சனி 23 2024

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

 

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. -
யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்?
வன்னியர்கள், கவுண்டர்கள், தேவர்கள் பள்ளர்கள், பரையர்கள், நாடார், யாதவர்கள், ரெட்டியார், செட்டியார் என எல்லா சாதிகளும் ஆண்ட பரம்பரை னு சொல்லுகிறத பாத்தா சிரிப்புத்தான் வரும்.
நாட்ட ஆளுர ராஜாக்கள் உங்கள் பாட்டன் பொண்டாட்டி மேல ஆசை பட்டு, தூக்கிட்டு போயி மேட்டர் முடிச்சி குழந்தை பிறந்தா அது ஆண்ட பரம்பரை ஆயிருமா..? வெள்ளைக்காரன் விதைச்சிட்டு போனது கூட இன்னும் அவனோட கலருல சிவிர் சிவிர் னு ரெம்ப கிராம புறங்கள்ல பிறந்கிட்டு இருக்கு.. அதையெல்லாம் இங்கிலாந்து இளவரசர், இங்கிலாந்து ராணினு சொல்லிரலாமா..?

பொய்யான நிரூபிக்கபடாத, சாத்தியமில்லாத கதைகளை நம்பிக்கிட்டு, நாங்க ஆண்ட சாதி னு மார்தட்டுவதால என்ன பயன் இருக்கு..? சாதிவெறியை தூண்டி விட்டு ஒருத்தர ஒருத்தர் மாத்தி மாத்தி வெட்டிக்கிட்டு சாகுர நிலமைக்குத்தான் கொண்டுபோகுமே தவிற இந்த போலி பெருமையால என்ன கிடச்சிறபோகுது..?
நீங்க ஆண்ட பரம்பரை, பேண்ட பரம்பரை, மோண்ட பரம்பரை னு பேசுரதுக்கு முன்னாடி அவுங்க வரலாற தெரிஞ்சிட்டு பேசணும். எந்த மன்னனும் அவன் கல்யாணம் முடிக்கும் போது அவனுக்கு சமமான அவனோட குலத்து ராஜா மகளத்தான் காட்டுவானோ தவற தேவர் சாதி புள்ளையயோ, வன்னியர், கவுண்டர் சாதி புள்ளையையோ போயி கட்டுறது கிடையாது. அப்றம் எப்படி நீங்கயெல்லாம் ஆண்ட பரம்பரை..? இங்க ஆண்டவன் எல்லாம் ராஜாக்கள், ராஜபுத்திரர்கள் னு தான் தனியான வகுப்பா இருந்துருக்கானுக ஒழிய எவனும் வன்னியன், நாடார், தேவர் னு இருந்ததில்லை.

ஒரு நாட்ட ஆளுர மன்னன் வாரிசே இல்லாம இறந்துட்டானா, இந்த ராஜா பதவிக்கு யாரு வறதுன்னு யானைட்ட மாலையை கொடுத்து தெருவழியா நடக்கவிடுவானுக, யானையும் யார் கழுத்துல போடுதோ அவனுக ராஜா னு தமிழ் இலக்கியங்களுல கூட சொல்லப்பட்டுருக்கு. ஆனா உங்கள எல்லாம் இந்த தெருவுபக்கம் வரக்கூடாதுன்னு சாதி பேர சொல்லி தள்ளி வைச்சிருப்பானுக, யானையை சுத்தி பார்ப்பனன் தான் நிப்பான், இப்ப யானை யாரு மேல மாலைய போடும்..?

