பக்கங்கள்

சாதி வெறி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாதி வெறி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன் 26 2024

அந்த ரோட்டுக்கு பேரு........

 


அந்த ரோட்டுக்கு பேரு கிருஷ்ணராய தெப்பகுளம் ரோடாம்

அந்த ரோட்டின் ஓரத்தில் மூன்று வாகன ஓட்டிக்கும் இரண்டு

சக்கர வாகன ஒட்டிக்கும் வாய் சண்டை.. வாயால் சண்டையிட்டு கொண்டு இருந்தார்கள். சண்டைக்கு காரணம் இதுதான்


இடது ஓரமாக போய்க் கொண்டிருந்த மூன்று சக்கர வாகன ஓட்டி சடக்கென்று

வலது பக்கம் வண்டி யை திருப்பி ஓட்டினான் ஆட்டோவுக்கு பின்னால் வலதுஓரமாக வந்து கொண்டிருந்த இரண்டு சக்கர வாகன ஓட்டி  மூன்று சக்கர வாகனத்தில்  எழுதப்பட்டு இருந்த பெயரைச்சொல்லி  ஏய் ..சேர்வை !எய் சேர்வை! இப்படியா வண்டிய ஓட்டுவ என்றனாம் .

மூன்று சக்கர வாகன ஓட்டிக்கு கோபம் பொத்துகிட்டது. ஆட்டோவை நிறுத்திவிட்டு டுவீலர்காரனிடம் சண்டையிட்டான்.. எப்படி நீ என்னை சேர்வைன்னு சொல்லப்போச்சுன்னு

வண்டியில் எழுதியிருந்த பெயரைத்தான் சொன்னேன் என்றான். இரு சக்கர வாகன ஓட்டி...

நன்றாகப்பார் வண்டியை கருப்புசாமி  சேர்வை என்று எழுதி இருக்கிறது. கருப்புசாமி என்று கூப்பிடாமல் சேர்வைன்னு எப்படி கூப்பிடலாம்.

எனக்கு எது கண்ணுல படுதோ..அதைதான்யா  சொல்லி கூப்பிடுவேன்.  நீ சேர்வை என்பதை அழி கருப்புசாமி மட்டும் தெரியும் அந்தப் பெயரைச் சொல்லி கூப்பிடுகிறேன்.என்றான் இரு சக்கர வாகன ஓட்டி

இவர்கள் சண்டையில் சிறிது கூட்டம் கூடியது . அந்த கூட்டத்தை கருப்புசாமி சேர்வையே கலைந்து போக செய்துவிட்டான். மற்றொரு இருசக்கர வாகன ஓட்டி அவர்களுக்கு அருகில் நின்றபோது கருப்புசாமி நகரச் சொன்னபோது.

வந்து நின்ற  இருசக்கர வாகன  ஓட்டி..நீ ரோட்ட மறித்து நின்றதால்தான் நிற்கிறேன். உங்க சண்டையை வேடிக்கை பார்க்க நிற்கவில்லை என்றான்.

கருப்புசாமி சேர்வை பிரச்சினையை கேட்ட ஒருவர் ஒருவர். சொன்னார்

நேதாஜி படம் போட்டால் சாதி அபிமானி

தேவர் படம் போட்டால் சாதி வெறிதானே!

அது மாதிரி தங்களுடைய வாகனங்களில் தங்களுடைய சாதிகளை  யார் எழுதியிருந்தாலும்  அது சாதி பெருமையில்லப்பா அது சாதி வெறிதானப்பா.... 

அத  அங்கிருந்து கேட்டவர்களுக்கு குப்பென வேர்த்து கொட்டியது.

திங்கள் 30 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -86.....


 சினிமாவில் வாய்ப்பு கேட்டு அலையும் போது - தவசி.

சினிமா வாய்ப்பு கிடைத்து புகழ் பெற்றபோது- தவசி தேவர்

மருத்துவமனைக்கு கட்ட பணம் இல்லாமல் உதவி கேட்டபோது- தவசி

மரணம் அடைந்த பின்- தவசி தேவர்

இவ்வளவுதான் சாதி..

