திங்கள் 24 2017

ஒரு சாமானியன்...சொன்னது...


நல்லாக் கேட்டுக்குங்க,*   ஓயாம..கேட்கக்கூடாது....

சொல்லுங்க.....!!


முதல்ல ஆதார் கார்டையும் வோட்டர் ஐடி கார்டையும் தாசில்தார் ஆஃபிஸ்ல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!



*அப்புறம்?*



ஒட்டர் ஐடி கார்டையும் ரேஷன் கார்டையும் சிவில் சப்ளை ஆஃபீசுல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!



*சரி, அப்புறம்?*



ரேஷன் கார்டையும் பான் கார்டையும் இன்கம் டாக்ஸ் ஆஃபீஸ்ல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!



*ஓ அப்புறம்?*



ஆதார் கார்டையும் பாஸ்புக்கையும் பேங்குல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!



*அதுவும் சரிதான், அப்புறம்?*



பாங்க் பாஸ்புக்கையும் கேஸ் புக்கையும் கேஸ் ஆஃபீஸுல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!



*ம்ம்ம்ம்ம்ம், அப்ப்ப்புறம்?*



மேப் இன் கார்டையும் பான் கார்டையும் ஆதார் கார்டையும் ஸ்டாக் புரோக்கர்ட்ட குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!....



*ஓஓஓஓஓ அப்புறம்?*



மேப் இன் கார்டு, பான் கார்டு, கிரிடிட் கார்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வோட்டர் ஐடி கார்டு, பேங்க் பாஸ் புக்கு, கேஸ் புக்கு எல்லாத்தையும் பாஸ்ப்போர்ட் ஆஃபீஸுக்கு எடுத்துட்டு போயி லிங்க் பண்ணிக்குங்க!



*ஐயையோ அப்புறம்?*



இதெல்லாம் லிங்க் பண்ணியாச்சுண்ணு கலெக்டர்கிட்ட லெட்டர் வாங்கிட்டு வந்து மாநகராட்சி ஆஃபீஸுல குடுத்தா அவங்க ஒரு கார்டு இஷ்யு பண்ணுவாங்க!



*ஐயையோ இன்னொரு கார்டா, அப்புறம்?*



அந்த கார்டை எடுத்துகிட்டு பத்துக் கிலோமீட்டர் தள்ளி இருக்கிற *பாடிகார்ட் முனீஸ்வரன் கோவில்ல டெய்லி காமிச்சா..அங்க ஒரு உண்ட கட்டி தருவானுங்க,* அதை வாங்கி உங்க குடும்பம் முழுவதும் பங்கு போட்டு சாப்பிட்டுட்டு *சந்தோஷமா* வாழ்க்கையை அனுபவிங்க. ...... சரியா....??


ரெம்ப நன்றிங்க..!!!

இதுக்கு எதுக்குங்க  எனக்கு நன்றி! சொல்லிகிட்டு...ஒரு உண்ட கட்டிக்காக இம்புட்டும் செய்யச் சொல்றானே...அவனுக்குதாங்க  நீங்க  நன்றி! சொல்லனும்..





                  

4 கருத்துகள்:

  1. உண்டகட்டி வாங்குவதற்கு இவ்வளவு கார்டுகளா ?
    ஓ..... டிஜிடல் இந்தியா.

    பதிலளிநீக்கு
  2. இவனுங்க ஜெயிலுக்கு போனாலும் ,எந்த வித கண்காணிப்பும் இல்லாமல் சுதந்திரமா இருப்பாங்க !நேர்மையான எல்லோரையும் கண்காணிப்பது எந்த வித நியாயம் :)

    பதிலளிநீக்கு
  3. இப்பொழுது அதை நோக்கித்தானே
    நகன்று கொண்டிருக்கிறோம்,

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...