இந்த வன்னிய, கவுண்ட, படையாட்சி பயகளும் அந்த தெருபக்கம் போகமுடியாது, பள்ளர், பறையர், சக்கிலியர் தேவர் னு எவனும் போக முடியாது. வரலாற ரெம்ப எல்லாம் பொராட்ட வேண்டாம், கடைசியா ஒரு நூறு, நூத்தம்பது வருசத்த மட்டும் பொரட்டி பாத்தாலே உண்மை புரிஞ்சிரும். இப்ப இருக்குற தேவர் பயகள மேல்சாதிகாரங்க ஊருக்குள்ளயே விடமாட்டாங்க. அம்புட்டு பேரும் கள்ளபய, களவாணி பய னு எங்கேயும் சேத்துக்க மாட்டானுக. இந்த ஈன பொழப்பு பொலச்சவங்கதான் இப்ப ஆண்ட பரம்பரை னு கம்பு சுத்துராணுக..

அடுத்து வீர சத்திரிய வன்னிய பயகளோட யோக்கியம் பாப்போம். இப்பவரைக்கும் தலித் மக்களை இந்த எப்படி ஒதுக்கி வைச்சு, பல கொடுமைகளை செஞ்சி வருதோ அதே மாதிரி இந்த வன்னிய பயகளையும் இந்த சமுதாயம் ஒதுக்கி வைச்சிட்டு இருந்துச்சி,

நாயுடு, முதலியார், செட்டியார், பிள்ளை, உடையார் போன்ற பல பல ஆதிக்க ஜாதிகாரங்க, வன்னிய உழைக்கும் மக்களை ‘பள்ளிப் பய..’ னு இப்ப வரைக்கும் இழிவாத்தான் பேசிட்டு இருக்கானுக. இதெல்லாம் வன்னியர்களுக்கு தெரியாதா..? வன்னியர்னா தொடுற பறையர் னு இப்ப வரைக்கும் அவுங்களையும் இழிவாதான் ஆதிக்க சாதிகள் சொல்லிட்டு வராங்க. இப்பயும் இது கிராம புறங்களில் வழக்கத்தில் இருக்கு.. இந்த தாழ்த்தப்பட்ட வன்னியர்கள் இப்போ ஆண்ட பரம்பரை னு கூவுனா.., எப்படி சிரிக்காம இருக்க முடியும்.

