புதன் 30 2015

துன்பம் வந்த வேளையிலே........

படம்-கடற்கரை..



அன்று....

துன்பம் வரும்
வேளையில் சிரியுங்கள்
என்று எழுதி
வைத்து விட்டு
போனார் அவர்.........

இன்று...

 துன்பம் வந்த
வேளையில நான்
எப்படி சிரிப்பது
எங்கே சிரிப்பது
முட்டினாலும் சரி
மோதினாலும்  சரி
என்னுாள் சிரிப்பு
வரலியே அய்யா...
பொசுகென்று வந்து
நிற்கும்  கண்ணீரையும்
அழகையையும் அடக்கத்தான்
முடியவில்லையே அய்யா.............


திங்கள் 28 2015

தீட்டும்..குவார்ட்டர் பாட்டிலும்..

Prpc Milton Jimraj



Prpc Milton Jimraj என்பவர் Jim Raj Milton மற்றும் 3 பேர் ஆகியோருடன்
குடி, மனிதர்களின் சுயமரியாதையை அகற்றி, தூர வீசிவிட்டது; மான உணர்ச்சியைத் துண்டித்து, குப்பைத் தொட்டியில் வீசிவிட்டது.
உண்மையில் இதுதான் மிகப் பெரிய கவலைக்குரிய அம்சம். சுயமரியாதையையும் மான உணர்ச்சியையும் ஒருவன் இழந்துவிட்டால் அவன் அடிமைக்குச் சமம்.
டாஸ்மாக் மதுக்கடைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எத்தனையோ செய்திகள் வெளிவருகின்றன. போதும், போதும் என்ற அளவுக்கு புள்ளிவிவரங்களும் வெளியாகின்றன. பெரும்பாலும் இவை நகர்ப்புறம் சார்ந்தவை. உண்மையில், கிராமப்புறங்களில்தான் டாஸ்மாக்கின் பாதிப்புகள் மிக அதிகம். மாதாந்திர ஊதியமோ, வேறு தொழில் வாய்ப்புகளோ இல்லாத கிராமப்புறங்களில் பெரும்பாலும் விவசாயமும், அதைச் சார்ந்த கூலித் தொழில்களுமே நிறைந்திருக்கின்றன. வாங்கும் தினக்கூலியைக் கொண்டுவந்து டாஸ்மாக் கல்லாவில் கொட்டிவிட்டுத்தான் வீடு வந்து சேர்கின்றனர் தொழிலாளர்கள்.
ஒரு கிராமப்புற டாஸ்மாக் கடையின் வருமானம், நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு அதிகம். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே இருக்கும் கருவேப்பிலங்குறிச்சி என்ற ஊரில் ஒரு டாஸ்மாக் கடை இருக்கிறது. இந்தக் கடையின் ஒரு நாள் வருமானம் 1 லட்சம் ரூபாயில் இருந்து 1.5 லட்சம் ரூபாய் வரை. பண்டிகை நாட்களில் இது இன்னும் அதிகரிக்கும். குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் என வைத்துக்கொண்டால், வருடத்துக்கு 365 லட்சங்கள் அல்லது 3.65 கோடி ரூபாய். ஒரு சின்னஞ்சிறிய ஊரில் ஆண்டு ஒன்றுக்கு 3.5 கோடி ரூபாய்க்குக் குடிக்கிறார்கள் என்பது எத்தனை பெரிய அதிர்ச்சி?! இந்தத் தொகை, சரக்குக்கானது மட்டும்தான். சைட் டிஷ், சிகரெட் தனிக் கணக்கு.
கருவேப்பிலங்குறிச்சி டாஸ்மாக் கடையில் காலை 10:30 மணிக்கு நாம் நின்றிருந்தபோது ஒருவர் சரக்கைக் கடன் கேட்டுக்கொண்டிருந்தார். ''காலையிலேயே கடன் கேட்டுக்கிட்டு... ஓடிப்போயிரு... அடிச்சேபுடுவேன்'' என்று விரட்டினார் கடையில் இருந்தவர். அவர் சளைக்கவில்லை. இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை திரும்பத் திரும்ப வந்து கடன் கேட்டுக்கொண்டே இருந்தார். இதற்கு இடையில் குடிக்க வருவோரின் முகங்களையும், அவர்கள் கைகளில் இருக்கும் சரக்கையும் ஏக்கத்துடன் பார்த்துக்கொள்கிறார். அவரின் சரக்குத் தாகம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடையில் இருப்பவரிடம் பிச்சை எடுப்பதைப்போல கெஞ்சு கிறார். கடைக்காரர், இப்போது நாகரிகமான வார்த்தைகளைக் கைவிட்டு மிக மோசமான கெட்ட வார்த்தைகளுக்கு மாறுகிறார். ஓங்கிய கை அடித்துவிடுமோ என்ற நிலையில்தான் கிளைமாக்ஸ்! அதுவரை கெஞ்சிக்கொண்டு இருந்தவர், அண்ட்ராயர் பாக்கெட்டில் கைவிட்டு 50 ரூபாய்த் தாளை எடுத்துத் தருகிறார்.
''ஏன்யா... காசை வெச்சுக்கிட்டுத்தான் இவ்வளவு நேரமா சீன் போட்டியா?'' எனக் கடைக்காரர் இன்னும் கடுப்பாக, உதட்டோரப் புன்னகையுடன் ஒரு கட்டிங்கை வாங்கிக்கொண்டு பின்பக்கம் செல்கிறார் அந்தக் குடிவிரும்பி. அவர் ஏன் பணத்தை வைத்துக்கொண்டே கடன் கேட்க வேண்டும்? ஏனெனில், அந்தக் காசு அவருக்கு அன்றைய நாளின் அடுத்த குடிக்குத் தேவைப்படுகிறது. இப்போது கடன் வாங்கிக் குடித்தால், இந்தக் காசை பிறகு குடிப்பதற்கு வைத்துக்கொள்ளலாம். இதுதான் அவரது எண்ணம். அடுத்த வேளை சாப்பாட்டைப் பற்றி நிச்சயம் அவர் கவலைப்பட மாட்டார். ஆனால், அடுத்த வேளை குடியைப் பற்றி முன்யோசனையுடன் இருக்கிறார். இதற்காக அவர் மானம், மரியாதையை இழக்கவும் தயாராக இருக்கிறார் என்பது முக்கியமானது.
கிராமப்புறங்களில் ஒரு சுடுசொல் பெரும் ரத்தக்களறியை உருவாக்கிய உதாரணங்கள் உண்டு. ஆனால், அதே கிராமப்புற மனிதர்கள் இன்று காதில் கேட்கத் தயங்கும் வசவு வார்த்தைகளை எந்தக் கூச்சமோ, சொரணையோ இல்லாமல் ஏற்றுக்கொள்கின்றனர் என்றால், இதற்கு 'சகிப்புத்தன்மை’ எனப் பெயரிட முடியுமா? குடி, மனிதர்களின் சுயமரியாதையை அகற்றி, தூர வீசிவிட்டது; மனிதர்களின் மான உணர்ச்சியைத் துண்டித்து, குப்பைத் தொட்டியில் வீசிவிட்டது. உண்மையில் இதுதான் மிகப் பெரிய கவலைக்குரிய அம்சம். சுயமரியாதையையும் மான உணர்ச்சியையும் ஒருவன் இழந்துவிட்டால் அவன் அடிமைக்குச் சமம். 'அடிமைக்கு அவன் அடிமை என்பதை உணர்த்து... அவனே கிளர்ந்து எழுவான்’ என்றார் அம்பேத்கர். இந்தக் குடி அடிமைகளுக்கு அவர்கள் அடிமை என்பதை யார் உணர்த்துவது? உணர்த்தவேண்டிய அரசோ, ஊற்றிக் கொடுப்பதில் பெருமிதம் அடைகிறது; புதிய அடிமைகளை உற்பத்திசெய்ய இலக்கு நிர்ணயிக்கிறது.
குடிகாரர்கள் சுயநினைவு இழந்து, சொரணைஇல்லாமல் வாழ்வது அவர்களின் உடல்நலக் கேடாக மட்டும் முடிவது இல்லை. அவர்கள் தன்னைச் சுற்றி நடக்கும் அத்தனை சீரழிவுகளையும் சகித்துக்கொள்கின்றனர். மணல் கொள்ளையாக இருந்தாலும், விலைவாசி உயர்வாக இருந்தாலும், அனைத்தையும் ஒருவித மயக்க நிலையில் வேடிக்கை பார்க்கப் பழகியுள்ளனர். சரியாகச் சொல்வதானால், அப்படி எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பதற்கு அரசு இவர்களைப் பயிற்றுவிக்கிறது. இதன் விளைவை அரசியல், சமூக இயக்கங்கள் நேரடியாக எதிர்கொள்கின்றன. மக்களிடம் எந்த ஒரு சமூகச் சிக்கல் குறித்தும் பேசவோ, பிரசாரம் செய்யவோ முடியவில்லை. அதைச் செவிமடுத்துக் கேட்கவும், இணைந்து போராடவும் அவர்கள் தயார் இல்லை. பலர் குடியின் பிடியில் வீழ்ந்துகிடப்பது ஒரு காரணம் என்றால், மற்றவர்கள் குடியின் விளைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிகாரக் கணவனால் சிரமப்படும் குடும்ப உறுப்பினர்களுக்கு அவர்களின் சொந்தப் பிரச்னையைச் சமாளிக்கவே வலு இல்லாதபோது, அவர்கள் எப்படி சமூகப் பிரச்னைக்குக் குரல் கொடுக்க முன்வருவார்கள்? எனவே, வேறு எந்தச் சிக்கல் குறித்தும் மக்களிடம் விவாதிப்பதற்கு, குடியை ஒழிப்பது ஒரு முன்நிபந்தனை ஆகிவிட்டது. இந்தத் தடுப்பை உடைத்தால்தான் அடுத்ததற்கே போக முடியும். குடியை வைத்துக்கொண்டே மற்ற சமூகச் சிக்கல்களை அகற்றுவது சாத்தியமற்றது.
கருவேப்பிலங்குறிச்சியில் ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாய்க்குக் குடிக்கிறார்கள் எனப் பார்த்தோம். இந்த ஊரிலாவது பத்து கடைகள் இருக்கின்றன. நான்கைந்து ஹோட்டல்கள், ஒரு போலீஸ் ஸ்டேஷன் இருக்கின்றன. ஆனால், இது எதுவுமே இல்லாத அச்சுஅசல் கிராமப்புறப் பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன.
கருவேப்பிலங்குறிச்சியில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் ஊர் காவனூர். பக்காவான கிராமம். ஒரு சிறு சந்தில் நுழைந்து நடந்தால், ஒருபக்கம் வயல்வெளிகளும், மறுபக்கம் எருமை மாடுகளும் சூழ்ந்திருக்க, ஒரு டாஸ்மாக் கடை இருக்கிறது. இந்தக் கடையில் ஒரு நாளைக்கு 60 ஆயிரம் ரூபாய்க்கு சரக்கு விற்பனை நடக்கிறது. யார் காசு? இந்த ஊரில் எல்லோரும் பெரும் செல்வந்தர்கள் அல்ல. இருப்பது எல்லாம் மிக, மிக அடிமட்டக் கூலித் தொழிலாளர்கள். இவர்கள் ஒவ்வொரு நாளும் உடல்நோக உழைக்கும் பணம் சிந்தாமல், சிதறாமல் மதுக்கடைகளுக்குத்தான் வருகிறது. இந்தக் கிராமத்தின் மளிகைக்கடையில் ஒருநாள் வியாபாரம் 10 ஆயிரம் ரூபாய்தான் என்பதை ஒப்பிட்டுப்பார்த்தால் குடியின் பிரமாண்டத்தைப் புரிந்துகொள்ளலாம். பணம் மட்டும் அல்ல... இந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் குடிகாரர்கள் நேரடியாகப் பொருட்களையே கொடுத்து சரக்கு வாங்குகின்றனர். மண்வெட்டி, கடப்பாறை, அரிசி, பருப்பு, பெட்ரோல்... எனப் பண்டமாற்றுக்குப் பயன்படும் பொருட்களின் பட்டியல் நீள்கிறது.
டாஸ்மாக் வந்த பிறகு கிராமங்களின் சமூக இயல்பு அடியோடு சீர்குலைந்துவிட்டது. ஊர்மந்தை, சாவடி, வாய்க்கால் கட்டை, கோயில் வாசல், மரத்தடி நிழல் என முன்பு எங்கு எல்லாம் ஆண்கள் ஒன்றுகூடுவார்களோ... அந்த இடங்கள் அனைத்தும் இன்று திறந்தவெளி பார்களாக இருக்கின்றன. சாலையில் செல்பவர்கள் பார்க்கிறார்களே என்கிற தயக்கமோ, அச்சமோ இல்லாமல் இளைஞர்கள் குடிக்கிறார்கள். குடும்ப நிகழ்வோ, ஊர்த் திருவிழாவோ சரக்கு இல்லாமல் முழுமை அடைவதே இல்லை. இவர்கள் குடித்துவிட்டு வீசிய பிளாஸ்டிக் டம்ளர்களும் தண்ணீர் பாக்கெட்டுகளும் பாட்டில்களும் எங்கும் மலைபோல் குவிந்துகிடக்கின்றன. கோயில் வாசலில் ஒரு தலித் சிறுவனின் கால் பட்டுவிட்டால் 'தீட்டு’ என சாமியாடும் இவர்கள், குடித்த குவார்ட்டர் பாட்டில்களை அதே கோயில் பிராகாரங்களில்தான் வீசுகின்றனர்
- பாரதி தம்பி, 
குடி குடியை கெடுக்கும், 
ஆனந்தவிகடன், 30/09/2015

ஞாயிறு 27 2015

நினைவலைகள் எழுப்பும் உணர்வலைகள்!

படிக்க...அம்பேத்கர் நினைவலைகள் எழுப்பும் உணர்வலைகள்!

இளம் வயது, பள்ளிப் பருவ கோடை விடுமுறையில் தனது தந்தையைப் பார்க்க கோர்கானுக்கு இரயிலில் பயணிக்கிறார்கள் அம்பேத்கரும் அவரது அண்ணன் மற்றும் உறவுக்கார இளைஞர்களும். புதிதாக தனித்து வந்து இரயில் நிலையத்தில் அவர்கள் இறங்கியவுடன் சாதி தரை தட்டுகிறது. தண்ணீரையும் உணவையும் கூட அவர்கள் தொட முடியாத அளவுக்கு ஆதிக்க சாதி அசிங்கங்கள் சூழ்ந்து கொள்ளும் அனுபவத்தை நீங்களே பாருங்களேன்.
“… நாங்கள் அனைவரும் நல்ல உடை அணிந்து இருந்தோம். எங்களின் உடைகளிலிருந்தோ, எங்கள் பேச்சிலிருந்தோ நாங்கள் தீண்டத்தகாதவர்களின் பிள்ளைகள் என்பதை எவராலுமே கண்டுபிடிக்க முடியாது. நாங்கள் பார்ப்பனர்கள் என்று எண்ணிக் கொண்ட ஸ்டேஷன் மாஸடர் எங்கள் பரிதாப நிலையைக் கண்டு மிகவும்  வருந்தினார். இந்துக்களின் வழக்கமபோல, நீங்கள் எல்லாம் யார் என்று அவர் கேட்டார். ஒரு சிறிதும் யோசிக்காமல் நாங்கள் மஹர்கள் என்று நான் உளறி விட்டேன். (பம்பாய் இராஜதானியில் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட சமூகத்தினருள் மஹர்களும் ஒன்று). அவர் முகம் திடீரென  மாறி விட்டது. அதிசயக்கத்தக்க வெறுப்புணர்வுக்கு அவர் ஆட்படுவதை எங்களால் பார்க்க முடிந்தது.  எனது பதிலைக் கேட்டவுடனே அவர் தனது அறைக்குச் சென்று விட்டார். நாங்கள் இருந்த இடத்திலேயே நின்றுகொண்டு இருந்தோம். பதினைந்து, இருபது நிமிட நேரம் சென்றது. சூரியன் மறையும் நேரம். எங்கள் தந்தையும் வரவில்லை; சேவகனையும் அனுப்பவில்லை. ஸ்டேஷன் மாஸ்டரும் எங்களை விட்டு விட்டுப் போய்விட்டார். நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்; பயணத்தின் தொடக்கத்தில் நாங்கள் கொண்ட மகிழ்ச்சி  எல்லாம் மறைந்து  எங்களை மிகுந்த சோக உணர்வு ஆட்கொண்டது.
அரைமணி நேரம் கழித்து வந்த ஸ்டேஷன் மாஸ்டர் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று எங்களைக் கேட்டார். மாட்டுவண்டி வாடகைக்குக் கிடைத்தால், கோர்கான் வெகு தொலைவு இல்லை என்பதால், நாங்கள் உடனே புறப்படுவதாகக் கூறினோம். வாடகை சவாரிக்கு வரும் மாட்டு வண்டிகள் பல அங்கிருந்தன. ஆனால் நாங்கள் மஹர்கள் என்று ஸ்டேஷன் மாஸ்டரிடம் நான் கூறிய செய்தி அனைத்து மாட்டு வண்டிக்காரர்களுக்கும் தெரிந்து விட்டபடியால், தீண்டத்தகாதவர்களைத் தங்கள் வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்று தங்களை இழிவுபடுத்திக் கொள்ளவோ, தங்களை அசுத்தப் படுத்திக்கொள்ளவோ அவர்களில் எவரும் விரும்பவில்லை.” ( நூல். பக். 9, 10)
பலவிதமான சூழ்நிலைகளுக்குப் பிறகு ஒரு வழியாக காசுக்கு ஒத்துக் கொண்டது ஜாதி. சாதிக்கு விடை கொடுத்தது மாடு, “… ஸ்டேஷன் மாஸ்டர் என்ன செய்வது என்று தெரியாமல் பேசாமல் நின்று கொண்டிருந்தார். திடீரென அவருக்கு ஒரு யோசனை தோன்றியது; எங்களைப் பார்த்து “உங்களால் வண்டி ஓட்ட முடியுமா?” என்று கேட்டார். எங்கள் இயலாமைக்கு ஒரு தீர்வு காண அவர் முயல்கிறார் என்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது. “எங்களால் வண்டி ஓட்ட முடியும்” என்று நாங்கள் கூவினோம். இந்தப் பதிலைக் கேட்ட அவர் வண்டிக்காரர்களிடம் சென்று “வண்டிக்கு இரண்டு பங்கு வாடகை கொடுத்துவிட்டு வண்டியை அவர்களே ஓட்டி வருவார்கள்; நீ வண்டியின் பின்னே நடந்து செல்லலாம்” என்று கூறினார். இந்த ஏற்பாடு தனக்கு வாடகை சம்பாதித்துக் கொடுப்பதுடன், தன்னைத் தீட்டடையச் செய்யாமல் காப்பாற்றும் என்று கருதிய ஒரு வண்டிக்காரன் இதற்கு ஒப்புக் கொண்டான்.” (நூல்)
“…இரயில் நிலையத்துக்கு அருகில் ஓர் ஆறு ஓடிக் கொண்டிருந்தது… எங்களுக்கும் பசி அதிகமாக இருந்ததால், உணவு உண்ண வாய்ப்பு கிடைத்தது பற்றி நாங்கள் மகிழ்ந்தோம்… தண்ணீர் குடிக்க வந்த பசுக்கள், காளைகள் மற்றும் இதரக் கால்நடைகளின் மூத்திரம், சாணம் கலந்த சேறு போல் இருந்தது ஆற்று நீர். மனிதரின் பயன்பாட்டுக்கு உகந்ததாகவே அந்தத் தண்ணீர் இருக்கவில்லை. அந்த நீரின் நாற்றம் தாங்க முடியாததாக இருந்தபடியால், நாங்கள் அதைக் குடிக்கவில்லை. அதனால் வயிறு நிரமபும் முன் சாப்பிடுவதை இடையில் நாங்கள் நிறுத்த வேண்டியதாயிற்று… நான்கு , அய்ந்து மைல் தூரம் நாஙகள் வண்டி ஓட்டிக் கொண்டு வந்தோம்; வண்டிக்காரர் உடன் நடந்து வந்தார். பின்னர் அவர் திடீரென வண்டியில் குதித்து உட்கார்ந்து கொண்டு மூக்கணாங்கயிற்றை வாங்கிக் கொண்டு வண்டி ஓட்டத் தொடங்கிவிட்டார். வண்டியில் எங்களுடன் உட்கார்ந்து கொண்டு வந்தால் அசுத்தமாகிவிடுவோம் என்ற பயத்தினால் வாடகைக்கு வண்டியை ஓட்டிவர மறுத்த அந்த மனிதன், தன் மதக் கோட்பாடுகளை எல்லாம் கை விட்டுவிட்டு வண்டியில் எங்களுடன் உட்கார்ந்து கொண்டு வந்த அவரது நடவடிக்கை பற்றி நாங்கள் எண்ணி வியந்தோம்..” (நூல்)
ஆதிக்க சாதி மனநிலையின் சாதிய, வர்க்க ரசவாதங்களை அம்பேத்கர் விவரிக்கும் இந்த இடத்தில் தெற்கே ‘நான் தேவன்டா’ என்று மீசையை முறுக்கிவிட்டு வடக்கே ‘நான் பாவன்டா’ என்று வடை சட்டியோடு பிழைப்புக்காக ‘அண்ணே’ போட்டு அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் சமூக நிலைமைகள் தவிர்க்கவியலாமல் நினைவுக்கு வருகிறது.
அம்பேத்கரின் நினைவலைகள் பலவிதமான காட்சிகளையும் கருத்துக்களையும் நம் கண்முன் விரிக்கிறது,
“…எங்களுக்குப் பசி அதிகமாக இருந்ததால், நாங்கள் உணவருந்த விரும்பினோம். ஆனால் மறுபடியும் தண்ணீர் எங்கே கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது. எனவே எங்களுக்குத் தண்ணீர் வேண்டும் என்று வண்டிக்காரரிடம் கேட்டோம். சுங்கம் வசூலிப்பவர் ஓர் இந்து என்றும், நாங்கள் மஹர் என்ற உண்மையைக் கூறினால் எங்களுக்குத் தண்ணீர் கிடைக்காது
என்று வண்டிக்காரர் எங்களை எச்சரித்தார். எனவே, “நீங்கள் மகமதியர் என்று சொல்லிக் கொண்டு தண்ணீர் கிடைக்குமா என்று பாருங்கள்” என்று கூறினார். அதன்படி சுங்கம் வசூலிப்பவரிடம் நான் சென்று எங்களுக்கு சிறிது தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டேன். நீங்கள் யார் என்று அவர் கேட்டார். நாங்கள் மகமதியர்கள் என்று நான் அவரிடம் கூறினேன். எனக்கு உருது நன்றாகத் தெரியும் என்பதால், நான் அவரிடம் உருதில் பேசினேன். எனவே நான் உண்மையில் மகமதியன் என்று அவர் கருதுவார் என்று எண்ணினேன். ஆனால் என் தந்திரம் பலிக்கவில்லை. “உனக்காக யார் தண்ணீர் வைத்திருக்கிறார்கள்? மலைமேல் தண்ணீர் உள்ளது. வேண்டுமானால் நீயே போய் எடுத்துக் கொள். என்னிடம் தண்ணீர் எதுவும் இல்லை” என்று கறாராகக் கூறிவிட்டார். வண்டிக்குத் திரும்பி வந்த நான் என் அண்ணனிடம் செய்தியைக் கூறினேன். என் அண்ணன் என்ன நினைத்தார் என்பது எனக்குத் தெரியாது. எல்லோரும் படுத்து உறங்குங்கள் என்று மட்டுமே அவர் எங்களிடம் சொன்னார்…. எங்களிடம் நிறைய உணவு இருந்தது; எங்களைப் பசியும் வாட்டிக் கொண்டிருந்தது; என்றாலும் உணவருந்தாமல் நாங்கள் உறங்கவேண்டி நேர்ந்தது. எங்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை என்பதே இதன் காரணம்; நாங்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதே எங்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் போனதற்குக் காரணம்.”(நூல்.)
