரவில்லை நண்பரே... சம்பந்தமில்லாமல் திட்டு வாங்கினதுதான் மிச்சம்...

   நீக்கு