இதே வன்னியங்க ஆதிக்க சாதி மக்களுக்கு எதிரா போராடி இருக்கானுக, ஆதிக்கசாதிய எதிர்த்து ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமா இருந்திருக்காணுக. பிறகு ஆங்கிலயர்கள் பல்வேறு நாடுகளுக்கு தேயிலை தோட்ட தொழிலாளர்களாக லட்சக்கணக்கில அனுப்பட்டவர்கள். தென்னாப்ரிக்கவிற்க்கு தோட்ட தொழிலாளர்களாக அழைத்து செல்லப்பட்ட பல லட்சம் அடிமைகளுள் பாதிக்கு மேல வன்னியர்கள். அங்க அடிமையா கஷ்டப்படுகிறானுக, அவனுகயெல்லாம் திரும்ப நாட்டுக்கு அனுப்பி வைக்கணும்னு இங்க இருக்குற வன்னியர் எல்லாம் சேர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிரா உண்ணா விரதம் இருந்திருக்காணுக. இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிச்சி ஒரு பார்ப்பன கவிஞன் பத்திரிக்கைல செய்தி எழுதிருக்கான். ஆதாரம் எல்லாம் இருக்கு. இந்த லட்சணத்துல அவிங்க புதுசா ஆண்ட பரம்பரை னு கதையவுட்டா.. சிரிக்காம எப்பிடி இருக்க முடியும். முதல ஒழுகுற வீட்டுல ஓடு மாத்த வக்கிருக்கா..? இதுல எதுக்கு போலி பெருமை..
அடுத்து பள்ளர்கள் இவனுகளோட ஆண்ட புராணம் எப்ப ஆரம்பிக்கப்பட்டதுனா.. ஆரம்பத்தில தீவிர தலித் அரசியல் பேசிட்டு இருந்த குருப்புல, ஒரு கோஷ்டி இது சரிப்படாது னு மள்ளர் மீட்பு களம் ங்கிற பேர்ல மள்ளர் குல வரலாறு னு பிட் நோட்டீஸ் குடுக்க ஆரம்பிச்சது. பள்ளர் எல்லாம் மள்ளர் னு சொன்னவங்க 2007ல அதையும் பட்டி டிங்கரிங் பாத்து தேவேந்திர குல வேளாளர் னு சோழர்களோட லிங்க் பண்ணுனதும் இல்லாம, ரிக் வேதத்தில சொல்ல படுற இந்திரனோட வாரிசுக சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. இவனுக வரலாற தேட ரிக் வேதம் வரைக்கு போக வேண்டாம் .
1937 ஆம் வருஷத்தில தஞ்சை காங்கிரஸ் 3வது அரசியல் மாநாடு நடந்துச்சி.
மாநாட்டிக்கு முன்னாடி சமபந்தி விருந்தும் நடந்துச்சி. சாதி, மதம் பேதமின்றி அனைவரும் உணவருந்தலாம் காங்கிரஸ் கோஷ்டி மைக்க புடிச்சி கூவிட்டு இருந்துச்சி. அங்க வேடிக்கை பார்க்க வந்த மூன்று பள்ளர் தொழிலாளிக பயத்துடன் உக்காந்து சாப்பிட்டு இருந்தாங்க. திடீர்னு சபாபதி உடையார் என்ற காங்கிரஸ் பிரமுகர் அவனுக தலைய பிடிச்சி இழுத்து போட்டு " ஏண்டா பள்ளப்பயலுகளா... உங்களுக்கு இவ்வளவு திமிர் வந்திருச்சா... இந்த கூட்டத்தில சரிசமமா சாப்புடலாமா.. னு, பக்கத்தில் கிடந்த சவுக்கு கட்டையை எடுத்து மூணு பேரையும் வெளுத்துபுட்டான். .
(28.12.1937) மறுநாள் காலை பண்ணையில் தலித் மக்கள் அறுவடை வேலை செய்துகொண்டிருந்தாங்க. அப்போது அங்கு வந்த பண்ணையாரின் ஏஜெண்டான கிருஷ்ணமூர்த்தி அய்யங்கார் " மாநாட்டு கூட்டத்தில் நேற்று சாப்பிட்டது யார்? அவர்களை இங்கு கொண்டு வாருங்கள் " என்று உத்தரவிட்டான்.
முதலில் தேவசகாயம் என்ற தலித் நபரை கூட்டிப்போனார்கள். அப்போது அய்யர் அவனை சும்மா இழுத்துட்டு வருவியா..? அந்த படுவாவ அடி என்று ஆணையிட்டார். பின்பு அந்த ஊரின் தலையாரி மாணிக்கம் என்பவர் அந்த தேவசகாயத்தை விளாமரத்தில் கட்டி வெளுத்து, மூணு பேருக்கும் மொட்டை போட்டு ஒடுங்கடா பள்ள நாயகளா னு விரட்டி புட்டாங்க
இந்த வழக்க பெரியார்தான் நடத்துராரு இப்படி பல சாமுதாயதால் ஒடுக்கப்பட்டு வந்த பள்ளர்கள் ஆண்ட பரம்பரை னு பேசுரத பாத்தா வேடிக்கையாதான் இருக்கு.

