செவ்வாய் 25 2017

பழைய கதையில் நடப்பு அரசியல்.......

நண்பர் சொன்னார் இந்தக் கதையில் அரசியல் இல்லிங்கோ என்று..பழைய கதையில் நடப்பு அரசியல்என்கிறேன் நான்.. படித்து பாருங்கள்..



ஒரு ஊரில் இரண்டு பூனைகள் இருந்தன. திருடி தின்பதில் இரண்டு பூனைகளும் கில்லாடிகள்.

ஒரு நாள் இரண்டு பூனைகளும் சேர்ந்து தன் வீட்டின் எஜமானியை கொன்றுவிட்டு, அவர் கஷ்டபட்டு செய்த அப்பத்தை திருடின. அந்த அப்பத்தைச் சாப்பிடுவதற்காக இரண்டாகப் பிரிக்கும் போது ஒரு பூனை, அப்பம் சரி சமமாகப் பிரிக்கப் பட வேண்டும் என்று மற்றப் பூனையுடன் சண்டையிட ஆரம்பித்தது. இன்னொரு பூனையும் எதிர்த்து சண்டையிட்டது. எஜமானியை கொன்றதிலிருந்து அனைத்தையும் பார்த்துகொண்டிருந்த ஒரு குரங்கு இரு பூனைகளுக்கும் இடையே மத்திஸ்தம் செய்வதாக சொன்னது.பூனைகளும் சம்மதித்தன. குரங்கு தனக்கே நன்மை செய்யும் என்று இரு பூனைகளும் நினைத்தன.

குரங்கு  அப்பத்தை இரண்டாக வெட்டியது.இதுவே அதற்கு முதல்  வெற்றி.
தராசின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு துண்டை வைத்து நிறுத்துப் பார்த்தது. தராசின் ஒரு தட்டு கீழே தாழ்ந்தது. அப்பொழுது குரங்கு, அந்தத் தட்டில் இருந்த அப்பத் துண்டை எடுத்து ஒரு கடி கடித்துத் தான் சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது.

இதற்கு அந்த பூனை எதர்ப்பு தெரிவிக்க,குரங்கு அதை முறைத்து பயங்காட்டியது. இப்பொழுது, மற்றத் தட்டுக் கீழே தாழ்ந்தது. அந்தத் தட்டிலிருந்த அப்பத்தையும் குரங்கு எடுத்துக் கடித்து விட்டுத் தட்டில் போட்டது. இப்படியே தட்டுகள் மாறி மாறித் தாழ்ந்தன. குரங்கும் மாறி மாறி அப்பத் துண்டுகளைக் கடித்துக் கடித்துச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தது.முகத்தில் மட்டும் ஒரு கொடுர லுக்கை குரங்கு மெய்டெய்ன் பண்ணியது.  அப்பம் குறைவதை பார்த்த பூனைகள், தங்கள் தவறை உணர்ந்து பங்கு பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக் கொள்கிறோம என்று மீதமுள்ள அப்பத்தைத் தரும் படி கேட்க எண்ணியும்,உயிர் பயத்தால் கேட்காமல் இருந்துவிட்டன.
இதை எதிர்பார்த்த குரங்கு அப்பம் முழுவதையும் தின்று ஏப்பம் விட்டது.

பூனைகள் தமிழ் நாட்டை சார்ந்தவை.பலே குரங்கு டில்லி யில் இருந்து வந்தது.

5 கருத்துகள்:

  1. கதை புரிந்நு விட்டது நண்பரே ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
  2. டெல்லிக் குரங்கு பற்றி இவர்களுக்கு தெரியாது போல !தோலிருக்க சுளையை முழுங்கும் குரங்காச்சே :)

    பதிலளிநீக்கு
  3. //பூனைகள் தமிழ் நாட்டை சார்ந்தவை.பலே குரங்கு டில்லி யில் இருந்து வந்தது.//

    அது எல்லாம் சரி. தமிழ் மக்கள் அபிமானத்தை பெற்ற ஒபிஎஸ் தமிழ் நாட்டை
    ஆளக்கூடிய ஒரு தலைவனை பூனை என்று வலிப்போக்கர் சொன்னதை கண்டிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. மிக அருமையாகச் சொன்னீர்கள்! ஆனால், குரங்கு இப்பொழுதுதான் அப்பத்தைத் தராசுத் தட்டிலேயே இட்டிருக்கிறது. பூனைகள் விழித்துக் கொள்ளாவிட்டாலும் மக்களாவது, இப்பொழுதாவது விழித்துக் கொண்டால் அப்பத்தைக் காப்பாற்றலாம். நேரம் இன்னும் கடந்து விடவில்லை.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...