திங்கள் 10 2017

நிணைவுக்கு வராதவர்கள்...

“என்ன கணேசா  நல்லா இருக்கியா...”

“ நல்லா இருக்கேன் சார்...”

“தொழிலு எப்படி போகுது..”

“ மோசமில்லாம போகுது சார்..”

“உன் அக்காவும் மச்சானும் எங்க இருக்காங்க  ”...?

“ ஊருல... இருக்காங்க  சார்..”

“ வயலு எதுவும் இருக்கா...?”

“ அதெல்லாம் ஒன்னுமில்லா சார், நூறு நாள் வேலைக்கு போறாங்க சார்,..”

” அய்யணன் அம்பலம்  உன் வீட்டு மேல கேசு போட்டானே  ..? முடிஞ்சிருச்சா”

“ மூனு பேரா இருந்த கேசு...இப்ப  முப்பத்திரண்டு பேரோட சேர்த்து இருபத்தி மூன்றாவாது வருடத்த கடந்து கொண்டு இருக்கு சார்......”

“இன்னும் முடியலையா.....”

“வழக்கு போட்டவன் செத்து, வழக்கு நடத்திய வக்கீலும் செத்து  வழக்கு போட்டவனின் மூத்த வாரிசும் செத்து, என் அம்மாவும் போயி வழக்கு மட்டும்  இன்னும் முடியாம ஆடி அசந்து போய்கிட்டு இருக்கு சார்...,”

“உன் சித்தப்பன்.... தெருக்காரங்கே இன்னும் உன்னோட சண்டை போடூறாங்களா....”

“ அவிங்களக்கு என்ன விட்டா வேறு ஆள் கிடைக்கல..சார், வேற ஆளுன்னா அவிங்க டங்கு வாறு அந்து போயிரும்ல சார்.....”

” ஆமா..உன் மருமகன் கல்யாணத்துக்கு..,... எனக்கு பத்திரிக்க கொடுக்கல..”

“நீங்க வருவீங்களோ..? வரமாட்டீங்களோ..ன்னு நிணச்சு கொடுக்கல சார்,”

“ அதெப்படி  நீயா... முடிவெடுக்கலாம்... வருவது வராமல் இருப்பது நாங்க முடிவ எடுப்பது... நீய்ய்... முறைப்படி பத்திரிக்கை கொடுக்கனுமில்ல...”

“ சாரி...சார்.. ”

அருகில் விலை உயர்ந்த கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து வயதான பெண் மணி.. ”என்ன கணேசா....நல்லா இருக்கியா...”

“ நல்லா இருக்கேன்ம்மா.....”

“ கணேசா....”

” சார்....”

“ இவன் யாரு தெரியுமில்ல...” என் மகன்   ”

” வணக்கம்    சார்,

” டேய்  கணேசன  தெரியுமில்ல.....”  “நல்லம்மா மகன்..  கல்யாணமே முடிக்காம அக்கா மக.மகன்கள வளத்துகிட்டு இருக்கான்..”

“ தெரியுமிப்பா.....”

”நாடே மோசமா இருக்கு... அதிலேயும் உன் ஏரியா சனங்க ரெம்பவும் மோசமானவங்க பாத்து சூதான இருப்பா...” அப்பவே அந்த ஏரியாவ விட்டு வந்திருக்கனும்...”

”அப்பவே.. மேற்கு பக்க வயக்காடு செண்டு முன்னூறு ரூவாய்க்கு போய்கிட்டு இருந்திச்சு சார்.? அன்னிக்கு  குடிக்க கூட கஞ்சி கிடைக்காம இருந்தோம் ..எப்படி சார்.. அதவிட்டு வர்ரது..”

“ ஆமாமா அன்னிக்கு உங்க நிலம அப்படித்தான் இருந்திச்சு ...”அப்ப... கணேசா  நாங்க...வரட்டுமா......”
....
“நல்லது சார்,.....”

“கணேசா வரம்ப்பா...”

“நல்லதும்மா...”

விடை கொடுத்து அவர்கள் காரில் சென்ற பின் யோசித்து யோசித்து பார்த்தார்.
நம்மல பத்தி அக்கு வேறு ஆணி வேறா தெரிஞ்சு வச்சு இருக்கிற... இவுங்க யாருன்னு....அவர்கள் யாருன்னு அவர் நிணைவுக்கு வரவே....இல்லை...இந்த யோசனையில் தன் வீட்டுக்கு போகும் திசையையும் சிறிது நேரம் மறந்து திண்டாடி விட்டார் கணேசன்.....


4 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...