இப்படிப்பட்ட சமூக அநீதிகளுக்கு தனிப்பட்ட முறையில் நான் காரணமல்ல என்று மட்டும் சமாதானமடைய நியாயம் உள்ளதா? ஒட்டுமொத்த சமூகமும் தாழ்த்தப்பட்ட மக்களின் சேவைகளால் பயன்பெற்றுக் கொண்டு அவர்களுக்கான இயற்கையான உரிமைகளைக் கூட மறுக்கும் இந்த சமூக அமைப்பு, இதை மௌனமாய் அனுமதிக்கும் ஆதிக்க சாதி மனநிலை கேவலத்தின் உச்சம் என்பதை சுருக்கென உணர வைக்கின்றன பல பகுதிகள்.
வாழ்நாள் முழுக்க வருணாசிரம வெறிக்கு எதிராக சிந்தித்தவர் மட்டுமல்ல, அதையே சந்தித்தவர் அம்பேத்கர் என்பதை அவர் பரோடாவில் பட்ட அனுபவங்கள் விவரிக்கின்றன.
“…நான் ஒரு தீண்டத்தகாதவன் என்பதையும், ஒரு தீண்டத்தகாதவன் இந்தியாவுக்குச் சென்றால் அவன் அவனுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பிரச்சினையாகவே இருப்பான் என்பதையும் பற்றிய அனைத்து நினைவுகளையும் எனது அமெரிக்க, அய்ரோப்பிய அய்ந்தாண்டுக் கால வாழ்க்கை துடைத்து விட்டது. பரோடா இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த போது “எங்கு தங்குவது? யார் என்னை ஏற்றுக் கொண்டு இடம் கொடுப்பார்கள்?” என்ற ஒரு கேள்வி என் மனதைப் பெரிதும் கவலைக்கு உள்ளாக்கியது. விஷிகள் என்னும் இந்து விடுதிகள் அங்கு உள்ளன என்பது எனக்குத் தெரியும். அவர்கள் எனக்கு இடம் கொடுக்க மாட்டார்கள். நான் பொய்சொல்லி ஏமாற்றினால்தான் அங்கே என்னால் தங்க முடியும். அதற்கு நான் தயாராக இல்லை. அவ்வாறு தங்கி, பின்னர் நான் யார் என்பது தெரிந்துவிட்டால் அதனால் நேரக்கூடிய விளைவுகளை நான் நன்றாகவே அறிந்திருந்தேன்…. தங்கும் விடுதி இருக்கிறதா என்று அவரிடம் கேட்டேன். ஒரு பார்சி தங்கும் விடுதி இருப்பதாகவும், அங்கு பணம் கொடுத்தால் தங்கவும், சாப்பிடவும் இடம் தருவார்கள் என்று அவர் கூறினார். பார்சிகள் நடத்தும் விடுதி அது என்பதை அறிந்தவுடன் எனக்கு மனதில் நிம்மதி ஏற்பட்டது. ஜொராஸ்திய மதத்தைப் பின்பற்றுபவர்கள் பார்சிகள். அவர்கள் மதம் தீண்டாமையைப் பாராடடுவதில்லை என்பதால் என்னை அவர்கள் தீண்டத்தகாதவனாக நடத்துவார்கள் என்ற அச்சம் தேவையில்லை என்று கருதினேன். …. விடுதிப் பராமரிப்பாளர் ஒரு நோட்டுப் புத்தகத்துடன் வந்தார். அரைகுறையாக உடை களைந்திருந்த நிலையில் என்னைக் கண்ட அவர், நான் சத்ராவும் கஸ்தியும் அணிந்திருக்கவில்லை என்பதைக் கண்டார். பார்சியாக இருக்கும் அனைவரும் இந்த இரண்டையும் அணிந்திருப்பார்கள். நான் யார் என்று கடுமையான தொனியில் அவர் என்னைக் கேட்டார். பார்சி மக்களின் பயன்பாட்டுக்காக மட்டுமே பார்சிகளால் நடத்தப்படும் விடுதி அது என்று எனக்குத் தெரியாது. நான் ஓர் இந்து என்று அவரிடம் கூறினேன். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்,
அந்த விடுதியில் நீ தங்க முடியாது என்று கூறினார். அவரது பேச்சால் முற்றிலுமாக அதிர்ந்து போன எனக்கு நடுக்கம் ஏற்பட்டது. எங்கே செல்வது என்ற கேள்வி திரும்பவும் வந்துவிட்டது. சமாளித்துக் கொண்டு, நான் ஓர் இந்துவாக இருந்தாலும், அவருக்கு ஆட்சேபணை இல்லை என்றால், அங்கே தங்குவதற்கு எனக்கும் எந்த வித ஆட்சேபணை எதுவும் இல்லை என்று கூறினேன். “எவ்வாறு நீ தங்கமுடியும்? இந்த விடுதியில் தங்கும் அனைவரைப் பற்றியும் நான் பதிவேட்டில் பதிந்து வர வேண்டும் ” என்று கூறினார். அவரது நிலையையும் நான் அறிந்து கொண்டேன். பதிவேட்டில் பதிவதற்காக வேண்டுமானால் நான் ஒரு பெர்சி பெயரை உபயோகப் படுத்திக் கொள்கிறேன். “எனக்கு ஆட்சேபணை இல்லை என்கிறபோது நீ ஏன் ஆட்சேபிக்கிறாய். இதனால் நீ எதையும் இழக்கப்போவதில்லை, மாறாக நான் இங்கே தங்குவதால் உனக்கு ஏதோ சிறிதளவு பணமும் கிடைக்குமே” என்று நான் கூறினேன். நான் கூறியதை ஏற்றுக் கொண்டு அவர் சம்மதிப்பதை என்னால் பார்க்க முடிந்தது.
“… பிரச்சினை தீர்ந்தது என்று நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அந்தோ! இந்த மகிழ்ச்சி எவ்வளவு சீக்கிரத்தில் அழியப் போகிறது என்பதை அப்போது நான் அறிந்து இருக்கவில்லை……. நான் அவர்கள் யார் என்று அறிந்து கொள்ள வெளியே எட்டிப் பார்த்தேன். கைகளில் தடிகளுடன், கண்களில் கோபப்பார்வையுடன், உயரமாக தடித்த பத்துப் பன்னிரண்டு பார்சிகள் என் அறையை நோக்கி வருவதைக் கண்டேன். அவர்கள் சுற்றுலாப் பயணிகள் அல்லர் என்பதை நான் அறிந்து கொள்ளத் துவங்கியதும், அவர்கள் அதற்கான ஆதாரத்தை அளித்தனர். என் அறைமுன் வரிசையாக நின்று கொண்ட அவர்கள் என்னை நோக்கி கேள்விக் கணைகளாகத் தொடுத்தனர். “நீயார்? இங்கே ஏன் வந்தாய்? ஒரு பார்சி பெயரை வைத்துக் கொள்ள உனக்கு என்ன துணிச்சல்? அயோக்கியனே, இந்தப் பார்சி விடுதியையே நீ அசுத்தப்படுத்தி விட்டாய்” என்று கத்தினார்கள். நான் அமைதியாக நின்றேன். என்னால் எந்தப் பதிலும் கூற முடியவில்லை…… மாலையில் விடுதியில் உன்னைப் பார்க்கக்கூடாது; உன் பொருள்களை எல்லாம் சுருட்டிக் கொண்டு ஓடிவிடு; இல்லாவிட்டால் நீ கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டும்” என்று கூறிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். அதிர்ச்சியும் அச்சமும் கொண்ட நான் பெரும் மனச்சோர்வும் அடைந்தேன். அனைத்தையும் சபித்த நான் ஏமாற்றத்துடன் அழுதேன்….” (நூல்)
ஒரு இளைஞனாக அம்பேத்கர் அழுத கண்ணீர், காலங்கள் கடந்தும் பல இளைஞர்களின் விழிகள் மாறி வழிந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்குக் காரணமான சமூக அமைப்பை நினைத்து வெட்கப்பட்டு குற்ற உணர்ச்சியோடு ஒருவன் தன்னைக் குறுக்கிக்கொள்வது மட்டும் நியாயமாகாது. வெளிப்படையான இந்த சமூக அநீதியை வெளிப்படும் களங்கள், முக்கியமாக ஆதிக்க சாதி உணர்வு நிலைக்கு எதிராக ஒவ்வொருவரும் சுயசாதிக்கு எதிராக கலகம் செய்வதும் ஆதிக்க சாதி அசிங்கத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதும்தான் சாதி ஒழிப்பு போராட்டத்திற்கான முதல் வழி. இந்நூலில் அம்பேத்கரின் நினைவலைகள் அனுபவத்தின் வழி உணர்த்துவதும் இதுதான்.
பார்ப்பன இந்துமதம் தொடங்கி பார்சி, கிறிஸ்தவ, இசுலாமிய மதங்கள் வரை அனைத்துமே தம்மை தீண்டத்தகாதவனாக நடத்திய அனுபவங்களை அம்பேத்கர் பகிர்ந்துள்ளார். ஒரு புரட்சியைத் தீண்டினால் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்கள் தமக்கான சுயமரியாதையும் , பொதுவான ஒரு சமூகத்தையும் பெற முடியும் என்று சொல்வதற்கான அனுபவம் அம்பேத்கருக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். அதை நாம் சொல்வதில் தப்பேதுமில்லை.
உடனே சாதி என்பது இந்தியாவுக்கே உள்ள தனிப்பிரச்சினை, இதை மேலைநாட்டு மார்க்சியத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று மேல், கீழ் பார்க்கும் அன்பர்களே! இந்தியாவுக்கே உள்ள இந்த  விசேசப் பிரச்சினையை மேலை ஐரோப்பிய முதலாளித்துவ ஜனநாயக வழியில் என்று முயன்று அம்பேத்கரே தன் இறுதிநாளில் நொந்து கொண்டதுதான் இந்த போலி ஜனநாயகம். எல்லா சமூக அநீதிகளுக்கும் பாதுகாப்பாகவும் அடிப்படையாகவும் விளங்கும் இந்திய ஆளும் வர்க்க, ஆதிக்க சாதி அரசமைப்பை தகர்த்தெறிவதுதான் இந்நூலை படித்து முடித்தவுடன் ஏற்படும் உணர்வு. படித்துப் பாருங்கள், நீங்களும் உணர்வு பெறுங்கள்…
நூல்விசாவுக்காக காத்திருக்கிறேன். டாக்.பி.ஆர். அம்பேத்கரின் நினைவலைகள்.
விலை: ரூ.10.00
வெளியீடு: திராவிடர் கழகம்.
நூல் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002.
தொலைபேசி: 044-2841 2367

