படம்- |
டேய்..மாப்ள, இன்னிக்கு பேப்பர் பாத்தீயா...???
“இல்லடா..மாப்ள.....என்னா விசயம் சொல்லுடா.....????
நம்ம நரகத்தின் ..மேயரின் கோபத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுடா...?
“ ......????....”
“பத்தாயிரம்...டா”
“என்னடா.....! நரக மேயரு மதிப்பு பத்தாயிரம்.....கொஞ்சம் விளக்கமா சொல்லேன்டா....”
சே..... நேத்து..அடிச்ச சரக்கு, இன்னும் தெளியலாக்கும், தெளிவா, விளக்கமா சொல்கிறேன் கேளு....
நம்ம நகரத்து மேயரு..நகர்வல உலா போயிருக்காரு... அவரு போகும் ரோட்டில இருந்த ரெண்டு வீட்டுக்காரர்கள் தங்கள் வீட்டுக்கு போர் போட்ட போது வெளியான தண்ணீரை ரோட்டில விட்டதால, தேங்கி இருந்திருக்கு..
அப்போ, அந்த ரோட்டில உலா போன மேயரு....இத பாத்து நான் வரும் ரோட்டில் துண்ணீர் தேங்கி நிற்பதா? என்று கோபம் கொண்டார். கோபம் அடங்காமல் தான் வரும் ரோட்டில் தண்ணீரை தேங்கவிட்டவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்குமாறு அந்தப் பகுதி உதவி கமிசனரிடம் உத்தரவு போட்டாரு..
நகர மேயரின் உத்தரவுக்கிணங்க உடனே.உதவி கமிசனரும், உதவி பொறியாளரும் அவ்விடத்திற்கு ஆஜராகினர். நகர மேயரின் கோபத்துக்கு ஆளான இரு வீட்டாருக்கும் தலா அய்ந்தாயிரம் வீதம் பத்தாயிரம் அபராதம் விதித்தனர்.-- என்று கூறிமுடித்த பின் திரும்பவும் அவன் சொன்னான்.
இந்த செய்தியை போட்ட பேப்பர்காரன் இன்னொரு பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் பீச்சி அடித்து வீணாய் வெளியேறுவதை படம் பிடித்து போட்டு நம்ம நரக.....சே.... நகர மேயரின் கடமை உணர்ச்சியை வெளிக்காட்டி இருக்காங்கேடா........
ஆமாடா....மாப்ள... மேயரின் கோபத்தின் மதிப்பே பத்தாயிரம்ன்னா.... அமைச்சரின் கோபத்துக்கு மதிப்பு எவ்வளவு......டா.......
அமைச்சரின் கோபத்தின் மதிப்பாடா..... கறிச்சோறு திண்ண வாங்கடான்னு
கூப்பிட்டுவிட்டு... விரட்டி அடிக்கிற மதிப்புடா..... அதையும் போட்டு இருக்கான் படிச்சுப்பாருடா......
அப்படியாடா..மாப்ள....நீ சொன்ன பிறவும் நான் படிக்கலைன்னா... இம்புட்டு படிச்சதுக்கு அர்த்தமே இல்லாம போயிடும்..டா மாப்ள.....
உடனே, பக்கத்தில் கிரிகெட் விளையாடி கொண்டு இருந்த ஒருவனை கூப்பிட்டு. பக்கத்து கடையில போயி இந்த பேப்பரை வாங்கிவிட்டு வர பணித்தான்
நீங்க கறிச்சோறு சாப்பிடலியா :)
பதிலளிநீக்குவிருந்துகளில் அசினோ மேட்டா உப்பு கலப்பதால் ...நான் விருந்துகளில் சாப்பிடுவதில்லை நண்பரே....
நீக்குநல்ல வசூல்...?
பதிலளிநீக்குஇன்னும் என்னென்ன வசூல் இருக்கோ....????
நீக்குநகர மேயரின் கோபத்துக்கு
பதிலளிநீக்குஆளுக்கு ஐயாயிரம்
அரசுக்கு வருவாயா?
அறவிட்டவருக்குக் கையூட்டா?
தெரியாதவர்கள் அரசுக்கு வருவாய் என்று எண்ணிக் கொள்க! தெரிந்தவர்கள் அறவிட்டவருக்கு கையூட்டுஎன்று புரிந்து கொள்க!!
நீக்குவணக்கம் வலிப்போக்கரே,
பதிலளிநீக்குஅப்ப மு அமைச்சரின் கோபம்?
நன்றி.
மு அமைச்சரின் கோபம் இன்னும் கொஞ்சநாட்களில் அமைச்சரவை மாற்றம் என்பதில் தெரிந்து கொள்ளலாம்..
நீக்குஹஹாஹ்ஹஹ் வசூல் ராஜாக்கள் இருக்கும் வரை இதெற்கெல்லாம் குறைச்சல் இல்லை...
பதிலளிநீக்குமுடிவு செம....இன்னும் டாஸ்மாக்கு தெளியல போல....பேப்பரு வாங்க அனுப்பறான் அதான் கேட்டாச்சுல...
மாப்ள.காரன் .. சொன்னதுல..நம்பிக்கை இல்லாமலும் இருக்கலாம்ல......
நீக்கு