அடுத்து சாம்ப குல வீர பறைய வெள்ளார்.. இவங்க பள்ளர் விடுற கதைக்கு நாமளும் பங்குக்கு விடணுமுன்னு ஒரு அஞ்சி வருசாமா அம்பேத்கார தூர தூக்கி போட்டு இந்துத்துவால இறங்கிட்டாங்க. ஆனா இவனுக விடுற கதை இருக்கே.. மத்தவன் எல்லாம் ஆண்ட பரம்பரை னு தான் சொல்லிட்டு திரியூராணுக. ஆனா இவனுங்க சிவனும் பார்வதியும் பறையங்க னு நாங்கெல்லாம் சிவனோட பரம்பரை னு உடுராணுக கத கதையா.. சிவனோட ஆகம கோவிலுக்குள்ள நான் வீர சைவபறையன்டா என்று போனா, எவனாவது உள்ளவிடுவானா.. தைரியம் இருந்தா ஆண்ட பெருமை பேசிட்டு சிவன் கோவில் கருவறைக்குள் போயி சிலையை தொட்டுட்டு வந்து சொல்லு வீர பறையர் வெள்ளார் னு..
அடுத்து வீர சத்திரிய வம்ச நாடார்கள்... இவனுங்க இப்ப சர்டிபிகேட்லயே மாத்த ஆரம்பிட்டாங்க, ஆனா இவனுங்க எங்க ஆண்டாங்க னு தான் தெரியல. ஒரு வேல சேரநாட்ட ஆண்டுருப்பங்களோ னு கேரளா சைடு போயி பாத்தா... 200 வருசமா நாடார் குடும்ப பொண்ணுங்க மேலாடை போடுறதுக்காக போராட்டிட்டு இருந்துருக்கான்க, ஒரு வரலாற்று காலமா பொண்ணுங்க மார்ல சேலையும், ஆம்பலைகளுக்கு சட்டையும் போடவிடாம கேரள நம்பூதிரி பார்ப்பனன் கொடுமையா பண்ணிட்டு இருந்திருக்காங்க. அதுக்கு பயந்துபோன சத்திரிய நாட்டார் வம்சத்தினர் தமிழ்நாட்டு பக்கம் போனா கொஞ்சம் மரியாதையா இருக்கலாம் தெரிச்சி ஓடி வந்திருக்காணுக. இந்த காங்கிரஸ் புண்ணியத்தால மல்லியக்கட்டை, மாவு ஏவாரம் னு பாத்து வளர்ந்து வந்திருக்காங்க. அடுத்தவங்களுக்கு முன்மாதிரியா இருக்கவேண்டியங்க, ஆண்ட பரம்பரை மோண்ட பரம்பரை னு பேசிட்டு திரியூராணுக.
அடுத்து கவுண்டனுக.. இவனுக கொங்குநாட்ட ஆண்டவங்க நங்கதாண்டா னு கூவிட்டு திரியூராணுக. அதாவது எவன் எந்த ஆண்ட பரம்பரையா இருந்துட்டு போ.. ஆனா கொங்கு நாட்டு பக்கம் மட்டும் வரலாறு தேடி வந்துராதீக னு ஈரோடு, பழனி, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி ஒரு எல்லகோடு போடுறான். அப்பிடி இவனுகளோட ஆண்ட வரலாறு என்னன்னா.. இவனுங்க வீட்டு பொண்ணுங்கள கோவிலுக்கு தேவியாள் வேலைக்கு நேந்து விடுறது. வரலாற பொரட்டி பாத்தா, ஐயர்களுக்கு இவனுகதான் வெப்பன் சப்பளையரு. ஆதாவது தேவதாசிகளாக பணிவிடை செய்ய அனுப்புறது. இப்ப நிந்தியானந்தாவுக்கு சேர்த்து விடுற மாதிரி அந்த காலத்து ஆன்மீக பணிகளுக்கு கவுண்டர் இன பெண்களும் போயிருக்காங்க. இது பேக்கரி டீலிங் மாதிரி இருந்தாலும், எவனும் எங்கேயும் ஆளல, சும்மா நாமளும் சொல்லுவோம் னு பொய்ய பரப்பிட்டு திரியூராணுக.