கஷ்டப்படும்போது  சரியான நேரத்தில் ஓடி வந்துருவாங்கே.......!!!

சாதி சங்கங்கள் உங்களுக்கு என்ன செய்யும்?
தவசி எனும் துணை நடிகர் கடுமையாக நோய்வாய்ப்படுகிறார். சிகிச்சைக்கு பணம் இல்லாத நிலையில் சினிமா நடிகர்களிடம் உதவி கேட்கிறார்.
அவரை உரிமை கொண்டாடும் சாதி சங்கங்கள் எதுவும் அவருக்கு உதவ முற்படவில்லை. குறைந்தபட்சம் உதவி செய்யும்படி கேட்டதாகக்கூட தெரியவில்லை. ஆனால் அவர் செத்ததும் ஜாதியை குறிப்பிட்டு அஞ்சலி செலுத்துகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான குழந்தைகள் மேற்படிப்பு படிக்க இயலாமல் உதவி கேட்கும் செய்திகள் வருகின்றன. எந்த சாதி சங்கமும் உதவுவதாகவோ அல்லது உதவி கேட்டு பேசியதாகவோ நினைவில்லை.
திருமணம் ஆகாத ஏராளமான இளையோர் இருக்கிறார்கள். அதற்கெல்லாம் எல்லாம் இவர்கள் அலட்டிக்கொள்வதே இல்லை. யாரோ ஒருவன் அல்லது ஒருத்தி காதல் திருமணம் செய்துகொண்டால் அவன் குடும்பத்தை குற்ற உணர்வில் சாக வைக்க மட்டுமே இவர்கள் வருவார்கள். அதிலும் பணக்காரனுக்கு விலக்கு உண்டு.
உங்கள் பிள்ளைகளை நல்வழிப்படுத்தும் எந்த பயிற்சியையும் அவர்கள் தந்ததில்லை. ஆனால் ரவுடிகளை உருவாக்கி சப்ளை செய்யாத சாதி சங்கங்களே கிடையாது.
இவர்களை ஆதரிப்பது மட்டுமல்ல, சகித்துக்கொள்வதே அசிங்கமான செயல் ....

ஞாயிறு 29 2017

மதவெறியும் சாதிவெறியும் கொண்ட இரு கண்கள்



தேசியமும் தெய்வீகமும்
எனது இரு
கண்கள் என்றான்
அவன்......

சரி இருக்கட்டும்
அதை ஏன்?
என்கிட்ட சொல்றீங்க
என்றாள் அவள்....


நீ என்
சம்சாரம்“தானே
என்று கேட்டான்
அவன்...................

 பகல்ல கூட
கண் தெரிலையா
வீடு மாறி
வந்திருக்க மூதேவி
மொதல்ல கண்
டாக்டர பாரு
என்றாள் கோபமாக

நன்றி!---வில்லவன்ஃ

ஞாயிறு 20 2013

திருமலை நாயக்கர் பொண்டாட்டி மேல் கையை போட்டதினால் குடல் தள்ளிப் போனதாக உதார்விட்ட சொரக்கட்டை...........


முன்னுரை.....

ஆதிக்கசாதி சாதி வெறிக் கூட்டம் என்ன செய்யும் தனக்கு கீழ் 
உள்ள சாதிகளை அடக்கி ஒடுக்குவதோடு. தன்சொந்த 
சாதியைச்சேர்ந்த வறியவர்களையும் ஆதிக்க சாதிவெறியுடனே 
அடக்கி ஒடுக்கி ஆண்டுவரும்

