செவ்வாய் 24 2011

கொள்ளையோ கொள்ளை, எல்லையே இல்லை

2011 சூன் மாதம் கல்வி ஆண்டு. காசு உள்ளவனுக்கே
கல்வி என்று மீண்டும் நிருபணமாகிவிட்டது..
கல்வி நிலையங்கள லாபம் சாம்பாதிப்பதைவிட
கொள்ளை அடிப்பதில் முழு மூச்சாக இறங்கிவிட்டது.
கல்வி வள்ளல்கள் எல்லாம் காசு உள்ளவனுக்குத்தான்
கல்வி என்றுஅறிவித்துவிட்டார்கள். காசு இல்லாதவர்கள்
இனி படிக்க முடியாது.படிக்கத்தான் முடியவில்லை மாடு,
கன்று மேய்க்க செல்ல்லாம் எனறால்அதற்கும் வழியில்லை.
எருமை மாடு மேய்ப்பதற்கும் வழியில்லை
இருந்த கருவக்காடும், வயல்வெளிகளும் கட்டிங்களாகவும்,
பிளாட்ஆகவும் மாறிப்போச்சு, வேறுவழியில்லை. கல்வி
கற்பதைத்தவிரவேறுவழியில்லை.

காமராஜர் காலத்தில் ராஜாஜீ திருக்கரத்தால் மூட்ப்பட்ட
ஆராயிரம்கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டன. கூடுதலாக
பதினாழுயாயிரம்கல்விநிலையங்கள் தெடங்கப்பட்டன.
அன்று காசு இல்லாதவர்களும்,பிள்ளைதுர்க்கிகளும்
வீட்டுவேலை, எருமை மாடு மேய்க்கிற வேலை
களையெல்லாம் விட்டுட்டு படிக்க வரவேண்டும்.
என்பதற்க்காகமதியஉணவும் போடப்பட்டது.

ஆனால், இன்றைய நிலைமையைப் பாருங்கள்.
தனியார்மயம்,தாராளமயத்தின் புன்னியத்தால்
அரசாங்க கல்வி நிலையங்கள் மூடப்பட்டும்
ஒருசில பள்ளிகூடங்கள் முடமாக்கப்பட்டும்
ஓரங்கட்டப்பட்டுள்ளன.

முன்னால் இருந்த கருனாநிதி கட்சியும் சரி,
ஜாக்பாட்டில் வந்த ஜெயல்லிதா கட்சியும்சரி
கேட்காத இலவசங்களான டி.வி,ஸ்டவ் அடுப்பு
இலவச அரிசியின்னு வாரி வழங்கும் அரசுகள்.
இலவசமாக கல்வியைகொடுக்க மாட்டுகிறார்கள்.
தனியாரிடம் இருந்த டாஸ்மாக்கை மட்டும்
அரசுடமையாக்கி கல்லாக் கட்டும் அரசு கல்வியை
மட்டும் தனியார் முதலாளிகளுக்கு தாரைவார்க்கிறது.
விவசாயிகளின் விளைபொருளுக்கு கட்டுபடியாகும்
விலையை கொடுக்காத அரசு. தனியார் கல்வி
முதலாளிக்க்கு கல்விக்கட்டணம் கட்டுபடியாகவில்லை
நீதிபதி ரவிராஜபாண்டியன் தமையில் கமிட்டியமைத்து
கல்வி கட்டணத்தைஉயர்த்திக் கட்டச்சொல்கிறது.
அதே சமயம் நீதியரசர் கோவிந்தராஜன்கமிட்டி நிர்ணயித்த
கட்டணத்தை அமுல்படுத்தமாட்டுகிறது. இப்போது
சமச்சீர் கல்வியையும் ஒப்புக்கு சரியில்லையென்று
நிறுத்தி விட்டது.

ஆஸ்பத்திரியா? பள்ளிக்கூடமா? பேருந்தா? தனியார்தான்
பெஸ்ட்என்று அரசே தனியாரை ஊக்குவித்து மக்களின்
மனதிலும்வேரூண்டவிட்டது. இன்று பத்திரிக்கைகளும்
டிவி போன்ற ஊடகங்களும்தனியார்மயத்துக்கு வக்காலத்து
வாங்கி,நாய் வேஷம்போட்டுஇதுதான் நீதி என்று
ஊளையிட்டுவிட்டு, இப்போது மக்கள் மீதுபழியைப்
போடுகின்றன. செய்யிறதையெல்லாம் செய்துவிட்டு
கடைசியாக ஆண்டி மடத்துல இருக்கிறவன்தான் காரணம்
என்றுமக்களை குறை சொல்கின்றன.கல்விக் கட்டணம்
விவாத பொருளா இருப்பதற்கு அரசும் ஆளுகின்ற
கடசிகளுமே காரணம். நீதியரசர் கோவிந்தராஜன்
கமிட்டி நிர்ணயித்தகட்டணத்திற்கு எதிராக உச்சி(குடுமி)
நீதிமன்றம் வரை சென்று தோற்றுப்போன தனியார் பள்ளி
முதலைகள். இப்போது பள்ளியை திறக்கமாட்டோம்
காசு இல்லாதவர்கள் நகராட்சி,மாநகராட்சி பள்ளிக்கு
போகட்டும்,இவர்களுக்குஅரசு அஞ்சல்வழிக்கல்வி
தொடங்கட்டும். தமிழ்வழிக்கல்வி தரம் இல்லை
ஆங்கிலம்தான் அறிவை வளர்க்கும் என்று
தரமில்லாமல் பேசுகிறார்கள்.

தமிழ்நாடு நர்சரி,பிரைமரி,மெட்ரிக் மேல்நிலைப்
பள்ளிகளின் முதலாளிகளின்நிர்வாகிகளின் கூட்டு
அமைப்புச்சங்கத்தலைவர் கிறிஸ்துதாஸ் அரசுக்கு
உத்திரவு போடுகிறார். பேராசியர் சிட்டிபாபு கமிட்டி
அறிக்கையில் பள்ளிக்கட்டிடங்களுக்கான நில
அளவையை ரத்து செய்ய வேண்டும்தேசியளவில்
பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்துபள்ளிகளிலும்
சி.பி.எஸ்இ. பாடத்திட்டத்தை பொண்டுவரவேண்டும்.
நர்சரிபள்ளிகள் முப்பது ஆண்டுகாலம் நிலகுத்தகை
பதிவுசெய்யவேண்டும்என்ற நிபந்தனையை மூன்று
ஆண்டுகளாக் குறைக்கவேண்டும் என்றும் தனியார்
பள்ளி கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்யக்கூடாதாம்.
-இதுஎப்படி இருக்கு.! உச்சநீதி மன்றம் போயி
தோற்றுப்போயி திரும்பி வந்தகல்வி வள்ளலு,கல்வி
தந்தையின் பேச்சப் பாரு பேச்ச..அய்யா வள்ளல்லு
கோவிந்தராஜன் கமிட்டியின் கட்டணத்தை அமுல்
படுத்திங்கய்யா என்றால்கேவிந்தராஜன் கமிட்டியில்
குளறபடி ஏற்பட்டுவிட்டதாம்.அட கொள்ளக்
காரங்ங்களா!!! நீங்க சொல்லிக்கொடுக்கிற கல்வியே
குமஸதாவுக்கானஅடிமைக்கல்வி. இந்த அடிமைக்
கல்விக்கு இவ்வளவு பித்தலாட்டமா?
பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களே, கொள்ளக்கார
முதலாளிகமார்கள்எல்லாம் சங்கமா சேர்ந்து குத்தாட்டம்
போடும்போது.நீங்களெல்லாம்தனித்து நின்று வேடிக்கை
பார்த்து நின்றால் நம் பிள்ளைகள் உற்றார்உறவினர்
பிள்ளகளின் கல்வி அதோகதிதான்.எனவே, தனியார்
பள்ளிமுதலாளிகளின் கொள்ளையை தடுக்க, அடாவடி
திமிரை அடக்கஅரசை நடவடிக்கை எடுக்க வைக்க
வேண்டுமானால். தங்கள் பிள்ளைகளின் மாணவர்களின்
கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தில்சேருங்கள்.
குறுக்குவழி, சந்து,பொந்து வழி எந்த வழியும் கிடையாது
என்பதை உணருங்கள்.

“சங்கமாய் சேருங்கள். சங்கம் சங்கமாய் சேருங்கள்
சங்கம் இல்லையென்றால் சங்கடங்கள் தீராது
சங்கமாய் சேருங்கள்”.
நன்றி. மனித உரிமை பாதுகாப்பு மையம். தமிழ்நாடு.

2 கருத்துகள்:

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...