சனி 26 2015

இரு நூற்றாண்டுகளுக்கு முன்னால் அவர்கள்...!!!



விடுதலைப் போரின் வீர மரபு
படம் -வினவு
அதோ

தூக்கு மேடையை எதிர் நோக்கி காத்திருக்கிறார்   பகத்சிங். தன்னை விடுவிப்பதற்க்காக, ஆங்கில அரசிடம் கருணை மனு போட்ட தன் தந்தையை “ வேறு யாரும் இதை செய்திருந்தால் துரோகி என்றே நான் கூறியிருப்பேன்” என்று கோபம்  தெறிக்க கண்டிக்கிறார் பகத்சிங்.



திப்பு சுல்தான்
போர் வீரர்களின் பிணக்குவியல்களுக்கு மத்தியில் திப்பு
                                                                         திப்பு சுல்தான்
 மார்பில் குருதி கொப்பளிக்க போர்க் களத்தில் சரிந்து கிடக்கிறார் திப்பு.  “மன்னா, யாரேனும் ஒரு பிரிட்டிஷ் அதிகாரியிடம் சரணடைந்து உயிர் பிழைத்து விடலாம்” என்று கூறிய தன் பணியாளரை  “ முட்டாள்.....வாயை மூடு” என்று எச்சரிக்கிறார் திப்பு.


குண்டடிப்பட்டு,மகன்கள்,பேரன்கள்,சகவீரர்கள் என நூற்றுக் கனக்கானருடன்
தூக்குக்காக காத்திருக்கிறார் சின்ன மருது. “சமாதானம் பேசலாம்” என்று ஆசை காட்டுகிறான் துரோகி கௌரி வல்லப உடையத் தேவன் . தனது குடி வழியே தூக்கில் தொங்கப் போகும் காட்சி மணக்கண்ணில் தெரிந்தும் அந்தத் துரோகியை காறி உமிழ்கிறார் சின்னமருது.



கைகளைப்  பின்புறம் பிணைத்து கட்டபொம்மனை துாக்கு மேடையை நோக்கி இழுத்துச் செல்கிறார்கள் கும்பனிச் சிப்பாய்கள் சுற்றிநிற்கும் பாளையக்காரர்கள் மீது ஏளனமும் வெறுப்பும் கலந்த பார்வையை வீசுகிறார். கட்டபொம்மனின் தலை தொங்கி சரிந்த பின்னரும்..கட்டபொம்மனின் விழிகள் சரியவில்லை.