அந்த ஆதிக்கசாதிவெறி கூட்டம் மாதிரியே, ஒடுக்கப்பட்ட,
தாழ்த்தப்பட்ட சாதிக்குள்ளும் இருக்கும் சாதிவெறி.ஆதிக்க 
கூட்டமும் தனக்கு கீழ் உள்ள சாதியையும் தன் சாதியைச் 
சேர்ந்த வறியவர்களையும் அடக்கி ஒடுக்கி தன்னை 
மேலானவாக காட்டிக் கொள்ளும்.ஆனால் இந்தக் கூட்டம் 
தனக்கு மேல் ஆதிக்கம் செய்யும் கூட்டத்தை மயிரளவுக்குக்
கூட எதிர்த்தது கிடையாது. அவர்களின் காலை நக்கும். 
நக்குவதற்கு வாய்ப்பு இல்லையென்றால் வலியச் சென்று 
பல்ளிலிக்கும் ரெம்ப ஒட்டி உறவாடும். உதாரணமாக 
சொல்வதென்றால். தருமபுரியில் நடந்த நிகழ்ச்சிக்குப்பின் திருகுமாவளவன் ராமதாசுவிடம் பவ்வியமாக நடந்து 
கொளவது மாதிரி...............

திருகுமாவளவன் சாதியைச் சேர்ந்த  ஒரு கூட்டம்,
சிறுசுகளைத்தவிர ஆண்பெண்களைச் சேர்த்து அறுபது 
பேர் கொண்ட உறவினர்,மற்றும் குடும்ப உறுப்பினர்களை 
கொண்ட  கூட்டம் ஒன்று., எட்டு பேர் கொண்ட  ஒருகூட்டு 
குடும்பத்தை பல தொல்லைகளக்கு ஆளாக்கி தன்னுடைய 
ஆதிக்கத்தை நிறுவிக் கொண்டு வருகிறது.. ஆனால் இந்த 
அறுபது பேர் கொண்ட கூட்டம், அதே தெருவில் வசிக்கும் 
ஒரே ஒருஆதிக்க சாதியைச் சேர்ந்தவரைக்கண்டு,
வாய்பொத்தி.மெய்பொத்தி எது நடந்தாலும் தெரியாதமாதிரி 
நடித்துக் கொண்டு கூலைக் கும்பிடு போடுகிறது.

ஒரே தெருவில் ஒரே சாதியாக வசித்து வரும் அந்தக் 
கூட்டத்தின் ஆட்டம் பாட்டம் அதிகாரம் அந்த தெருவுக்குள் 
மட்டும்தான். வெளியில் , வேறு தெருக்களில் மூச்சு 
விடுவதுக்கூட தெரியாது.

 பல குடும்ப உறுப்பினர்களை கொண்ட அறுபது பேர் கொண்ட 
கூட்டம் அவர்களுக்கு நெருங்கிய உறவு கொண்ட,   ஒரு 
குடும்பத்துக்கு எண்ணிலடங்கா தொந்தரவு கொடுத்து சின்னபின்னமாக்கியது அந்த ஒரு குடும்பத் தலைவர்   
மாடு வளர்த்து பால் கறந்து வளர்ந்து வருவதை பிடிக்காமல், 
அந்த அறுபது பேர் கொண்ட கூட்டம், மாட்டு சானம் வீசுது,
 மாடு வளர்ப்பதால் கொசு கடி தாங்கமுடியவில்லை,  
மாட்டுத்தண்ணி என் விட்டுக்கு வருது என்று இல்லாததும் பொல்லாததுமாக சொல்லி அடிதடி சண்டையிட்டு 
போலீஸ் ஸ்டேசன் புகாரில் அறுபதுபேரும் கையெழுத்து 
போட்டு அவரை தொழில் செய்து வாழ விடாமல் செய்து 
விட்டார்கள். 

