என்னா அண்ணே......இன்னிக்கு நீங்க ஆத்துப்பக்கம்
போகலீயா என்று கேட்டவாறு வந்தான் தம்பி முறை உள்ளவன்.
ஆத்துல தண்ணியே...இல்லையடா.... வெட்டியா அங்க போயி என்ன? என்று கேட்ட..நான் எதுக்குடா ஆத்துப்பக்கம் போலயான்னு கேட்ட என்று திருப்பி கேட்டபோது... சொன்னான்..
உங்க அம்மா இறந்து ரெண்டு வருசம் ஆச்சுல... அதனால ஆத்துப் பக்கம் போயி திதி கொடுக்கலையான்னு கேட்டேண்ணே என்றான்.. கம்யூனிஸ்ட்
கட்சி செயலரு இருக்காருல...அவருகூட திதி கொடுக்க ஆத்துப்பக்கம் போயிருக்காங்கா அதான் நீங்க போகலையான்னு கேட்டண்ணே
கம்யூனிசம் நாத்திகம் பேசிகிட்டு திதி கொடுக்கிற அந்த இழிவையெல்லாம் நான் செய்வேனாடா..என்ன பத்தி நீ புரிஞ்சது இதுதானாட....அடப்பாவிப்பயலே...
இல்லண்ணே...
என்ன இல்லண்ணே...காவி வேட்டி கட்டி இருக்கிறவன் எல்லாம் ஆர் எஸ்எஸ்.காரன் என்ற மாதிரி என்னையும் அந்த நாதாரி கம்யூனிஸ்டுன்னு சொல்லிக் கொள்கிற அவனோட என்ன சேத்திட்டியேடா....
இவிங்க சொல்கிற திதி திதி மந்திரம் என்னான்னு தெரியுமாட ஒனக்கு
ஓரளவு தெரியும்ண்ணே... இருந்தாலும் அது என்னான்னு நீங்க சொல்லுங்கண்ணே....
திதி அல்லது திதி மந்திரம் என்று அவன் சொன்னது. . நமது தாய் தந்தைமார்களை படு கேவலப்படுத்தக்கூடியதுடா.....
அந்த மந்திரம் உன் வாயிலும் என்வாயிலும் நுழையக்கூட முடியாது..அதத்தான் அந்தப் புரொகிதனும் சொல்லுவான் திதி கொடுப்பவனையும் சொல்லச் சொல்வான்.
அந்த திதி மந்திரம் இதுதான்..இந்தா நீயே படிச்சுப்பாரு
என்மே மாதா ப்ரலுலோபசாதி
அன்னவ“ வரதா தன்மே ரேதஹா
பிதா வருந்த்தாம் ஆபுரணயஹா அவபத்யநாம-----அண்ணே படிச்சிட்டேண்ணே..இதன் அர்த்தம் சொல்லுங்னண்ணே...
அர்த்தம்மா.... உனக்கு புரியலையா...
புரிஞ்சா..ஏணே கேட்குறேன்...
அதாவது..நான் யாருக்கு பிறந்தேன். அது என் அம்மாவுக்குத்தான் தெரியும். என் அப்பா யாரென்று மற்றவர்கள் சொல்வதால் நம்ப வெண்டியுள்ளது.அப்படிபட்ட என் அம்மாவுக்கு என் அஞ்சலியை சேர்ப்பீர் என்று அர்த்தம்...
கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கண்ணே..
விளக்கமாகவா...உங்க அம்மா சந்தேகத்துக்கு உரியவள்....
என்னண்ணே எங்கம்மாவ சொல்றீங்க..........
சும்மாடா.....ஒரு பேச்சுக்குடா.....
போ...ண்ணே...பேச்சுக்கூட எங்கம்மாவ சொல்லாதிங்கண்ணே....
சரிடா...... எங்கம்மடா........
என் பெரியம்மாவையும் கூட சொல்லதிங்கண்ணே.....
சரிடா........சரிடா.......கோவிக்காதே...
வேறு மாதிரியா சொல்றேன்டா......“தன் தாயானவள் சந்தேகத்துக்கு உரியவள். தன் கணவனக்கு உண்மையாக நடக்காதவள். மாற்றானிடம்உடல் தொடர்பு கொண்டவள் என்ற அடிப்படையில் மந்திரம் இருக்துடா...... சும்மா சொல்வதற்கே நம்ம மனசு சங்கடப்படுதே....இதத்தாண்டா திதி கொடுக்கும்போது சொல்லச் சொல்றாங்கே... இப்ப என்னய புரிஞ்சுகிட்டியா..
நல்லா புரிஞ்கிட்டேண்ணே....
அந்த நாதாரி வட்டச் செயலாரு கிட்ட கேளு என்ன தொலுரு என்ன மந்திரம் சொன்னிங்கன்னு.... அவன்உள்ளத சொல்றனான்னு பாப்போம்.....
( ஆதாரம்... அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாசாரியார் எழுதிய “இந்து மதம் எங்கே போகிறது என்ற நூலிருந்து பாகம்-1 பக்கம் 157.. நக்கீரன் வெளியீடு)
ஆத்தாடி......
பதிலளிநீக்கு(அம்மாவிற்குத்தான் தெரியும்.) உண்மைதானே. அவரவர்களின் மனதை பொறுத்த விஷயம் வலிபோக்க வந்தவரே தெரியாமல் வலியை தராதீர்.ஸ்ரீநாத்.
பதிலளிநீக்குதிதி இழிவுதான்
பதிலளிநீக்குஅருமை...
பதிலளிநீக்கு//நான் யாருக்கு பிறந்தேன். அது என் அம்மாவுக்குத்தான் தெரியும். என் அப்பா யாரென்று மற்றவர்கள் சொல்வதால் நம்ப வெண்டியுள்ளது.அப்படிபட்ட என் அம்மாவுக்கு என் அஞ்சலியை சேர்ப்பீர் என்று அர்த்தம்...//
பதிலளிநீக்குஇப்போது எல்லாம் தமிழகத்தில் மூன்று கணவர்கள் கொண்ட தமிழிச்சிகள் சிலரும் உள்ளனர். அவர்கள் நலன்களை கவனத்தில் கொண்டு தொலைநோக்க பார்வையோடு அப்படி எழுதபட்டிருக்கலாம்.
தனது அப்பா யாரென்று உறுதியாக தெரிந்தவர்கள் திதி கொடுக்கலாமா?
பகுத்தறிவானது என்றால் இறந்த தனது அம்மாவுக்கு திதி கொடுப்பது தேதையானது தானா? திதி எதற்காக கொடுக்க வேண்டும்?அதனால் இறந்த தனது அம்மாவுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்? என்பதே.
ஒரு வேளை அவர் பூணூல் கம்யூனிஸ்டா :)
பதிலளிநீக்கு