புதன் 24 2017

பலருக்கும் சிலருக்கும்...........

பலருக்கு சிலரை
பிடிப்பது இல்லை
சிலருக்கு பலரை
பிடிப்பது இல்லை
பிடிப்பதற்கும் பிடிக்காமல்
போவதற்கும் காரணம்
பல இருந்தாலும்
ஏன்? என்று
கேட்டால் பலருக்கு
காரணம் சொல்லத்
தெரிவதில்லை சிலருக்கு
காரணம் தெரிந்தாலும்
வெளியே சொல்வதில்லை
அது போல்தான்
என் தெருவில்
உள்ள சிலருக்கு
என்னை பிடிப்பது
இல்லை என்னைக்
கண்டவுடன் இரு
கை விரல்களையும்
மடக்கி நெருக்கி
சொடக்கு போடுவார்கள்
அதற்கு அர்த்தம்
நாசமா போக
என்பது.அவர்களுக்கு
என்னை பிடிக்காத
காரணம் எனக்கு
தெரிவது இல்லை
அவர்களுக்கு தெரிந்து
இருந்தாலும் நான்
தெரிந்து கொள்ள
விரும்பியதும் இல்லை

தட்ஸ்  ஆல்...........

6 கருத்துகள்:

  1. நம்மை மற்றவர்களுக்கு பிடித்து இருக்கிறதோ இல்லையோ ஆனால் நம்மால் மற்றவர்களுக்கு கெடுதல் இல்லாமல் வாழ்ந்து விட்டு போவோம்

    பதிலளிநீக்கு
  2. killarjiயின் போன பதிவில் போட்ட கமெண்ட்தான் இதுக்கும் ...சாபத்தால் சாகப் போவதுமில்லை ,ஆசீர்வாதத்தால் ஆகப் போவதுமில்லை :)

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் பிடித்தவராய் இருப்பதென்பது இயலாத காரியம் அல்லவா நண்பரே

    பதிலளிநீக்கு
  4. எனக்கு பதிவு பிடிச்சு போச்சு நண்பரே

    பதிலளிநீக்கு
  5. என் வழி தனி வழியென
    நாம் முன்னேறுவோம்!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...