அறுபது பேர்களை எதிர்க்க முடியாத அவர் தன் வீட்டையும் 
மாட்டையும் உசிலம்பட்டி வகையாறாவைச் சேர்ந்த ஒரு 
ஆதிக்க சாதியை சேர்ந்த ஒருவருக்கு அடிமாட்டு விலைக்கு 
விற்று விட்டு செத்துப்ப்போனார்.அதை வாங்கிய ஆதிக்கச்
சாதிக்காரோ வித்தவரின் மாட்டுத் தொழுவத்திலே தன் 
மாட்டையும் கட்டி மாட்டுத் தொளுவமாக்கினார். வித்தவர் 
மாட்டைவிட வாங்கியவர் மாடு தண்ணீராக கழியும் ஒவ்வொரு 
வீட்டின் முன்னும் பேளும் மூத்திரம் கழியும்.பாதையில் 
படுத்துக்கொண்டு நகராமல் சண்டித்தனம் செய்யும். இரவு 
வேளையில் ஒவ்வொரு விட்டுக்குள்ளும் புகும். 

இன்னொரு ஆதிக்க சாதி வாரிசாக காட்டிக் கொள்ளும் 
அந்த அறுபது பேர் கொண்ட கூட்டம்  சிறிய மூச்சுகூட  
விடுவது கிடையாது. ஆதிக்கசாதிக்காரரிடம் யாராவது ஒருத்தர் பவ்வியமாக சொன்னால் என்னாங்கடா........... ன்னுதான கேட்பார்
அடுத்து அறுபதுபேர் கூட்டம்  ஒன்னுமில்ல 
ஒன்னுமில்ல என்று மழுப்புவார்கள் பிறகு அதப் பத்தி மூச்சே விடமாட்டார்கள்....... 

ஒரு ஞாயத்துக்காககூட அவரை எதிர்த்துப்பேச துப்பில்லாத 
முதுகெலும்பு இல்லாத அறுபது பேர் கூட்டம்  ஒரே சாதியைச் 
சேர்ந்த எட்டு பேர் கொண்ட ஒரு குடும்பத்தை ஆதிக்கம் செய்து  
வீரத்தை காட்டிக் கொண்டு இருக்கிறது. எட்டு பேர்கள் கொண்ட குடும்பத்தலைவரோ தெருவைவிட்டு  ஓடிப்போகாமல் இடத்தை அடிமாட்டு  விலைக்கு விற்காமல்  திருகுமாவளவனின் 
கூட்டம் கொடுக்கும் இம்சைகளுக்கு-இன்னல்களுக்கு 
வருத்தப்பட்டு சோர்ந்து போகாமல் களத்திலே  நின்று 
அந்தக் கூட்டத்தை எதிர்த்து நேர்மையான  வழியிலே 
போராடிக்கொண்டு வருகிறார்.

 ஆதிக்கசாதி வெறியர்கள் தன்சாதி வறியவர்களிடமும் 
தனக்கு கீழுள்ள சாதிகளிடம் சாதிவெறிகாட்டி தனக்கு 
மேல் மற்றவர்களை வளரவிடாமல் தடுப்பது மாதிரி, 
தாழ்த்தப்பட்ட சாதிக்குள்ளும் சாதிவெறி, அடக்கி ஒடுக்கும் 
வெறித்தனமும் இருப்பதும், மேல் சாதிகளை சேர்ந்தவர் 
ஒருவர் எவ்வளவுதான் தார்க்குச்சியை. கொண்டு குத்தினாலும் 
பெரிசு படுத்தாமல்  பொய்யாக மற்றவர்களிடம் தன்வீர 
பராமக்கித்தை புளுகி தள்ளும் திருகுமாவளவனின் கூட்டத்தை அம்பலப்படுத்த்தான் இந்த“ .திருமலை நாயக்கர் பொண்டாட்டி 
மேல் கையை போட்டதால் குடல் தள்ளிப் போனதாக உதார்விட்ட சொரக்கட்டை கதைசொரக்கட்டை என்பது அது ஒரு வகையான தவளை...திருகுமாவளவனின்கட்சிக் கொள்கையைப் போல

                                                  தொடரும்.---

  

தோற்றுப் போனவன்.........

  வெற்றி அடைந்தவர்களை விட தோற்றுப் போனவர்கள்தான் அதிகம்.  அந்த அதிகத்தில் நானும் ஒரு துளி.... அறிவே இல்லாதவர்கள் அறிவாய் பேசுவதை பார்த்து நா...