திங்கள் 21 2016

ஜோதிடத்தை எதிர்க்கும் இந்திய அரசமைப்பு சட்டம்...

நண்பரின் குடும்பத்தில பணக் கஷ்டம்.... அந்தக் கஷ்டம் மோடியால் ஏற்பட்டதென்று நண்பரின் குடும்பத்திற்கு தெரிந்திருந்தும்..  


நாட்டில் உள்ள பெரும்பாலானவர்கள் வேலைக்கும் கல்விக்கும், தொழிலுக்கும் திருமணத்திற்கும் ஜோதிடத்தை நம்பும்போது, நாம் . இந்தக் கஷ்டத்திற்க்கான காரணத்தை அறிந்து களைவதற்க்காகவும்  புலம்பிய மனைவிக்காகவும்  மனைவியை அழைத்துக் கொண்டு  தன் பிள்ளையின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு பால குருசி ஜோதிடரை காணச் சென்றார்.

.  அந்தச் ஜோதிடர்  இவர்களைின் மனநிலை அறிந்து அதற்கேற்ப ஆறுதலும் மனநிறைவையும் தன்னுடைய சொல் சாமர்த்தியத்தால் இவர்களுக்கு தற்காலிக மகிழ்ச்சியை கொடுத்து. அதற்கான பரிகாரம் செய்யச் சொல்லி இவர்களிடம் அவருக்கான தொகையைப் பெற்றுக் கொண்டார்.

அந்த நண்பரை சந்திக்க சென்ற போது... அவர் வீட்டில் சில பரிகாரங்களை செய்து கொண்டு இருந்ததைக் கண்டு. விசாரித்த போது  மேற்கண்ட விபரத்தை சொன்னார்....அவரிடம் நான் வந்த விபரத்தை சொல்லிவிட்டு திரும்பி விட்டேன்.

சில நாட்கள் கழித்து என்னை பார்க்க வந்தபோது... அவரிடம் சொன்னேன்.

அய்யா...தாங்கள் என்னைவிட  கல்லூரி படிப்பு படித்தவர். ஜோதிடம் ஒரு மூட நம்பிக்கை என்பது தெரியாதா....ஒரு தகவலைச் சொல்கிறேன் கேளுங்கள் . 

மக்களிடம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்பு சட்த்தின் பிரிவு 51A(h) கூறுகிறது. அரசியல் சாசனத்திலேயே, அறிவியல் மனப்பான்மை வளர்க்கச் சொல்லும் ஒரே நாடு இந்தியாதான்..

ஆனால் நாட்டை ஆளவந்தவர்களோ..இந்த விஞ்ஞான மனப்பான்மைக்கு விரோதமாக செயல்படுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அரசு உறுப்புகளோ...சடங்கு, சம்பிரதாயம், நாள் , நேரம், நட்சத்திரம் பார்த்து அரசு வேலைகளை செய்யம்போது... உங்களை மாதிரியான படித்த ஆட்களால் எப்படி விஞ்ஞானம் வளரும்...

இந்தியாவின் முதல் பிரதமர் நேரு..ஜோதிடம், ஜாதகம் கணிப்பவர்கள் மிகவும் நாட்டுக்கே ஆபத்தானவர்கள் என்று பேசி இருக்கிறார். அப்படிபட்ட நாட்டுக்கே ஆபத்தானவர்கள்  உங்க வீட்டுக்கு  மட்டும் எப்படி ஆபத்தானவர்களாக..இல்லமால் இருப்பார்கள்...

இன்னும் ஏன், ஜோதிடம் ஒரு மூடநம்பிக்கை, என்று பார்ப்பன ராஜகொபால யச்சாரியும், “ ஜோதிடந்தனை இகழ்” என்று பார்ப்பன பாரதியும் பாடியும் எழுதியுள்ளனர்....பார்ப்பன பண்டாரங்களே ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு பொய்யும் புரட்டும் பித்தலாட்டமும் நிறைந்ததுதான் ஜோதிடமும் ஜாதகமும்..


500 ரூபா 1000ரூபா செல்லாதுன்னு அறிவித்த மோடியின் சதியால்தான்... இந்தக் கஷ்டம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல தெரிந்திருப்பது தங்களுக்கு தெரியாமல் போன தேன் .. என்று கேட்டபோது...

நண்பர் எதிர்த்து எதுவும்  கேள்விக்கனை கொடுக்காமல்  மௌனமாக இருந்தார்.

பிறிதொரு நாளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போது என் மீது அம்பு எய்துவார்...

4 கருத்துகள்:

  1. இதன் பின்பும் உங்கள் மீது பாய்வாரோ... ?

    பதிலளிநீக்கு
  2. பிறிதொரு நாளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போது என் மீது அம்பு எய்துவார்...

    சிரிக்க வைப்பவரை கோமாளி என்றும்
    சிந்திக்கத் தூண்டுபவரை சதிகாரன் என்றும்
    ஏமாற்றுபவனை வள்ளல் என்றும் போற்றும் உலகம் ஐயா இது

    பதிலளிநீக்கு
  3. அம்பு எய்யும்அளவுக்கு அவருக்கு துணிச்சல் இருந்தால் ஏன் ஜோதிடம் பார்க்கப் போகிறார் :)

    பதிலளிநீக்கு
  4. 500ரூபா 1000ரூபா செல்லாதுன்னு அறிவித்த பின், கருப்புப் பணக்காரர் எவரும் சிக்கவில்லையே!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...