பக்கங்கள்

நக்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நக்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன் 07 2017

99 ரூபாயை ஆட்டையை போட்ட கதை........

நாடாளுமன்றத்தில் பேசும் போது பாஜக உறுப்பினர் ஒருவர் ஒரு கதை சொன்னார்.

“ஒரு மனிதன் இருந்தான். அவனுக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அவன் தன் மூன்று மகன்களிடம் ஒவ்வொருவருக்கும் ரூ.100 கொடுத்து ஒரு அறை முழுதும் நிறைக்குமாறு பொருள் வாங்கச் சொன்னானாம்.

ஒரு மகன் வைக்கோல் வாங்கி அறையில் வைத்தான்.;அறை நிறையவில்லை.

அடுத்தவன் பஞ்சு வாங்கி வைத்தான்அறை நிறையவில்லை.

மூன்றாமவன் ஒரு ரூபாய்க்கு மெழுகுவர்த்தி வாங்கி அறையில் ஏற்றி வைத்தான். அறை முழுவதும் ஒளி நிறைந்தது”...........

அந்த பாஜக உறுப்பினர் பின் சொன்னார்

”அந்தமூன்றாமவன் போலத்தான் நம் பிரதமர் மோடி,அவர் பொறுப்பேற்றதும்நாட்டில்  இருந்த இருள் நீங்கி ஒளி பரவி விட்டது”....

பின் வரிசையிலிருந்துஒரு குரல் எழுந்தது "மீதம் 99 ரூபாய் என்ன ஆச்சு...???என்று

அதற்கு கதை சொன்ன யோக்கியர் பதில் சொல்லவேயில்லை...

செவ்வாய் 21 2017

அந்த நாய்க்கு பேரு........


அந்த குத்தாட்டக்காரி
தமிழுக்கு இன்னொரு
பேரு அமுதமாம்
மச்சி................

..................!!!!!!

சூ....என்றதும்
உன்னை பாய்ந்து
கடித்து குதறும்
காவல் நாய்க்கு
முத்து மாலை
என்பது எனக்கு
தெரியும் மச்சி

....................????
.

ஞாயிறு 03 2011

அடபோங்கப்பா!!


அரசியல்,சமுகம்,அனுபவம் அதைப்ற்றியும் இதைப்பற்றியும் நிறைய யோசன
பண்ணி எழுதி வச்சுருந்தேனா, அதை வெளியீடுவதற்க்காக தமிழ்மணம் சசி சார்,சொன்ன மாதிரி என் அறிவுக்கு எட்டிய அளவில் முட்டி மோதி ஒரு
வலைத்தளம் தொடங்கினேன்.
     எல்லாம் “டமால்” ஆகி போச்சு, என்னான்னா நா எழுதி வச்சிருந்த பேப்
பரெல்லாம் காணல,போனால் போகட்டும் போடா ன்னு  எழுதின மறுபடியும்
யோசிச்சா ,டமால்,டுமீல்ன்னு ஒரு சத்தம்கூட திரும்பி வரமாட்டேன்குது..
உள்ளதும் போச்சுதடா.
     வலைதளம் தொடங்குவதற்கு முன்னாடி புதுசு புதுசா சிந்தனை வந்திச்சு
அப்போ எழுதி வைக்கிறதுக்கு பேனா கிடைத்தா பேப்பர் கிடைக்காது.பேப்பர்
இருந்தா பேனா இருக்காது..இப்போ பேனாவும் பேப்பரும் இருக்கிறப்போ,
ஒன்னுமே வரமாட்டேன்கிது.
     “வினவு” தோழர்களின் ஒரு பதிவை நெஞ்சிலே ஏற்றி,அது மாதிரி  போராடி சிந்தித்து குறிப்பெடுத்து டைப் அடிக்க உட்கார்ந்தா கரண்ட் ஓடிபோயிருச்சுஅது வர்ரதற்கு மூன்றுமணி நேரமத்துக்கு மேல் ஆகும். அதுவரைஎன்னசெய்வதுன்னு,சரி பொழப்ப பாக்கலாம்ன்னு, பொழப்ப பாத்தா  ஓட்போன கரண்ட்வந்துடும் பொழப்ப பாதியில விட்டுட்டு வரமுடியாது. மறுநாள்பாக்குமாதிரிபொழப்அரைகுரையாகமுடித்துவைத்துட்டுசாப்பிட்டுட்டுவந்தால்,துர்க்கமும்சோர்வும்வந்திடும்.துர்க்கத்தையும்சோர்வையும் ஒதுக்கிட்டு போனா.....
    
அடபோங்கப்பா?
ஊரு, நாட்டுல எருமை மாடு மேய்க்க முடியலைன்னு, இங்க வந்தா...................
 “என் எருமை மாட்டையே காணோம்”
 உளரல்கவி, தனிஒருவனுக்கு(எனக்கு)எருமை மாடு மேய்க்க வழியில்லையெனில் இணைய(என்) இணைப்பையே நிறுத்திடுவே(ன்)ம்

வாசாந்தியும் தேவசாதி படைப்பும்

திராவிட ஆய்வு 7 July 2025 · இந்தியா டுடேவில் ஆசிரியராக இருந்த வாஸந்தி, தேவதாசி ஒழிப்புச் சட்டத்தால், ஆடல் பாடல் கலைகள் அழிந...