திங்கள் 30 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -86.....


 சினிமாவில் வாய்ப்பு கேட்டு அலையும் போது - தவசி.

சினிமா வாய்ப்பு கிடைத்து புகழ் பெற்றபோது- தவசி தேவர்

மருத்துவமனைக்கு கட்ட பணம் இல்லாமல் உதவி கேட்டபோது- தவசி

மரணம் அடைந்த பின்- தவசி தேவர்

இவ்வளவுதான் சாதி..

கஷ்டப்படும்போது  சரியான நேரத்தில் ஓடி வந்துருவாங்கே.......!!!

சாதி சங்கங்கள் உங்களுக்கு என்ன செய்யும்?
தவசி எனும் துணை நடிகர் கடுமையாக நோய்வாய்ப்படுகிறார். சிகிச்சைக்கு பணம் இல்லாத நிலையில் சினிமா நடிகர்களிடம் உதவி கேட்கிறார்.
அவரை உரிமை கொண்டாடும் சாதி சங்கங்கள் எதுவும் அவருக்கு உதவ முற்படவில்லை. குறைந்தபட்சம் உதவி செய்யும்படி கேட்டதாகக்கூட தெரியவில்லை. ஆனால் அவர் செத்ததும் ஜாதியை குறிப்பிட்டு அஞ்சலி செலுத்துகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான குழந்தைகள் மேற்படிப்பு படிக்க இயலாமல் உதவி கேட்கும் செய்திகள் வருகின்றன. எந்த சாதி சங்கமும் உதவுவதாகவோ அல்லது உதவி கேட்டு பேசியதாகவோ நினைவில்லை.
திருமணம் ஆகாத ஏராளமான இளையோர் இருக்கிறார்கள். அதற்கெல்லாம் எல்லாம் இவர்கள் அலட்டிக்கொள்வதே இல்லை. யாரோ ஒருவன் அல்லது ஒருத்தி காதல் திருமணம் செய்துகொண்டால் அவன் குடும்பத்தை குற்ற உணர்வில் சாக வைக்க மட்டுமே இவர்கள் வருவார்கள். அதிலும் பணக்காரனுக்கு விலக்கு உண்டு.
உங்கள் பிள்ளைகளை நல்வழிப்படுத்தும் எந்த பயிற்சியையும் அவர்கள் தந்ததில்லை. ஆனால் ரவுடிகளை உருவாக்கி சப்ளை செய்யாத சாதி சங்கங்களே கிடையாது.
இவர்களை ஆதரிப்பது மட்டுமல்ல, சகித்துக்கொள்வதே அசிங்கமான செயல் ....

2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...