ஞாயிறு 11 2024

ஒரு பொய் பிரச்சாரத்திற்கு.. ஓர் விளக்கம்:

 



மணியம்மையார் பிறந்த தேதி - 10.03.1920. 

மணியம்மையாரின் திருமணத் தேதி - 09.07.1949.
திருமணத்தின் போது அவரின் வயது - 29 .

குறிப்பு: 21.02.1949 இல் பெரியாருக்கு இராஜாஜி எழுதிய கடிதத்தில் மணியம்மையாருக்கு வயது 30 எனக்
குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் 16 வயது பெண்ணைப் பெரியார் திருமணம் செய்து கொண்டார் என்று பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.

1949 இல் பெண்களின் திருமண வயது சட்டப்படி எவ்வளவு தெரியுமா?

28.09.1929 இல் இயற்றப்பட்ட இந்தியச் சட்டத்தின் படி அப்போதைய பெண்களின் திருமண வயது 15 .

அப்படி பார்த்தால் கூட இரு மடங்கு வயது அதிகம்.

இந்தத் திருமணம் குறித்துப் பெரியார் பலமுறை விளக்கம் கூறியுள்ளார்.

"இந்தத் திருமணம் என்பது ஒரு ஏற்பாடு தான். திருமணத்தின் நோக்கம் உடலுறவோ அல்லது குழந்தைப் பெறுவதோ அல்ல. மாறாக இந்த இயக்கத்தையும், இயக்கச் சொத்துகளையும் மக்களின் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதே அவர் கூறிய விளக்கம்.

-கவிஞர் கலி பூங்குன்றன்

மணியம்மை அவர்களின் தந்தை பெயர் கனகசபை, தாய் பத்மாவதி, கணவர் பெயர் பெரியார்..


பொய் பிரச்சாரம் செய்பவர்கள் ராமனின் மனைவியான சீதாவின் தாய் தந்தை பெயர் மற்றும் ஆண்டாளின் தாய் தந்தை பெயரை பதிவிடவும்..







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...