பகடைக.... இவனுங்க இப்பதான் தேட ஆரம்பிச்சிட்டு இருக்கானுக. "இருக்குற சாதிகளுக்கு எல்லாம் சாணி மூத்திரம் அல்லுறோமே.. இந்த வாழ்வியலை மாத்துற வழி எது.? னு யோசிக்காம, எங்க பாட்டன் எங்க ஆண்டுருப்பான், எந்த சந்துல மோண்டுருப்பான் னு கிளற ஆரம்பிச்சுட்டாங்க. இதுல ஒரு கோஷ்டி ஒண்டிவீரன்க்கு பெருசா மணிமண்டபம் கவர்மெண்ட் கட்டணுமுன்னு இதை வச்சி மக்கள ஏமாத்தி அரசியல் பேசிட்டு தெரியுது. ஒண்டிவீரன் அடிமை வேல தானே செஞ்சான் அதுக்கு எதுக்கு மணிமண்டம். இந்த மாதிரி தான் பகடைக அடிமையா விசுவாசமா வேல செய்யணும் னு காட்டவா..?
ஆண்ட பரம்பரை பற்றி பேசும் எந்த தேவனோ, கவுண்டனோ, பள்ளனோ, பறையனோ, சக்கிலியனோ, வன்னியனோ, நாடாரோ பார்ப்பனன் வகுத்த சாதிக்குள்ளயே முண்டியடிச்சி மேல போகத்தான் பாக்குறானோ தவிற எவனும் சாதிய விட்டு வெளிய வர சிந்திக்கிறதேயில்ல. இதெல்லாம் ஒருத்தன ஒருத்தன் அடிச்சிக்கிட்டு சாகத்தானே.. சமத்துவமா வாழுறதுக்கு இவனுககிட்ட என்ன கருத்து இருக்கு..?

வன்னியர் பொண்ண காதலிச்சி கல்யாணம் முடிச்சா பறையன வெட்ட வரான். கேட்டா சாதி கவுரவம் குறைச்சிரும் னு சொல்றான். வன்னியன் ஒரு செட்டியார் பெண்ணையோ, கவுண்ட பெண்ணையோ காதலிச்சி கல்யாணம் முடிச்சா தலைய சொறிஞ்சி சிரிசிக்கிட்டு ஏத்துக்கிறான். இதுல மட்டும் சாதி கவுரவம் போயிடாதா..?

ஒரு பறையர்.. பள்ளர், சக்கிலிய பொண்ண திருமணம் செஞ்சா குறைச்சலா நினைக்கிறான். அதே பறையன் வன்னியன், பார்ப்பன பொண்ண முடிச்சா பெருமையா நினைக்கிறான். இந்த சாதி என்ற அமைப்புதானே இவர்கள பெருமையா நினைக்க தூண்டுது? ஆண்ட பெருமை பேச தூண்டுது?

இப்படி மானமில்லாம அடுத்தவன் காலபுடிச்சிட்டு, அவனுக்கு கீழ ஒரு சாதியா வாழனுமா..? இதுக்கு நீங்கெல்லாம் செத்துறலாம். எவ்வளவு தூரம் சாதிக்குள்ள போட்டி போட்டு முண்டியடிச்சி மேல போக நினைச்சாலும், எட்ச்ல பார்ப்பனன் இருப்பான். உங்கள அவனுக்கு கீழ வச்சியே விளையாட்டு காட்டுவான்.

மனுசனா ஒண்ணா கூடி வாழனுமுன்னா எல்லாம் ஒண்ணா சேர்ந்து பூணூல வெட்டுங்க. இல்ல.., நீங்கதாண்டா ஒருத்தன ஒருத்தன் வெட்டிக்கிட்டு சாகனும். ஏற்கனவே இந்த வேலைய பாக்க RSS காரன் உள்ள வந்துட்டான், அவனுக கூட சேந்து சங்கியா மாறி வாழ்க்கைய நாசமாக்கிகாதீங்க, சாதி பெருமை பேசுறத விட்டுட்டு கல்வி, பொருளாதாரம் னு வாழ்க்கையில முன்னேற பாருங்க..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நான் கண்ட கனவு எனக்கு பலித்தது....1

புத்தகத்தை திறந்து இரண்டு பக்கம் படித்து முடிக்குமுன்னே..தூக்கத்துல தல ஆடிவிடுகிறது. உடனே புத்தகத்தை மூடி வைத்து விட்டு தூங்க ஆரம்பித்து விட...