இரண்டு நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் உறைந்து நிற்கிறது கட்டபொம்மனின் ஏளனப் பார்வை.


 நன்றி!!கீழைக்காற்றின்... “விடுதலைப்போரின் வீர மரபு” லிருந்து

வெள்ளி 25 2015

மனிதகுல வரலாற்றில் அரை நூற்றாண்டு காலத்துக்கு இரண்டு சிந்தனையாளர்கள்

கார்ல் மார்க்ஸும், பிரெட்ரிக் ஏங்கெல்ஸும்.......



கார்ல் மார்க்ஸும், பிரெட்ரிக் ஏங்கெல்ஸும்..............
‘‘நான்கு தமிழ்ப் புலவர்கள் கூடும் இடத்தில் ஒரு போலீஸ் ஸ்டேஷனைப் போடு’’ என்றார் தந்தை பெரியார். அந்த அளவுக்கு குடுமிப்பிடிச் சண்டை இருக்கும் என்பதே அவரது கணிப்பு.

இரண்டு சிந்தனையாளர்கள் கூடினால்?... சொல்லத் தேவையில்லை. ஒருவருக்கொருவர் விடும் மூச்சுக் காற்றையே நிறுத்துவதற்கு முயற்சி செய்வார்கள். இப்போது சில சிந்தனையாளர்கள் அந்தக் காரியத்தை கனகச்சிதமாகச் செய்து கொண்டும் இருக்கிறார்கள்.

ஆனால், மனிதகுல வரலாற்றில் அரை நூற்றாண்டு காலத்துக்கு இரண்டு சிந்தனையாளர்கள் ஒன்றாகவே சிந்தித்து, ஒன்றாகவே பழகி, ஒன்றாகவே வாழ்ந்து மறைந்தார்கள் என்றால் அது கார்ல் மார்க்ஸும், பிரெட்ரிக் ஏங்கெல்ஸும்தான்.

மார்க்ஸும் ஏங்கெல்ஸும் ஏறக்குறைய ஒரே வயது கொண்டவர்கள். ஏங்கெல்ஸைவிட மார்க்ஸ் இரண்டு வயது மூத்தவர். அவ்வளவுதான். ஜென்னியை, மார்க்ஸ் காதலித்ததற்கு இணையானது ஏங்கெல்ஸ் மீது மார்க்ஸ் வைத்திருந்த நட்பு.

‘‘நான் எழுதியது அனைத்தையும் ஏங்கெல்ஸுக்குக் காண்பிப்பேன். அவர் சரி என்றால்தான், அச்சகத்துக்கு அனுப்புவேன். ஏங்கெல்ஸ் எனக்கு முழு உலகம்’’ என்று சொல்லிக்கொண்டவர் மார்க்ஸ். இருவரும் ஒரே மேஜையில் உட்கார்ந்து மான்செஸ்டர் நூலகத்தில் படித்தார்கள். வீட்டில் ஒரே மேஜையில் உட்கார்ந்து எழுதினார்கள். இருவரும் சேர்ந்து ஒரே புத்தகத்தைத் தயாரித்தார்கள். மார்க்ஸ் எழுதியதை ஏங்கெல்ஸ் திருத்துவார். ஏங்கெல்ஸ் எழுதியதை மார்க்ஸ் செழுமைப்படுத்துவார். பார்க்கும்போதெல்லாம் பேசிக்கொண்டே இருந்தார்கள். பேசுவதற்காகவே பார்த்துக் கொண்டார்கள். நாளை எது தொடர்பாக பேச வேண்டும் என்பதை முந்தைய நாளே முடிவு செய்துகொண்டார்கள். ஒரே அறையில் எதிரெதிர் திசையில் நடந்தபடியே விவாதங்கள் செய்வார்கள். வெட்டவெளியில் ஒன்றாக நடந்தபடியே பரிமாறிக்கொள்வார்கள். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள 40 ஆண்டுகள் அவசியப்படவில்லை. முதல் முறை சந்தித்தபோது தொடர்ச்சியாக 10 நாட்கள் மார்க்ஸோடு தங்கினார் ஏங்கெல்ஸ். அந்த 10 நாட்களிலேயே மார்க்ஸின் மேதைமையை ஏங்கெல்ஸ் உள்வாங்கிக்கொண்டார். ஏங்கெல்ஸின் கூர்மையை மார்க்ஸ் அறிந்து கொண்டார். கள்ளங்கபடம் இல்லாத, எதிர்பார்ப்புகள் இல்லாத, உள்நோக்கம் இல்லாத நல்ல நட்புக்கு ஒரு மணித்துளி போதும் என்று நமக்குப் புரிய வைக்கிறார்கள்.

முதலாளித்துவ அமைப்பு முறையில் பாட்டாளி வர்க்கத்தின் உண்மையான நிலையை விளக்கிக் கூறியவர்கள் மார்க்ஸும் ஏங்கெல்ஸும். சமுதாய உறவுகளின் வளர்ச்சியை அளவிட்டார்கள். மதக் கோட்பாடுகளுக்குப் பதிலாக விஞ்ஞானத்தை மாற்றாக வைத்தார்கள். மனிதனின் பரிணாம வளர்ச்சியை அளவிட்டுச் சொன்னது டார்வின். மனிதகுல வரலாற்றின் வளர்ச்சியைச் சொன்னவர்கள் மார்க்ஸும் ஏங்கெல்ஸும். ‘‘இதுவரை வந்த தத்துவ ஞானிகள் உலகைப் பற்றி விளக்கம் மட்டுமே செய்தார்கள். ஆனால் உலகை மாற்றுவது என்பதே முக்கியமானது’’ என்றார் மார்க்ஸ். அவரும் அவரது நண்பரும் உலகை மாற்ற உண்மையில் சிந்தித்தவர்கள்.

பாட்டாளிகளைப் பற்றி மட்டுமே சிந்தித்த மார்க்ஸும் ஏங்கெல்ஸும் பாட்டாளி வர்க்கத்தில் பிறந்தவர்கள் அல்ல. சொத்துடைமை வர்க்கத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். மார்க்ஸின் தந்தை வழக்கறிஞர். ஏங்கெல்ஸின் குடும்பத்துக்கு ஜவுளி தொழில் இருந்தது. மார்க்ஸ் சட்டம் படித்தார். ஏங்கெல்ஸ் அவரது அப்பாவின் தொழிலைக் கவனித்தார். அப்பாவிடம் இருந்த புத்தகங்களைப் படிப்பதன் மூலமாக சமூகம் தெரிய ஆரம்பித்தது மார்க்ஸுக்கு. பழைமைவாத குடும்பம் என்பதால் கிறிஸ்துவ சபை ஈடுபாடு ஏற்படுகிறது ஏங்கெல்ஸுக்கு.

மார்க்ஸ் வழக்கறிஞராக ஆகிவிடுகிறார். ராணுவத்தில் சேர்ந்துவிடுகிறார் ஏங்கெல்ஸ். இருவருமே சிந்தனைச் சிற்பிகள் என்பது அவர்களது முதல் கட்டுரையிலேயே தெரிந்து போனது.
‘ஒரு மனிதன் மனிதகுலத்துக்குச் சேவை செய்ய நினைத்தால், அவனுடைய மகிழ்ச்சி கோடிக்கணக்கான மக்களுக்குச் சொந்தமானதாக இருக்கும்’’ என்பது மார்க்ஸ் எழுதிய முதல் கட்டுரையில் இருந்த வரிகள். மக்களை, அவர்களது எஜமானர்கள் நல்லவர்கள்போல் நடித்து எப்படி கொடுமையாக நடத்துகிறார்கள் என்பது ஏங்கெல்ஸ் எழுதிய முதல் கட்டுரையின் சாராம்சம்.

‘உனக்கு எது பிடிக்குமோ அதைச் செய்’ என்று அனுமதி வழங்கிய தந்தைக்கு மகனாகப் பிறந்தவர் மார்க்ஸ். ‘எனக்குப் பிடித்ததைத்தான் நீ செய்ய வேண்டும்’ என்று கட்டுப்பாடு போட்ட தந்தைக்கு மகனாகப் பிறந்தவர் ஏங்கெல்ஸ். இரண்டு வெவ்வேறு வளர்ப்பு முறைகள் கொண்டவர்களை ஒன்றாக ஆக்கியது அவர்களது வர்க்க சிந்தனை.

இவர்கள் இருவரும் சில ஆண்டுகள் ஒரே தெருவில் இருந்தார்கள். பல ஆண்டுகள் வெவ்வேறு நாடுகளில் இருந்தார்கள். மார்க்ஸ் வாழ்வின் அனைத்துச் சலனங்களின்போதும் ஏங்கெல்ஸ் இருந்துள்ளார். ஏங்கெல்ஸுக்கு எல்லாமுமாக மார்க்ஸ் இருந்துள்ளார்.

ஏங்கெல்ஸ் எழுதியதில் தலைசிறந்த புத்தகங்களில் ஒன்று ‘டூரிங்குக்கு மறுப்பு’ என்பதாகும். அது, இயற்கை விஞ்ஞானம் பற்றியது. அந்தப் புத்தகத்தை ஏங்கெல்ஸ் தயாரிக்க மார்க்ஸ் கடுமையாக உதவினார். மூலதனத்தின் முதல் பாகம் மட்டும்தான் மார்க்ஸ் உயிரோடு இருக்கும்போது வெளியானது. மறைவுக்குப் பிறகுதான் மற்ற நான்கு பாகங்களும் வெளிக்கொண்டு வரப்பட்டது. இறப்பதற்கு சில நாட்களுக்கு முன், மூலதனத்தின் கையெழுத்துப் பிரதிகளை தனது மகள் எட்காரிடம் கொடுத்து, ‘‘இதை ஏங்கெல்ஸிடம் கொடு. அவர் எதையாவது செய்யட்டும்’’ என்றார் மார்க்ஸ். தனது பணிகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு மார்க்ஸின் மூலதனத்தைச் செம்மைப்படுத்தி வெளியிடுவதில் உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவிட்டவர் ஏங்கெல்ஸ். இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் எழுதிய கடிதங்களை மொத்தமாகப் படித்துப் பார்த்த லெனின், ‘‘இவர்களது நட்பு பண்டையக் காலக் கதைகளை மீறிய உணர்ச்சி மிகுந்த நட்பு’’ என்று மகுடம் சூட்டினார்.

வறுமை, மார்க்ஸையும் அவரது குடும்பத்தையும் தின்றது. அவரது வீட்டில் இருந்த அத்தனைப் பொருட்களையும் ஜப்தி செய்யும் அளவுக்குக் கடன். வீட்டில் எடுக்க எதுவும் இல்லாமல் குழந்தை படுத்திருந்த தொட்டிலையும் விளையாடிய பொம்மைகளையும் எடுத்துப் போய்விட்டார்கள். ‘‘வெறும் தரையில் என்னுடைய குழந்தைகள் குளிரால் உறைந்துபோக என்னுடைய மார்பகங்கள் வேதனை மிகுந்து வலி எடுத்து படுத்திருக்க வேண்டியதாயிற்று” என்று மனைவி ஜென்னி புலம்பிக் கண்ணீர் வடிக்கும் அளவுக்கும், ‘‘என்னுடைய படுமோசமான எதிரிக்குக் கூட இந்த நிலைமை வரக் கூடாது’’ என்று மார்க்ஸ் புலம்பும் அளவுக்கும் வறுமை வாட்டியது. அப்போது ஏங்கெல்ஸ் என்ன செய்தார் தெரியுமா? மான்செஸ்டரில் ஒரு நிறுவனத்தில், தனக்காக மட்டுமல்ல, தனது நண்பனுக்கு பணம் அனுப்ப வேண்டும் என்பதற்காகவே வேலையில் சேர்ந்தார்.

‘‘பிறக்கும்போது குழந்தைக்குத் தொட்டில் வாங்க பணம் இல்லை. இறக்கும்போது சவப்பெட்டி வாங்க பணம் இல்லை’’ என்று ஜென்னி சொல்லும் அளவுக்கு வாழ்க்கை இருந்தாலும் யாரோடும் மார்க்ஸ் சமரசம் செய்து கொள்ளவில்லை. ‘நியூ ரெயினிஷ்சி ஜிட்டுங்’ என்ற இதழை மார்க்ஸும் ஏங்கெல்ஸும் நடத்தினார்கள். ‘கைதுகள்’ என்ற கட்டுரை எழுதியதற்காக இருவர் மீதும் வழக்கு பாய்ந்தது. நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட மார்க்ஸ், ‘‘பகைவர்களின் எறியீட்டிகளுக்கு முன்பாக குனிந்து ஒதுங்கி நின்று போராடிக்கொண்டிருப்பதே நமது தரப்பின் மிகப்பெரிய தியாகம். பத்திரிகையின் கடமை அத்தகையதாகவே இருக்கிறது’’ என்று சொன்னபோது வழக்கத்துக்கு விரோதமாக நீதிமன்றத்திலேயே பலரும் கைதட்டினார்கள். ‘‘சரியான உண்மை விவரங்களை மிகச் சரியாக சொல்லி அவைகளில் இருந்து சரியான முடிவுக்கு வந்ததுதான் எங்கள் குற்றமா?’’ என்று அப்போது கேட்டார் ஏங்கெல்ஸ். அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை சரியான உண்மை விவரங்களை மிகச் சரியாகக் கூறுபவர்கள் மீதுதான் வழக்குகள் பாய்ச்சப்படுகின்றன. இந்த வழக்குக்குப் பிறகுதான் அவர்கள் இருவரும் அதிகம் எழுதினார்கள். சரியானவர்கள் அப்படித்தான் செய்வார்கள்.

மார்க்ஸுக்கு இறுதி நாட்களில் உணவு சாப்பிட முடியவில்லை. பால் தவிர, வேறு எதுவும் உள்ளே போகவில்லை. நலம் குன்றிய நண்பனை பார்க்க 1883-ம் ஆண்டு மார்ச் 14-ம் நாள் மதியம் இரண்டு மணிக்கு வருகிறார் ஏங்கெல்ஸ். எல்லோரும் அழுதுகொண்டிருக்கிறார்கள். ‘மேலே போங்கள்’ என்கிறார் மார்க்ஸின் மகள் ஹெலன். மேலே செல்கிறார், ஏங்கெல்ஸ். சாய்ந்து கிடக்கிறார் மார்க்ஸ். தனது நண்பன் இதுவரை விரும்பிய எல்லாப் புத்தகங்களையும் தேடித் தேடி வாங்கித் தந்த ஏங்கெல்ஸ், தன் நண்பனுக்காக சவப்பெட்டியும் வாங்கினார்.

மார்க்ஸ் எங்கே புதைக்கப்பட்டார் தெரியுமா? லண்டன் ஹைகேட் கல்லறையில் சமுதாயத்தாலும் மாதா கோயிலாலும் நிராகரிக்கப்பட்ட மனிதர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் அடக்கம் செய்யப்பட்டார். தத்துவாசிரியனை அடக்கம் செய்துவிட்டு பேசிய ஏங்கெல்ஸ், ‘‘யுக யுகாந்திரத்துக்கும் மார்க்ஸ் பெயர் நிலைத்து நின்று நீடித்திருக்கும். அவருடைய மாபெரும் பணியும் என்றும் நிலைத்திருக்கும்’’ என்றார்.

அவர் புகழ் நீடித்திருப்பதற்கும் நிலைத்திருப்பதற்கும் என்ன காரணம்?

மார்க்ஸிடம் அவர் மகள், ‘‘அப்பா! உங்களுக்கு மகிழ்ச்சி தரும் கருத்து எது?’’ என்று ஒருமுறை கேட்டாள். ‘‘போராடுவது’’ என்று பதில் அளித்தார் மார்க்ஸ். ‘‘அப்பா, உங்களுக்கு துயரம் தரும் கருத்து எது?’’ என்று மகள் கேட்டாள். ‘‘கீழ்ப்படிவது’’ என்று பதிலளித்தார் மார்க்ஸ். கீழ்ப்படியாமல் போராடுவோம். புழுவாக இருந்தாலும் புலியாக இருந்தாலும் போராடியதே வாழும். சமரசம் செய்வது வீழும்!

நன்றி! -ப.திருமாவேலன், ஜூனியர் விகடன்.

ஓவியம்: டிராட்ஸ்கி மருது

வியாழன் 24 2015

தாயை தவற விட்ட தனயன்...

என்.- தாய்...



அம்மா.... அப்பா எங்கேம்மா..

அப்பா..சாமிகூட சென்று
விட்டார்...மகனே........

அந்த சாமி...எங்கேம்மா.....

நம் எதிரில் இருப்பதுதான்
அந்த சாமி மகனே............

இந்தச் சாமி உன்னிடம்
பேசவில்லையே ..யம்மா...

அந்தச் சாமி வடிவில்தான்
நீ பேசுகிறாய்  மகனே...

நான்.. சாமியா....அம்மா..

ஆம் ..மகனே... நீதான்
என்னை காக்க வந்த
குல ..சாமி....மகனே..

நான்  சாமியாய்  இருந்து
உன்னையும் அககாவையும்
காக்கிறேன்...அம்மா...........

அதைத்தான் உன்னிடம்
வேண்டுகிறேன் மகனே!!!!


-----வயது முதிர்வின் காரணமாக
       தன் தாய் இறந்த போதும்
       தாயை தவற விட்ட
       தனயனாக  உணர்கிறான்  அவன்......

செவ்வாய் 22 2015

தகவல் மற்றும் அறிவிப்பு தெரிவித்தல்......

அன்புமிக்க.. நண்பர்களே! பதிவர்களே! வாசகர்களே!


எனது தாயார்  20/ 9/ 2015 ஞாயிறு -இரவு 8.30 மணியளவில் இயற்கை எய்தினார் எனது தாயார் இறந்த  துக்கத்தை முன்னிட்டு ஒரு வாரத்துக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.




சனி 19 2015

முப்பெரும் மதங்களின் படைப்புக் கதை

ஒலகத்தில் முப்பெரும் மதங்களாக மூன்று மதங்கள் இருக்கின்றன் அவற்றில் முதல் வரிசையில் இருப்பது கிறிஸ்தவ மதம் இரண்டாவது வரிசையில் நிற்பது முஸ்லிம் மதம் மூன்றாவதாக இருப்பது பிராமண மதம். இந்த மூன்றும்.  இந்த உலகம், அதில் வாழும் உயிரிணங்கள் மற்றும் மனிதர்கள் எவ்வாறு படைக்கப்பட்டன என்று அதனதன் தரத்துக்கு ஏற்ப அதாவது புளுகுவதில் ,  எப்படி கதை விட்டு..கடை விரித்தன . என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..

படம்-
1.  கிறிஸ்துவம்--பைபிளின்படி....... சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர். கடவுள்  இவ்வுலகை படைத்த மூன்றாம் நாளில் தாவரங்களை ப்படைத்தார். ஐந்தாம் நாளில் மீனினங்களை படைத்தார். ஆறாம் நாளில்   விலங்கு இனங்களையும்  பாலூட்டிகளையும் படைத்தார். ஏழாம் நாளில் கடைசியாக மனிதர்களை படைத்தார். களி மண்ணலிருந்து ஆதாமையும் அவனது விலா எலும்பிலிருந்து ஏவாளையும் படைத்தாராம்.



படம்-https://ta.wikipedia.org/s/1fa
2.இஸ்லாம்.... குர்...ஆன்..படி....557 ஆண்டுகளுக்குப்பின் அளவற்ற அருளானனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லா  ...ஆறு கட்டங்களாக இவவுலகை படைத்தார். சுட்ட களி மண்ணிலிருந்து ஆதாமை உருவாக்கினாராம்



படம்-www.eelamview.com

3.பிராமணர்களின் பார்ப்பன..மத புர்ர்ராணங்களின்படி.... ஈரு ஏழு லோகங்களையும் அவற்றிலுள்ள உயிரிணங்களையும். நால்வருண மனிதர்களையும் பிரம்மா படைத்தாராம்.  இதில் பிரம்மாவை படைத்தது விஷ்னு என்றும் அந்த விஷ்னுவை படைத்தது சிவன்தான் என்றும் அதாவது கடவுளையே படைத்தவர்கள் இன்னாரென்று கோஷ்டி பூசல் நடப்பதால்.. தங்களுக்குள் கோஷ்டி பூசல் இல்லை என்று மனிதர்களுக்கு தெரிவிப்பதற்க்காக  அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டதே என்று மு்ம்மொழிகின்றனர்






வெள்ளி 18 2015

வந்தால்.....எல்லாம் மொத்தமாக வரும்............!!!!!!!!




மற்றவர்களுக்கு எப்படியோ..

அவருக்கு வந்தால்
எல்லாம் மொத்தமாக
வந்து சேரும்..

நோயில் விழமாட்டார்
விழுந்தால் பலநாள்
எழுந்திரிக்க மாட்டார்

பல நாள் கவனமாக
இருப்பார் அப்படியும்
ஒருநாள் கவனம்
மறந்து படு
அவஸ்தை படுவார்.

சிலர் தலைவலிதான்
பயங்கரம் என்பர்
வயித்துவலி வந்தவர்
வயித்தவலி  தான்
மோசமானது என்பார்
இப்படி ஒவ்வொரு
வலியும் அவரவர்க்கு
பிரதானமாக இருக்கும்
சிலருக்கு  எல்லாம்
மொத்தமாக வரும்

அந்தச் சிலரில்
இவரும் ஒருவர்
வராமல் வரும்
நோக்காடு மொத்தமாய்
வருவது போல்
செலவுகளும் மொத்தமாய்
வந்துச் சேரும்.

உறவினர் நண்பர்களின்
காதுகுத்து விழா.
பூப்புனித நீராட்டு
விழா.. புதுமனை
புகுவிழா..திருமணவிழா
இதோடு சேர்ந்து
தொழில் செய்யும்
இயந்திரத்தின் ரிப்பேர்
மூன்று டூவீலரின்
பொருள் மாற்று
சர்வீஸ் செலவு

நிரந்தரச் செலுவுகளுடன்
இவைகளும் மொத்தமாய்
வந்து சேறும்...
இவைகளை சமாளிக்க
இவர் வேலை
செய்த கூலியின்
காசு.துட்டு
பணம் மட்டும்
மொத்தமாய் வந்து
சேர்ந்ததாக சரித்திரம்
இல்லை.. ஏனென்றால்.
ஊரான் நாட்டுக்காரன்
மொத்தமாய் அள்ளி
செல்ல அனுமதிக்கும்
ஆளுவோர் நாடாக
இருக்கும் போது.....



வியாழன் 17 2015

“சோறு விற்பனைக் கடை வந்த வரலாறு"..

தலைப்பைச் சேருங்கள்

அம்மாத்தாய் என்ற பெயரைச் சுறுக்கி “அம்மா மெஸ்என்று பெயரிட்ட சோற்று விற்பனைக் கடையை கவி நாட்டு  பேரரசர் திறந்துவைத்து உரையாட்டிய செய்தியை பார்த்தபோது.. பெரியார் சிலைக்கு எதிரே உள்ள ஒரு சோறு  என்ற  அசத்தல் பெயரிட்ட சோறு  கடையையும் பார்க்க நேரிட்டது.

ஆரம்பத்தில் சோறு விற்பனை கடை பற்றி படித்தது என் நிணைவுக்கு வந்தது...வந்த நிணைவு   மறந்துவிடும் என்பதால் இந்தப்பதிவு....

விசய நகர பேரரசர் காலம் தொடங்கிய காலத்திலிருந்து தமிழ்நாட்டு சத்திரங்களில் சோறு விற்கப்பட்டு..பின்னர்ஆங்கிலேயர்  ஆட்சிக்காலத்தில் ஹோட்டல் எனப்படும். உணவு விற்பனைக் கடைகள் தொடங்கப்பட்டன.

கடந்த நூற்றாண்டின் பிற்ப்பகுதியில்தான் நகரங்களிலும் கிராமங்களிலும் காசுக்கு சோறு விற்கும் கடைகள் உண்டாகின.

அப்பொழுதுகளில்கூட நாலுவர்ணசாதி மதத்தைச்சேர்ந்த பிராமணர்களும் அவர்களுக்கு அடுத்த நிலையிலுள்ள உயர் சாதியினரும், முஸ்லீம் மத்த்தைச் சேர்ந்தவர்களுமே..தங்கள் தங்கள் சாதியினருக்கு மட்டுமே உரிய சோற்றுக் ( உணவங்கள்) கடைகளை நடத்தி வந்திருக்கின்றனர்.

போலிச் சுதந்திரத்துக்குப் பின்னரும் பிராமணர்கள் நடத்தும் கடைகளில் பிராமணர்கள் மட்டுமே உண்ணும் கடைகள் இருந்தன.

இவற்றை எதிர்த்து பெரியாரும், பெரியாரின் தொண்டர்களும் விடப்பிடியான மறியல், மற்றும் போராட்டங்கள் செய்த பின்னர்தான. சாதிக்காரர்களுக்கான  சோறு விற்கும் அவ்வழக்கம் ஒழிக்கப்பட்டது..


நனறி! பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்களின் “ பண்பாட்டு அசைவுகள்என்ற நூலிருந்து..


புதன் 16 2015

குடிகெடுத்த புனிதவதியின் வரலாற்றை மறக்காமல் வந்து சொன்ன அண்ணன்...


முன்கதை படிக்க---...என்னப்பா.....நடக்குது...நாட்டில...

இந்தா வந்து சொல்றேன்பா..என்று சொல்லிவிட்டு போன அண்ணன் 

பின்னர் ஒருநாள் ..அவரின் கட்சி தலைவர். கன்டிசன் பெயில் முடிந்து சென்ற பிறகு வந்தார். கூட்டமாக கூடியிருந்த தம்பிகளிடம் வந்து நின்றார். அதில் ஒரு தம்பி அண்ணன் சொன்னதை மறக்காமல்

“அண்ணே...குடிகெடுத்த  புனிதவதியின்  வரலாற்றை சொல்றேன்னு  சொன்னிங்களே  ...அண்ணே.. என்றார்.

ஆ..... அந்த புனிதவதியைப்....பத்தின வரலாறுதானே.......??? என்றார்.

ஆமாண்ணே..என்றனர்..தம்பிமார்கள்.

நான் சொல்வதை விட உங்களுக்கு கூடுதலாக வரலாற்றை கொண்டு வந்திருக்கேன் தம்பி மார்களே...!!  என்று கூறியபடி ...  தன் கையில் மடித்து வைத்திருந்த  புத்தகத்தை காட்டி இந்த புத்தகமே உங்களுக்கு புட்டு புட்டு வைக்குமடா..என்றுவிட்டு அந்தத் தம்பிமார்களில ஒருவனை... அந்தப் புத்தகத்தை கொடுத்து.... இதிலிருந்து  ...சத்தமா  படிடா... என்றார்.

“புதிய ஜனநாயகம்” என்ற அந்தப் புத்தகத்தை வாங்கிய தம்பி அண்ணன் சொல்லிய பகுதியிலிருந்து    சத்தத்துடன்  படித்தான்.

puthiya-jananayagam-september-2015
தமிழகத்தில் பொறுக்கி அரசியலின் பரிணாம வளர்ச்சி !

அண்ணா-கருணாநிதியின் வெறும் சினிமா கவர்ச்சி அரசியலாகச் சீரழிந்து, இறுதியில் எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா கும்பலின் பிழைப்புவாதப் பொறுக்கி அரசியலாகப் பரிணமித்தது. இப்போது அதை சாராயம்-கறி பிரியாணி-ரூபாய் நோட்டு பரிமாறுவதும், ரிக்கார்டு டான்சு, சினிமா நடிக-நடிகைகளின் காமெடி, கவர்ச்சிப் பேசசுகள் மூலம் தேர்தல் பிரச்சாரம் என்று மக்களது ஆதரவைத் திரட்டுவதும், இவற்றுக்கு ஏற்பாடு செய்யும் பிரமுகர்களையே சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் மேயர்களாகவும் அமைச்சர்களாகவும் நியமிப்பதும், போலீசு, அரசு அதிகாரிகள், நீதிபதிகள் இலஞ்ச-ஊழலில் தாராளமாக மிதக்க அனுமதிப்பதும், இவர்களையெல்லாம் வைத்துத் தேர்தல் தில்லுகளில் தன்னை யாரும் வெல்ல முடியாதவாறு பிழைப்புவாதப் பொறுக்கி அரசியலை ஜெயலலிதா உச்சத்துக்குக் கொண்டுபோய்விட்டார்.


ஜெயா வழிபாடு
படம்-வினவு

பழைய சினிமாக்களில் எம்.ஜி.ஆர்., என்.டி.ஆருடன் அரைகுறை ஆடையுடன் தான் போட்ட கவர்ச்சி ஆட்டங்களைக் கூச்சநாச்சமின்றி இன்னமும் ஒளிபரப்பித் தனது ரசிகர்களுக்குக் கிளுகிளுப்பூட்டிவரும் புரட்சித் தலைவியை இளங்கோவனுடைய பேச்சு அவமானப்படுத்தி விட்டதாகக் கூறித் தமிழகமெங்கும் மேற்படிக் கூத்துகள் நடக்கின்றன. ஆனால், இந்த ஜெயலலிதா என்னவெல்லாம் பேசி இப்போதைய நிலைக்கு வந்தார் என்பதை மக்கள் மறந்துவிட்டார்கள் என்ற துணிச்சலில் இப்படி ஆட்டம் போடுகிறார்கள்.
எம்.ஜி.ஆர்., ஜெயாவின் அரசியல் தலைவர் என்பதற்கு மேல் என்ன உரிமையில், உறவில் அவரது பிண வண்டியில் ஏறித் தலைமாட்டில் உட்கார்ந்து அடாவடி செய்தார்!

அவரோடு சேர்த்து உடன்கட்டைப் பேச்சுப் பேசினார்! எம்.ஜி.ஆருக்கு பாலில் விஷம் கொடுத்துக் கொன்றதாக ஜானகி மீது பழிபோட்டார்;

எம்.ஜி.ஆரின் முன்னாள் நாயகி சரோஜாதேவியை மோர்க்காரி என்று வசைபாடினார்.

‘இராஜீவைக் கொன்ற குற்றவாளி’ கருணாநிதியுடன் தேர்தல் கூட்டுவைத்த சோனியாவைப் பத்தினியா என்று கேட்டு, அவரது இத்தாலி பூர்வீகத்தைக் கேலி செய்தார்.

சட்டமன்றத்தில் தன்னைத் தி.மு.கழகத்தினர் மானபங்கபடுத்தி விட்டதாகத் தலைவிரி கோலத்துடன் நாடகமாடினார் அந்தப் புனிதவதி,

தன் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் போடச் செய்தார் என்பதற்காக உயர் நீதிமன்ற வளாகத்துக்குத் தனது மகளிரணியை ஏவிவிட்டு, சுப்பிரமணியசுவாமி முன்பாக ஆடையைத் தூக்கிக் காட்டி, ஆபாசக் கூச்சல் போடச் செய்தார்;

சொத்துக் குவிப்பு வழக்குக்கு அனுமதியளித்தார் என்பதற்காக ஆளுநர் சென்னாரெட்டி தன்னை மானபங்கப்படுத்த முயன்றதாகப் பகிரங்கமாகப் புளுகினார்.

இப்படித் தன்னைத்தானே இழிவுபடுத்திக் கொள்ளும் மாதரசியை இளங்கோவன் அவமானகரமாகப் பேசிவிட்டார் என்று கொந்தளித்துப் போகிறார்கள், அவரது கூலிப்படையினர்.
பணம் வாங்குவதற்காகவே தம்மைக் கற்பழித்துவிட்டதாக போலீசு மீது புகார் கூறுகிறார்கள் என்று வெட்கமின்றி, மனச்சாட்சியின்றி தமிழ்ப் பெண்கள் மீது பழிபோட்டவர்தான், இந்த ஜெயலலிதா!

இதையெல்லாம் நினைவு கூர்ந்து சொல்லுங்கள்! எதையாவது செய்து, யாரையாவது அவதூறாகப் பேசி தன் மீது கவனத்தை ஈர்த்து அரசியல் ஆதாயம் அடைவது என்கிற ஜெயாவின்

அதே அதிரடிப் பொறுக்கி அரசியல் உத்தியைத்தானே இளங்கோவன் கையிலெடுத்துக் கொண்டுள்ளார்! இதற்காக நாமோ தமிழக மக்களோ ஏன் அக்கறைப்பட வேண்டும்!


தம்பி ..படித்து முடித்தவுடன்... தயாராக கையில் வைத்திருந்த தேநீரை கொடுத்து குடிக்க வைத்த அண்ணன். தம்பிகளை பார்த்துக்  சொன்னார்.

மையில நணச்சு பேப்பரில் அடிச்சா மறுத்து பேச ஆளில்லை...மாதிரி இல்லப்பா...இந்த புத்தகத்துல படிச்சது ...அம்புட்டும் உண்மையான  20,21 நூற்றாண்டு நடந்த வரலாறுப்பா... என்று சொல்லிவிட்டு... நகர்ந்தார்.....

கூட்டத்திலிருந்து  ஒரு தம்பி சொன்னார்..

டேய்.....இது வரலாறு இல்லடா.........குடிகெடுத்த  புனிதவதியின்  அசிங்கம்டா ........?ஃஎன்றார்.

செவ்வாய் 15 2015

நாட்டுக்காக பிள்ளைகளை பணயக்கைதியாக கொடுத்த திப்புவும் -தன் சுயநலத்துக்காக நாட்டை கூறு போடும் இன்றைய சாதி,மத வெறியர்களும்.

படம்-

வினவு



சில வருடங்களுக்கு முன் அரசு தொல்லைக் காட்சியில் “மாவீரர் திப்பு சுல்தான்” என்ற தொடர் ஒளிபரப்பின் போது இது ஒரு கற்பனை கதை என்று டைட்டில் காட்டப்பட்டது.

இப்படியாக .உண்மை தேச பக்தர்களின் வரலாற்றை இருட்டிப்பு செய்தவர்கள் ஏகாதிபத்திய கொடுங்கோண்மையை விட மிகக் கொடுங்கோலர்களாக
இருந்தவர்கள் சங்க பரிவாரங்கள்...

இன்று அந்த சங்க பரிவாரங்கள்  ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து குத்தாட்டம் போடுகின்றன..தொலைக்காட்சிகளில் காட்டப்படும்கட்டுக்கதைகளும் புராண மாய்மலங்களையும் மாபெரும் வரலாற்று  வீரகாவியம் என்று பெயர் சூட்டப்படுகின்றன.

குரங்கிலிருந்து மனிதனாக மாறியபின்  17.18, 19 நூற்றாண்டுகளில்  பத்துமாதம்    கருவிலிருந்து வெளியே வந்த மனிதனுக்கு இருந்த அறிவை விட 20,21ம் நூற்றாண்டு மனிதனுக்கு அறிவும் ஆற்றலும் அதிகமுண்டுஇ..

அந்த அறிவையும், ஆற்றலையும்... குரங்கின் நிலைக்கு இழுத்துச் செல்கின்றன் சங்பரிவாரங்கள்.... அவற்றில் ஒன்றுதான். ஒரு நடிகனை தேச பக்தன் என்று விளித்துரைத்து... ஒரு உண்மையான தேச பக்தன் வேடத்தில் நடிக்கக்கூடாது... நடிக்கமாட்டார். விளிம்புவது..

இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?.. என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர்.திப்பு.  தென்னந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு மிகப் பெரும் உந்து சக்தியாக திகழ்ந்தவர் திப்பு.

ஆங்கிலேயனின் காலை நாக்கி சொகுசாக வாழ்ந்து கொண்டு இருந்த இந்து  பேஜ்வா மன்னர்கள்  நிலங்களை பறித்தெடுத்து நிலமற்ற விவசாயிகளுக்கும்
தலித்துக்களுக்கும் பங்கிட்டு கொடுத்தவர் திப்பு

இந்த மண்ணில் முதன் முதலாக  சுதந்திரம்,சமத்துவம் , சகோதரத்துவம் என்ற சொற்களை உதிர்க்கத் செய்தவர்.திப்பு..

 மேலும் படிக்க..-திப்பு சுல்தான் – விடுதலைப் போரின் விடிவெள்ளி !


தேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல். நாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.



திப்புவை அவமதிக்கும் துரோகச் செயல்கள்.

கதையும் காரணமும்..

ஒன்று-  அன்புள்ள உறுப்பினர்களே! இன்று கூடவிருந்த நமது கூட்டம் எதிர்பாராத சில காரணங்களால்  தள்ளி வைக்கப்படுகிறது. இரண்டு- அன்பிற்கினிய உறுப்ப...