வெள்ளி, ஆகஸ்ட் 11, 2017

பாரத் மாதாகி ஜே!!! என்றால் ...............

அது பாரத பண்பாடும் கலாச்சாரமு் கொண்டது.அந்தப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும்  பற்றி படித்து விடுங்கள்...!!!

ஒரு காதல் ஜோடி ஒன்றாக வருகிறது, அப்போது அவர்களை ஒருக் கூட்டம் வழி மறிக்கிறது.. பின்பு நீங்கள் என்ன ஜாதி என்று கேட்கிறார்கள்.. அதற்கு அந்த காதலர்கள் தங்கள் ஜாதியினை சொல்கிறார்கள் .

உடனே அந்தக் கும்பல் அந்த காதலர்களின் உடைகளை முழுமையாக களைகிறார்கள்.. காலணிகளையும் கழட்டச் சொல்கிறார்கள்.. அவர்கள் இருவரும் முழு நிர்வாணம் ஆகிறார்கள்.. சுட்டெரித்து கொளுத்தும் வெயில்!!!

பிறகு நிர்வாணமான இருவரையும் அந்தக் கும்பல் கம்பு மற்றும் தடியால் பலமாக தாக்குகிறார்கள்.. கூட்டத்தில் சிலர் தாரை, தப்பட்டை அடித்து உற்சாகம் அளிக்கிறார்கள்,, கோஷம் எழுப்புகிறார்கள்..

பிறகு,

காதலனை அந்த முழு நிர்வாணப் பெண்ணை துக்கி தோளில் வைத்து நடக்கச் சொல்கிறார்கள், அவனும் நடக்கிறான், ஒரு கும்பலுக்கு நடுவே தன் முழு நிர்வாண காதலியை சுமந்து தானும் நிர்வாணமாய் கொளுத்தும் வெயிலில் நடக்கும் அவனை அந்த கும்பல் கம்புகளால் கோஷம் எழுப்பியபடி தாக்குகிறார்கள்..

அவள் அவமானம் மற்றும் வலியால் கதறுகிறாள்.. சிறிது தூரம் சென்ற பிறகு அந்த பெண்ணிடம் அவனை சுமக்க சொல்கிறார்கள்.. அவளும் தன்னுடைய முழு நிர்வாண காதலனை தனது தோளில் சுமந்து நடக்க ஆரம்பிக்கிறாள்.. அப்போது அந்தக் கும்பல் அவளுடைய முழு நிர்வாண உடலில் தாக்குகிறார்கள்..

பாவம் அவள் பெண் என்ன செய்வாள்!!!  சிறிது தூரம் தூக்கி சென்று பின்பு சுருண்டு விழுந்துவிட்டாள்.. கீழே விழுந்த அவர்களை அந்த கும்பல் மீண்டும் கொடூரமாக தாக்குகிறது.. தாரை, தப்பட்டை அடிக்கிறார்கள், கோஷம் எழுப்பி ஆனந்தம் கொள்கிறார்கள்..

இந்த முழு சம்பவத்தையும் அதே கூட்டத்தில் இருந்த சிலர் சிரித்துக் கொண்டே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் போட்டு விட்டனர்!!!
தன் காதலியை சுமந்த அவனை அவனுடைய ஆணுறுப்பில் கம்பினை வைத்து தாக்கினார்கள்,, அவளையும் விடவில்லை, அவளது பெண்ணுறுப்பிலும் தாக்கினார்கள்..

வீடியோவை முழுவதும் பார்த்தேன். கண்ணீருடன் கலந்த அளவுக்கதிகமான கோபம்.. வீடியோவையே பதிவிடலாம் என்றே நினைத்தேன்.. ஆனால் ஏனோ மனம் ஏற்கவில்லை, நமது வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்களே என்று!!!

அவளுடைய தற்போதைட மன நிலை எப்படி இருக்கும், உயிரோடு இருக்கிறாளா அல்லது அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துக் கொண்டாளா என்று தெரியவில்லை..

காரணம் அப்படியொரு கொடுமையான சம்பவம் அது..

நிச்சயம் இப்படியொரு மனசாட்சியில்லா கொடூரத்தை நிகழ்த்திய அக்கும்பல் மனித ஜென்மங்களாக இருக்க முடியுமா என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்..

சம்பவம் நடந்த இடம்:- 

BharatiyaJanataParty (BJP) கட்சியின் MYogiAdityanath ஆளும் உபி யில்...
அவர்கள் தாக்கபட்ட காரணம்:- தலித்..
அந்த கும்பல் போட்ட கோஷம்:- பாரத் மாதாகி ஜே!!!

பாரத பண்பாடு & கலாச்சாரம் என்ற மயிறு இதுதான்.....

6 கருத்துகள்:

 1. நானும் பார்த்தேன் நண்பரே வேதனையாக இருந்தது என்ன சொல்வது நமக்கும் தங்கை உண்டு என்ற எண்ணமே இவர்களுக்கு கிடையாது.

  பதிலளிநீக்கு
 2. பாரத மாதா கூட இவர்களை மன்னிக்க மாட்டாள் :)

  பதிலளிநீக்கு
 3. எந்த சமூகத்தில் எந்த நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனபது தொடர் கேள்விக்குறியாகவே,,,,,/

  பதிலளிநீக்கு
 4. கொடூரமான காட்டுமிராண்டிகள் கும்பலின் செயல்.
  //ஒரு காதல் ஜோடி ஒன்றாக வருகிறது, அப்போது அவர்களை ஒருக் கூட்டம் வழி மறிக்கிறது.. பின்பு நீங்கள் என்ன ஜாதி என்று கேட்கிறார்கள்.//
  ஒரு காதல் ஜோடியை வழிமறித்து கேள்வி கேட்டதே பெரும் தப்பு.
  நாட்டின் இனம் என்பது போல் இல்லாத ஜாதியை கேட்பது.
  மக்களிடம் ஜாதியை கேட்கும் அதே தப்பை அரசும் செய்ய கூடாது.

  //அந்த கும்பல் போட்ட கோஷம்:- பாரத் மாதாகி ஜே!!!//
  கோஷம் போடுவோர் மீது எனக்கு எந்த ஒரு நல்ல அபிப்பிராயம் ஒரு போதும் கிடையாது.
  மாட்டோடு சண்டை போட்டு தமிழ் ஆண்கள் தங்களது வீரத்தை காட்ட வேண்டும் என்று மெரினாவில் நடந்த புரச்சி போராட்டத்தில் ஜூலி என்பவர் அழகாக கோஷம் போட்டதினால் வீர தமிழச்சியானார்.

  பதிலளிநீக்கு