சனி 30 2011

“யாவரும் மனிதர் என்று தெரிந்துகொண்டால் நிலாவும் பொது என்று புரிந்துவிடும்”.

வானில் உலாவும் நிலா தங்கள் மதத்துக்குதான் சொந்தம் என்று
இஸ்லாம்,கிறிஸ்து, இந்து மதத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள்
இப்படி கூறினார்கள்

மூன்றாம்பிறையாய் காலையில் தெரிவதால்,அதை என
கூட்டத்தார் தொழுவதால் நிலா இஸ்லாமியருக்குத்தான்
என்றான் இஸ்லாமிய சிறுவன்

எங்கள் கன்னிமரியாள் நிலாவில் இருப்பதால் எங்களுக்கு
தான் சொந்தம் என்றான்கிறிஸ்தவ சிறுவன்

இல்லையிலலை,எங்கள் சிவனார் தலையில்தான் நிலா
இருப்பதால் எங்களுக்கே சொந்தம் என்றான் இந்துசிறுவன்

மூன்று சிறுவர்களுமே நிலாவை சொந்தம் கொண்டாடு
வதைக்கண்ட சுயமரியாதைச் சிறுவன் சொன்னான்.

உங்களுடைய அப்பன்மார்கள உளருவாயர்கள்.முதலில்
இஸ்லாமியன் என்றசொல்லை நீக்குங்கள.கிறிஸ்தவன்
என்ற பித்தத்தை தொலையுங்கள.இந்து என்ற சிந்தனை
வேண்டவே வேண்டாம்.“நம் யாவரும் மனிதர் தெரிந்து
கொண்டால்,நிலா பொது என்று புரிந்துவிடும்”.என்றான்.

( பாவேந்தரின் பிறந்தநாள் வாழ்த்தாக அவரின் கவிதை
தொகுப்பிலிருந்து)

4 கருத்துகள்:

  1. /நம் யாவரும் மனிதர் தெரிந்து
    கொண்டால்,நிலா பொது என்று புரிந்துவிடும்//

    நிலா என்ன நிலமும் நீரும் பொது என்பதைப் புரிந்தாலே போதும் சார். அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  2. தருமி அவர்களுக்கு படித்து விட்டு வாழ்த்தியமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. இக்பால் செல்வன் அவர்களுக்கு வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...