அந்த ரோட்டுக்கு பேரு கிருஷ்ணராய தெப்பகுளம் ரோடாம்
அந்த ரோட்டின் ஓரத்தில் மூன்று வாகன ஓட்டிக்கும் இரண்டு
சக்கர வாகன ஒட்டிக்கும் வாய் சண்டை.. வாயால் சண்டையிட்டு கொண்டு இருந்தார்கள். சண்டைக்கு காரணம் இதுதான்
இடது ஓரமாக போய்க் கொண்டிருந்த மூன்று சக்கர வாகன ஓட்டி சடக்கென்று
வலது பக்கம் வண்டி யை திருப்பி ஓட்டினான் ஆட்டோவுக்கு பின்னால் வலதுஓரமாக வந்து கொண்டிருந்த இரண்டு சக்கர வாகன ஓட்டி மூன்று சக்கர வாகனத்தில் எழுதப்பட்டு இருந்த பெயரைச்சொல்லி ஏய் ..சேர்வை !எய் சேர்வை! இப்படியா வண்டிய ஓட்டுவ என்றனாம் .
மூன்று சக்கர வாகன ஓட்டிக்கு கோபம் பொத்துகிட்டது. ஆட்டோவை நிறுத்திவிட்டு டுவீலர்காரனிடம் சண்டையிட்டான்.. எப்படி நீ என்னை சேர்வைன்னு சொல்லப்போச்சுன்னு
வண்டியில் எழுதியிருந்த பெயரைத்தான் சொன்னேன் என்றான். இரு சக்கர வாகன ஓட்டி...
நன்றாகப்பார் வண்டியை கருப்புசாமி சேர்வை என்று எழுதி இருக்கிறது. கருப்புசாமி என்று கூப்பிடாமல் சேர்வைன்னு எப்படி கூப்பிடலாம்.
எனக்கு எது கண்ணுல படுதோ..அதைதான்யா சொல்லி கூப்பிடுவேன். நீ சேர்வை என்பதை அழி கருப்புசாமி மட்டும் தெரியும் அந்தப் பெயரைச் சொல்லி கூப்பிடுகிறேன்.என்றான் இரு சக்கர வாகன ஓட்டி
இவர்கள் சண்டையில் சிறிது கூட்டம் கூடியது . அந்த கூட்டத்தை கருப்புசாமி சேர்வையே கலைந்து போக செய்துவிட்டான். மற்றொரு இருசக்கர வாகன ஓட்டி அவர்களுக்கு அருகில் நின்றபோது கருப்புசாமி நகரச் சொன்னபோது.
வந்து நின்ற இருசக்கர வாகன ஓட்டி..நீ ரோட்ட மறித்து நின்றதால்தான் நிற்கிறேன். உங்க சண்டையை வேடிக்கை பார்க்க நிற்கவில்லை என்றான்.
கருப்புசாமி சேர்வை பிரச்சினையை கேட்ட ஒருவர் ஒருவர். சொன்னார்
நேதாஜி படம் போட்டால் சாதி அபிமானி
தேவர் படம் போட்டால் சாதி வெறிதானே!
அது மாதிரி தங்களுடைய வாகனங்களில் தங்களுடைய சாதிகளை யார் எழுதியிருந்தாலும் அது சாதி பெருமையில்லப்பா அது சாதி வெறிதானப்பா....
அத அங்கிருந்து கேட்டவர்களுக்கு குப்பென வேர்த்து கொட்டியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை